பார்வை - Yathaartham
கற்றல் கற்பித்தலும் தாய்மொழியின் அடித்தளமும் 05 02 2025 மொழி என்பது மனிதர்கள் தங்களது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகள் போன்றவற்றை வெளியிட உதவும் ஒரு கருவியாகும். மக்களை மாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது மொழியாகும். மொழி மனித சமூகத்தின் அடையாளமாகும். ஒரு மொழியைப் பேசுகின்ற மக்களின் சமூகம், பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பிரதிபலிப்பது சமூகவியலின் இயற்கையாகிய மொழி என்றால், கலை அறிவியல் போன்றவற்றைப் பிரதிபலிப்பது இலக்கியங்களின் மொழி எனலாம். அம்மொழியை கற்றல் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் உலகளாவிய நிலைக்கு உட்படுத்துவது கணினி மொழியாகும். சமகாலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களாகும். ஒரு மொழி பேசுகின்ற மக்களின் அகவாழ்வைப் பிரதிபலிப்பது கலை இலக்கியங்கள். புறவாழ்வைப் பிரதிபலிப்பது அறிவியல் இலக்கியங்கள். ஒரு மொழியில் உள்ள இலக்கியங்கள் அம்மொழியைப் பேசுகின்ற மானிட சமுதாயத்தின் பண்பாட்டு மரபுகள், பழக்க வழக்கங்கள், உறவு முறைகள்,…
26 08 2020 பகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்..முனைவர்.வா.நேரு,(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)சில செய்திகளைப் படிக்கிறபோது மனம் பதை பதைக்கிறது, நெஞ்சு பதறுகிறது, இப்படியெல்லாம் நிகழுமா, இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? நடக்கிறதா? அய்யகோ என மனம் அரற்றுகிறது, அழுது புலம்ப துடிக்கிறது. என்னய்யா உலகம், பச்சைக்குழந்தை தன்னுடைய அப்பாவை நம்பாமல் உலகில் வேறு யாரை நம்பும்? அவன் ஒரு மூட நம்பிக்கை பிடித்த நோயாளி என்பதனை பச்சிளங்குழந்தை எப்படிக் கண்டு பிடிக்க இயலும்? பாடங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள்-இல்லையே,ஊடகங்களில் உண்டா மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் -இல்லையே,சிரிக்க சிரிக்க பேசும் நாவல்லவர்களைக் கொண்ட ஆன்மிகப் பட்டிமன்றங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் - இல்லையே? கேள்விகளை கேட்பதை ஊக்குவிக்கும் பாடத்தையா நாம் பள்ளியிலே பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம், இல்லையே, நொடியூர் கிராமத்து பன்னீரின்…
30 07 2020 பார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வரும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.கவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவரான பால்கனகராஜ். புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "நாத்திகக் கருத்துகளை பரப்புவது போல சிலர், 'கருப்பர் கூட்டம்' என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகின்றனர். அதில், ஆபாசப் புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து இது போன்ற கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில் கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப் பெருமானிடம் மனம் உருக பாடப்படும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது தண்டனைக்குரிய குற்றம்.…
25 07 2020 சாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார்? - நேரடி கள ஆய்வு சம்பவம் 1: கொரோனா தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் இன்றைய நெருக்கடியான காலத்தில் காவல்துறையினரின் பல்வேறு சித்திரவதைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தகப்பன், மகன் என இருவர் சித்திரவதைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர்.கடந்த 18.6.2020 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைவீதியில் கடைகளை அடைக்கச் சொல்லி காவல் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்கள் ரோந்து வந்துள்ளனர். அப்போது "GG பாக்கியம் டிரேடர்ஸ் மரக் கடைக்கு" முன்பாக, கடையில் வேலை செய்து வரும் துரை என்பவரோடு சுமார் ஐந்து நபர்கள் பேசிக் கொண்டு நின்றுள்ளார்கள். அப்போது அவ்விடத்திற்கு வந்த சார்பு…
15 07 2020 மக்கள் சக்தி களமிறங்கட்டும் பெரிய சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட நகரங்கள் கரோனாவுக்கான கதவைத் திறந்துவிட்டன. தற்போது அழையா விருந்தாளியான கரோனாவை அந்த நகரங்கள் வெளியேற்ற பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வைரஸ் தற்போது பாதம் பதித்துள்ள இந்தியாவின் மற்ற பகுதிகளும் தங்களைக் காத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கின்றன. கிராமப்புற இந்தியாவும் கிழக்கு, வடகிழக்கு இந்தியாவும் இதில் உள்ளடங்கும். ஆகவே, உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப, இந்தியா முழுவதுக்குமான தற்காப்பு தேவை. பெருநகரங்கள், சிறுநகரங்கள், கிராமப் பகுதிகள் போன்றவற்றில் வெவ்வேறு அளவுக்குத் தொற்று இருப்பதால் வேறுபட்ட அணுகுமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புறத்தில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே நோயைக் கட்டுப்படுத்துவது ஒரு சவால். இந்த வைரஸ் இன்னும் அவ்வளவாகப் பாதிப்பை ஏற்படுத்தியிராத, ஆனால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஏனைய பகுதிகளைப் பாதுகாப்பது மற்றுமொரு சவால். பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட களைப்பும்,…