சுயமரியாதை - Yathaartham
29 10 2018 சுயமரியாதை - 44 பெரியார் வாழ்கிறார்! சேலத்தில் 27.08.1944 அன்று நடைபெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற மாநாட்டில், தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயர் 'திராவிடர் கழகம்' என்று மாற்றப்பட்டது.இப்பெயர் மாற்றம் குறித்து இன்றும் தவறான பல தகவல்கள் உலவிக் கொண்டுள்ளன. மாநாட்டின் காலை வேளையில் தமிழர் கழகம் என்றுதான் பெயர் சூட்டப்படுவதாக இருந்தது என்றும், பிறகு தமிழரல்லாத தலைவர்கள் அப்பெயரைத் திராவிடர் மாற்றிவிட்டனர் என்றும் சற்றும் உண்மையில்லாத செய்தியைச் சிலர் பரப்பி வருகின்றனர். "மதிய உணவு இடைவேளையில் சத்தியமூர்த்தி ஐயர் தொலைபேசியில் சொன்ன அறிவுரைப்படிதான் திராவிடர் கழகம் என்னும் பெயர் மாற்றம் நடந்தது. பிராமணரின் பேச்சைக் கேட்டுத்தான் பெரியார் இப்படிச் செய்தார்" என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டது 'எழுகதிர்' என்னும் மாத இதழ். என்ன வேடிக்கை…
21 10 2018 சுயமரியாதை - 43 பிறந்தது திராவிடர் கழகம் கர்ப்பத்தடையைத் தாண்டி, 'கலியாண ரத்து' (மணமுறிவு) உரிமையையும் பெரியார் வலியுறுத்தினார். இன்று மணமுறிவு என்பது சாதாரணமாகி விட்டது. குடும்ப நீதிமன்றங்களில்தான் இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ளனர். திருமணமாகிச் சில மாதங்களிலேயே நீதிமன்றத்துக்கு வந்துவிடும் இளைய தலைமுறையினரை இன்று நாம் பார்க்கிறோம். இதனையா பெரியார் விரும்பினார் என்று கேட்கலாம்.பெண்கள் எந்த உரிமையுமற்று அடிமைகளாக இருந்த அன்றைய சமூகத்தில் பெரியார் அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அப்போதும் கூட அதனை இரு பாலாருக்கும் வேண்டும் என்றுதான் அவர் கூறினார். "திருமண இரத்து என்பது, கணவன்-மனைவி ஆகியவர்களுக்கு இருக்க வேண்டிய தற்காப்பு ஆயுதம். இதைக் கொண்டு இருவருமே அடிக்கடி குத்திக் கொள்வார்கள் என்று கூறுவது அபத்தம்" (1946 செப்.4 - விடுதலை - தலையங்கம்) என்றார் பெரியார்.…
12 10 2018 சுயமரியாதை - 42 பெண்கள் மறக்கலாமா பெரியாரை? பழந்தமிழ் மன்னன் பூதப்பாண்டியன் இறந்துபட, அவன் மனைவியும் அரசியுமான பெருங்கோப்பெண்டு தீப்பாய முயல்கிறாள். சான்றோர்கள் அவளைத் தடுத்து நிறுத்த முயல்கின்றனர். அப்போது அந்த அரசி, உடன்கட்டை ஏறாமல் என்னைத் தடுப்பதன் மூலம், கைம்மைத் துன்பத்திற்கு என்னை ஆளாக்குகின்றீர்களா என்று வினவுகிறாள். "துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் அன்பனை இழந்தேன்யான் அல்லல் கொண்டழிவவோ" என்று அன்று அந்த அரசி கேட்டதைத்தான் பெரியார் இன்று நம் காலத்தில் கேட்டுள்ளார். தீயில் விழுந்து இறந்து போவதை விடக் கைம்மை நோன்பு கொடியது என்றால், பெண்களுக்குக் காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமையை என்னென்பது!கைம்மை நோன்பு பற்றி மட்டுமல்லாது, காதல், கற்பு, குழந்தை பெறுதல் உள்ளிட்ட எல்லா நிலைகளிலும், பெண்களின் பக்கம் நின்றே பெரியார் சிந்தித்துள்ளார். 'தீண்டாமை இழிவு நீங்க…
06 10 218 சுயமரியாதை - 41 இருபெரும் தலைவர்களை ஈன்ற போராட்டம் அந்த வழக்கில் பெரியாருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், மூன்றாம் வகுப்பும் வழங்கப்பட்டன. முதலில் சென்னைச் சிறை, பிறகு பெல்லாரிச் சிறை, அதன் பிறகு சேலம் சிறை என மூன்று சிறைகளில் அவர் அவர் ஆறு மாதங்களைக் கழித்தார். அவருடைய உடல் நலிவு காரணமாக 1939 மே மாதம் 22 ஆம் தேதி, எந்த நிபந்தனையும் இன்றி, அரசு அவரை விடுதலை செய்தது.அப்போது அவர் சிறையில் இருந்தது ஆறு மாதங்கள்தான் என்றாலும், அந்த ஆறு மாதங்களில் சிறைக்கு வெளியே பல மாற்றங்கள் நடந்தன. புதிய தலைவர்கள் பலரை அக்காலகட்டம்தான் நாட்டிற்குத் தந்தது. அறிஞர் அண்ணாவும் அப்போராட்டத்தில் சிறை சென்றார். தமிழகம் அவரை அறியத் தொடங்கிய நேரம் அதுதான். பொது வாழ்வில் அவர் சிறை…
29 09 2018 சுயமரியாதை - 40 கூடுதல் தண்டனை கோரிய பெரியார்! பொதுவுடைமைக் கட்சியினரின்  'அறிவுரையை' மீறித் தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தி எதிர்ப்பு என்னும் "விஷ வலையை" விரும்பி ஏற்றனர் என்பதே வரலாறு. தெருக்களில், மேடைகளில் மட்டுமின்றி, சட்டமன்றத்திலும் 1938ஆம்  ஆண்டு முழுவதும் அதே பேச்சாகத்தான் இருந்தது. குறிப்பாக, 1938 ஆகஸ்ட் 18ஆம் நாள் சட்டமன்றத்தில் பெரும் புயலே வீசியது. சர் ஏ.டி. பன்னீர்செல்வம்,அப்துல் அமீத்கான், அப்பாதுரை (பிள்ளை), கான்பகதூர் கலிபுல்லா ஆகிய நால்வரும் ஆட்சியாளர்களின் மீது கடும் குற்றச்சாற்றுகளை முன்வைத்தனர். எந்தக் குற்றவியல் திருத்தச் சட்டத்தைக் காங்கிரஸ் கட்சி1935ஆம் ஆண்டு எதிர்த்ததோ, அதே சட்டத் திருத்தத்தை இப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்குவதற்காக ராஜாஜி தலைமையிலான அரசு  கொண்டுவர முயன்றது. அதனால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி,இந்திய அளவிலேயே அது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் எதிர் கொண்டது. ரவீந்திரநாத் தாகூரும்,  ஜனாப் ஜின்னாவும் கூட அதனை எதிர்த்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி,இந்தி எதிர்ப்புப் போரை ஒடுக்குவதில் அரசு…