பார்வை - Yathaartham
31 03 2025 நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? ஓர் பார்வை... நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்ந்தறிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு முன்னும், பின்னும் மாணவர் சேர்க்கை எவ்வாறு இருந்தது என்ற புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி நீட் தேர்வுக்குப் பின்னர் தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்களில் அதிகமானோர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நீட் தேர்வுக்கு முன்: 2013-14ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3267 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3251 பேர். சிபிஎஸ்இ மாணவர்கள் 4 பேர். பிறர் 12 பேர், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்க, 2014-15…
28 03 2025 யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை ஆய்வுக் கட்டுரை குறித்த அறிமுகம் பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்ட ஆளுமை கொண்டவராக குறமகள் விளங்கியிருந்தாலும் கூட அவரது மிக முக்கியமான பணி “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு” என்கிற அவரது ஆய்வு நூலே. தனது டிப்ளோமா படிப்பிற்காக எழுதிய “பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையிற் பெண்கல்வி” என்கிற கட்டுரை பெற்ற வரவேற்பும் மதிப்பீடும், பெண்ணியம் தொடர்பாக அவருக்கு இயல்பாக இருந்த அக்கறையுடன் இணைந்து இந்த நூலை எழுதுவதற்காக முதலாவது விதையாக அமைந்தது என்று குறமகள் தனது முன்னுரையில் பதிவு செய்கின்றார். இந்த நூலானது , 1.  யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை 2.…
22 03 2025 மும்மொழிக் கொள்கை ஏன் தென்னிந்தியாவை அச்சுறுத்துகிறது? மும்மொழிக் கொள்கை என்பது ஒரு சட்டம் அல்ல. இது ஒன்றிய அரசுக்குத் தெரியாதா? பின் ஏன் தமிழ்நாட்டை அது மிரட்டுகிறது? மும் மொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்தாவிட்டால், "சமக்ரா சிக்ஷா அபியான்" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியைத் தர முடியாது" என்று தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மிரட்டுகிறது! "மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தமிழ்நாட்டின் கடமை, ஏனெனில் மும் மொழிக் கொள்கை என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதி" என்றும் "நடைமுறைப் படுத்தாவிட்டால், எந்த ஒரு நிதியும் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்காது" என்றும் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் கூறுகிறார்.  மேலோட்டமாக பார்க்கும் பொழுது "மாநில அரசு, ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம்" என்று சொல்கிற போது, எப்படி…
19 03 25 ஹிந்தி வேண்டாம் போடா! இந்தியா உடையும் மூடா!- கவிஞர் கண்மதியன் எம்மொழி கற்ப தற்கும் எவர்க்கும் உரிமை உண்டே! ‘        எம்’மொழி காப்ப தற்கும் எமக்கும் உரிமை உண்டே!இம்மொழி கற்க வேண்டும் என்பது திணிப்பு தானே?        மும்மொழி என்ப தெல்லாம் முகத்தில் மூன்று கண்ணே!இரண்டு கண்கள் போதும் இன்னொன்(று) எதற்கு மூடா?  இரண்டு காதுகள் போதும் இன்னொன் (று) எதற்கு மூடா?இரண்டு கைகள் போதும் இன்னொன்(று) எதற்கு மூடா?    இரண்டு கால்கள் போதும் இன்னொன்(று) எதற்கு மூடா?மானுடம் கூறும் உண்மை மண்டையும் ஏற்றால் நன்மை!  தானெனும் அகந்தை கொண்டால் தரைக்குள் தலைபோம் தன்மை!வீணனே யாரிடம் வந்து வீணே வாதம் செய்வாய்?              ‘மானமும் அறிவும் இந்த மனிதர்க்(கு)…
16 02 25 உறவுகளும் உணர்வுகளும் (1) உறவுகள் என்பதற்கு வெறும் ‘குருதி உறவுகள்’ மட்டுமே என்ற குறுகிய பொருள் கொண்டு, குடும்பம் என்பதும் அதன் கூட்டுத் தொகையே என்று கருதிடாமல், காலத்தை வென்ற நமது நாகரிகம், பண்பாடு பறை சாற்றும் வழியில் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்! மானுடப் பரப்பை உறவுக்கு எல்லை என்று கருதி, நடந்து வந்த நமது வரலாற்றில், ‘யாதும் ஊரே – யாவரும் கேளிர் (உறவுகள்) என்ற விரிகடல் போன்ற உறவுகள்பற்றி எண்ணிய பெருமிதம், மானுட சமுத்திரத்தின் அலைஅலையாக என்றும் உள்ளன.கொள்கை லட்சிய உறவுகள் மிகவும் கெட்டியானவை அல்லவா – ரத்த உறவை விட!பள்ளி – கல்லூரி மாணவப் பருவ தோழமையும், நட்பும் – பலமான உறவுகளாக – அந்தந்த படிப்பு நிறுவனம்; தனது வகுப்புத் தோழர்களாகவோ அல்லது அந்த கல்விக்…