05 07 2020 அண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் 'கறி இட்லி' தன்னை ஓர் ஆளுமையாக தகவமைத்துக் கொள்ள இயலாதவர்கள்தான் எப்போதும் அடுத்தவர்களின் புகழ் வெளிச்சத்தின் கீழ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பார்கள். இன்னாரின் நண்பன், இன்னாரின் உறவினன், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்லி வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடிக் கொள்பவர்களால் ஒருபோதும் ஒரு சுய ஆளுமையாக தன்னை உருவாக்கிக் கொள்ள முடியாது. மேலும் அப்படிப் பட்டவர்கள்தான் தான் யாரின் பெயரைச் சொல்லி பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்களோ, அவர்களின் புகழுக்கே ஆப்பு வைத்து விடுவார்கள். கடும் உழைப்பால் அவர்கள் சேர்த்து வைத்த நற்பெயரையும் நாசம் செய்து விடுவார்கள். அது போன்ற உழைப்புறிஞ்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து களை எடுக்கவில்லை என்றால், போலிகளே உண்மைகளைப் போல கொட்டமடிக்க ஆரம்பித்து விடும். ஆனால் நிழல்கள்…
12 06 2020 ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது? இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.தமிழ்நாட்டின் பொதுப்புத்தி விதந்தோதும் எந்தக் கூறுகளையும் கொண்டதல்ல அன்பழகனின் கதை என்பதே இங்கு விசேஷம் ஆகிறது. அன்பழகன் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல; பேச்சு – எழுத்து என்று கருத்துத் தளத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் அல்ல; மக்களுக்காகப் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர் அல்ல; அரசியலில் ஈடுபட்டதால் தன்னுடைய சொத்துகளை இழந்து வீதியில் தன் குடும்பத்தை நிறுத்திச் சென்றவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால், மேலோட்ட வர்ணனைகள் மூலமாக ஒரு…
03 06 2020 தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு முக்கியமான காரணமாக இருந்தார்? தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தொழில் துறை வளர்ச்சிக்கு என்ன செய்தன என்று கேட்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் அந்நாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய உணவு அமைச்சராகவும் இருந்த சி.சுப்பிரமணியனின் சுயசரிதையைப் பரிந்துரைக்கும் பழக்கம் எனக்குண்டு. வெறும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் மட்டுமே 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை; வேலைவாய்ப்பின்மைக்கும் பஞ்சத்துக்கும் பசி பட்டினிக்கும் அதில் ஒரு முக்கியமான பங்குண்டு என்பதை அந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்!குஜராத் - தமிழகம் ஒப்பீடுபண்டைய தமிழகத்தின் வணிகப் பெருமைகளுடன் நவீனத் தமிழகத்தை ஒப்பிட முடியாது. நவீன இந்தியாவின் பொருளாதாரம் என்பது குஜராத்திகளின் பொருளாதாரம். குஜராத்திகள் குஜராத்திலும் பின்னர் மஹாராஷ்டிரத்திலும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டதால், இந்த இரு மாநிலங்களே இந்தியாவின் தொழில் துறையைக் கையில்…
15 05 2020 தமிழகத்தை அழிப்பது கொரோனாவா? அடிமை அரசா? கொரோனா நோய்த் தொற்றைக் கையாள்வதில் இந்த அரசு பெரும் தோல்வியைத் தழுவி இருக்கின்றது. ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னால் சில நாட்களில் ஆட்சியை இழந்து விடுவார் என அரசியல் நிபுணர்களால் ஆரூடம் சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய விசுவாசத்தை லேடிக்குப் பதிலாக மோடிக்கு மாற்றிக் கொண்டதால் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இந்தியாவில் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு அடிபண்ந்தால் எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கு நம் சம காலத்தின் வாழும் சாட்சியாக எடப்பாடி மாறிப் போனார். லேடி இருந்தபோது எதை எல்லாம் தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்தாரோ, அதை எல்லாம் செயல்படுத்த தமிழ்நாட்டை அகலமாகத் திறந்து வைத்து இருகரம் கூப்பி மோடியை வரவேற்றார். ஜெயலலிதாவின் ஆட்சியில் பொத்திக் கொண்டு இருந்த பார்ப்பன குள்ளநரிக் கூட்டமெல்லம் எடப்பாடி…
10 05 2020 ஈழத் தமிழர்களின் குடி கெடுத்த கருணாநிதியும், வாழ வைத்த தமிழ்த் தேசியவாதிகளும் மார்கழி மாதம் வந்தால் எப்படி நாய்களின் செய்கைகள் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு செல்லுமோ, அதே போல மே மாதம் வந்தால் தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் வண்டை வண்டையாய் திட்டுவதை கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு வாடிக்கையான நடவடிக்கையாகவே வைத்திருக்கின்றது. ஏதோ கருணாநிதியும், அவரது குடும்பமும் சிங்கள அரசுக்கு நிதியும், இராணுவ உதவிகளையும் வழங்கி ஈழ மக்களை படுகொலை செய்யச் சொன்னது போல ஒட்டுமொத்த ஈழத் துயரத்துக்கும் அவரையே பொறுப்பாக்குவதன் மூலம் இன அழிப்புக்குக் காரணமான முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கத் துணை புரிகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் ஈழப் படுகொலை நடக்கும்போது…