27 05 2017 அறிந்தும் அறியாமலும்- 2: எழுத மறந்த காலம் -சுப. வீரபாண்டியன் (ஒரு முன்குறிப்பு: இத்தொடரின் தொடக்கத்தைப் பாராட்டி, இணையத்தளத்திலும், முகநூல் மற்றும் என் மின்னஞ்சல் வழியும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. ஆக்கப்பூர்வமான திறனாய்வுகளுக்கும் மிக்க நன்றி. எனினும் ஒரு சில பதிவுகள், வழக்கம்போல், "சுபவீ, கருணாநிதியின் ஜால்ரா, அல்லக்கை" என்பன போன்ற வசைபாடல்களாக வந்துள்ளன. அப்படியே நான் ஜால்ராவாக இருந்தாலும், அதற்கும், இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஆட்டத்தைப் பார்க்காமல், ஆளை ஆளைப் பார்க்கிறார்கள். ஒரு முன்முடிவோடு உள்ள அவர்கள் குறித்து நாம் கவலைப்பட முடியாது. நம் பணியைத் தொடர்வோம்.) அண்மைக்காலமாக, இளைஞர்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் சட்டைப் பையில், பேனா இருக்கிறதா என்று கவனிக்கிறேன். பலருடைய சட்டைப் பையிலும் பேனா இல்லை. சிலருடைய சட்டைகளில் பையே இல்லை.…
20 05 2014 அறிந்தும் அறியாமலும்... 1 சுப. வீரபாண்டியன் வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நான் பார்த்த, அந்த இரண்டு நிகழ்ச்சிகள்தாம், இக்கட்டுரைத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கின. ஆறேழு மாதங்களுக்கு முன்பாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா, நானா' நிகழ்ச்சியில், நண்பர் கோபி, இளைஞர்களைப் பார்த்து ஒரு வினாவை முன்வைக்கின்றார். "நீங்கள் அறிந்த வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள்". சில நொடிகள் அமைதியாய்க் கழிகின்றன. எவரிடமிருந்தும் எந்த விடையும் வரவில்லை. "ஒரு எழுத்தாளர் பெயர் கூடவா, உங்கள் நினைவுக்கு வரவில்லை?" என்று திருப்பிக் கேட்டவுடன், ஓர் இளைஞர் கை உயர்த்துகின்றார். ஒலிவாங்கியைக் கையில் வாங்கி, "எழுத்தாளர் மு.வ." என்கிறார். அந்த அரங்கில் வேறு எந்த விடையும் வரவில்லை. மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சிதான் என்றாலும், அவரும்…
29 10 2017 அறிந்தும் அறியாமலும்…(21) சூடான பனிப்போர் சுப.வீரபாண்டியன் பிரித்தானியப் பேரரசு, தன் வலிமையை இழக்கும் ஒரு தருணம் வரலாற்றில் ஏற்படும் என்ற நம்பிக்கை, அமெரிக்காவிற்கு நெடுங்காலமாகவே இருந்தது. அதற்காகவே காத்திருந்தது என்று கூடக் கூறலாம்.அமெரிக்காவில், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Massachusetts Institute of Technology) பல்லாண்டுகள் பணியாற்றி, இன்றும் அந் நிறுவனத்தின் வருகைதரு பேராசிரியராக உள்ள, உலகப் புகழ் பெற்ற, மொழியியலாளரும், அரசியல் விமர்சகருமான நோம் சாம்ஸ்கி (Noam chamsky), இது குறித்துத் தன் நூலொன்றில் விரிவாகவே கூறுகின்றார்.இதனை ட்ரூமன் கோட்பாடு (Truman Doctrine) என்று கூறும் சாம்ஸ்கி, “அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கோட்பாடு, ஒரு விபத்தாகத் தோன்றியதில்லை. அது நீண்ட வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடாகும்” என்கிறார். அட்லாண்டிக், பசிபிக் ஆகிய இரு பெரும் கடல்களால் அரணாகச் சூழப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகள் தம்முள் மோதி…