பார்வை - Yathaartham
24 06 2020 அபாயத்தின் உச்சத்தில் அமெரிக்கா: உலகம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United States House Committee on Energy and Commerce) முன்னிலையில் சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் அந்த அபாயத்தின் அறிகுறிகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இன்றைய தேதிக்கு அமெரிக்காவில் 24,24,492 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 1,23,476 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், அதிபர் ட்ரம்ப்போ இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் 'ஃபாக்ஸ் நியூஸ்' செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "விரைவில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட இருக்கிறது. தரமான சிகிச்சையையும் விரைவில் அடையவிருக்கிறோம்" என்று நம்பிக்கை தரும் விதத்தில் பேசியிருந்தார்…
18 06 2020 எரிமலையென வெடிக்கும் அமெரிக்க நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்கள் அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமாகிய மினிசோட்டாவின் தலைநகராக இருப்பது மினியோ பொலிசு எனும் நகரமாகும். கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு கடையில் 20 டாலர் கொடுத்து சிகரெட்டினை வாங்குகிறார் ஜார்ஜ் பிளாய்டு (46) எனும் கறுப்பினத்தவர். ஆனால் அவர் கொடுத்த பணம் போலியானது எனப் புகார் செய்கிறார் கடைக்காரர். உடனடியாக அங்கு வந்த காவலர்கள், கடைக்கு அருகில் தனது காரில் அமர்ந்திருந்த ஜார்ஜ் பிளாய்டுக்குக் கைவிலங்கிட்டு, காரின் சக்கரத்திற்கு அடியில் தள்ளி, அவரின் தொண்டையில் முழங்காலை வைத்து அழுத்துகிறான் வெள்ளையினக் காவலன் ஒருவன். இந்த வன்முறைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், பிளாய்டு கதறுகிறார். "என்னால் மூச்சு விட முடியவில்லை" எனக் கதறுகிறார். எனக்கு உதவுங்கள் எனக் கெஞ்சுகிறார். தண்ணீர் கேட்டுக் கண்ணீர் சிந்துகிறார்.…
27 05 2020 இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு! பிற மதத்தினரை படுகொலை செய்வதற்கு அவர் சொல்வது, சுத்தப்படுத்துவதாம்! அதாவது சுத்தமான இந்துத்துவா உருவாக கிறித்துவ, இஸ்லாமிய மதச் சார்பற்றவர்கள் என்கிற அசுத்தங்களை அகற்ற வேண்டுமாம்!இப்படியொரு சிந்தனையை இன்றளவும் பேசி, வெறியைத் தூண்டும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்காமல், நிலத்திற்கும், நீருக்கும் சண்டை போடுகிறவர்கள் தொழில் நடத்தி வருவாய் ஈட்டுகிறவர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார் குணா என்றால்... அவர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரோ என்கிற அய்யம் எழுகிறது. எனவே, குணாக்களிடம் தமிழர்கள் எச்சரிக்கையாய் இருங்கள். காந்தியடிகள் சென்னைக்கு வந்த முதன்முறை சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குச் சென்றபோது, இந்தியாவின் மாபெரும் தலைவரை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாது திண்ணையிலே உட்கார வைத்துப் பேசி அனுப்பினார். பார்ப்பனர் அல்லாதவர் காந்தி என்கின்ற ஒரே காரணத்திற்காக அவரை வீட்டுக்குள் விடவில்லை…
20 05 2020 காலநிலை மாற்றம்: கொரோனாவை தாண்டிய பேராபத்து - "அடுத்த தலைமுறையை காக்க இதனை செய்யுங்கள்" நம் தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் மட்டுமே, காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து சமாளிக்க முடியும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை குறைக்க பல சிறந்த வழிகள் உள்ளன. அவை அனைத்தையும் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எவ்விதமான தீவிர மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.எனவே தற்போது அரசாங்கங்கள் தான் நல்ல திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளனர். உடனடியாக பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் முதல் கடமையாக மாற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர். மொத்தம் 7000 ஆராய்ச்சி முடிவுகளை மையமாக கொண்டு காற்றில்…
24 04 2020 கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் உலகமே வீட்டுக்குள் முடங்கிப்போய், பதறிக்கொண்டிருக்கிறது. இராஜ பரம்பரை முதல், வீடற்று இருப்பவர்கள் வரை, பாரபட்சமில்லாது மனிதர்களைத் தீண்டி, பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது 'கொவிட்-19' எனும் கொள்ளை நோய்.'இன்றுளார் நாளையில்லை' எனும் நிலையாமையை, முழு உலகமுமே கண்முன்னே கண்டுகொண்டிருக்கும் இந்த நிலையின் காரணகர்த்தா, கொரோனா எனும் வைரஸ் ஆகும். சுவாச நோயைத் தரும் கொரோனா வைரஸ், உலகைப் பதறவைப்பது, இது முதன்முறையல்ல. 2003இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, 'சார்ஸ்' நோயை ஏற்படுத்தி, ஆசியாவையும் உலகத்தையும் பதறவைத்தது. 2012இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, 'மேர்ஸ்' நோயை ஏற்படுத்தி, மத்திய கிழக்கையும் உலகையும் பதறவைத்தது. தற்போது 2020இல், ஒரு வகையான கொரோனா வைரஸ், சீனாவின் வூஹானில் தொடங்கி, உலகெங்கும் பரவி, மனிதனின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கிக்…