பார்வை - Yathaartham
20 04 2020 கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.இந்த வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. நோயாக உருவாகும் காலம்இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம்.உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த…
11 04 2020 இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு நூல்: இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு ஆசிரியர்: :பரமத்தி சண்முகம் வெளியீடு :சன்முரசுப் பதிப்பகம்,19, வேலம்மாள் 'லே அவுட்',செங்குந்தபுரம், கம்பனின் பொய்களும் முரண்பாடுகளும் தாடகை, தென்னிலங்கைப் பெருவேந்தனின் தங்கை! வீரத்தமிழச்சி. திராவிட மண் காக்கும் சிற்றரசி! பெண்ணரசியைத்தான் ஆரியத்தின் கைக்கூலிக் கவிஞனான கம்பன் கற்பனைகளில் எல்லாம் அடங்காத உவமைகளால் கொச்சைப்படுத்துகிறான். இன உணர்வோ, தன்மானமோ, பொது அறிவோ துளியும் இன்றி, நம் இனத்தின் நலங்காக்கும் நங்கையை மோசமான தன்மையில் நாசமாக்கிக் காட்டுகிறான் கம்பன். வடக்கே இருந்து தென்புலத்தில் நுழைந்து பிழைப்புத் தேடி அலைந்த ஆரியக்கூட்டம் யாகம், தவம் என்கிற பெயரால் வளம் மிகுந்த காடுகளில் புகுந்து ஆடு, மாடு, குதிரை, பன்றி போன்ற உயிரினங்களைக் கொன்று, அவற்றை வேக வைப்பதற்காக,…
26 03 2020 கொரோனாவை எதிர்கொள்வதற்கு ஒரு வரலாற்றுப் பாடம் கொரோனா நச்சுயிரி இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்மை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், இத்தகைய கொடிய நோய்களுக்கான உயிரெதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றி நாம் சிந்திக்கின்றோம். இந்த இடத்தில் மிகச் சிறந்த நுண்ணுயிரியல் ஆய்வாளர்களான மெக்ஃபெர்லான் பர்னட்டும், தாவீது வயிட்டும் (Macfarlane Burnet & David White), மனித குலத்தைத் தாக்கும் எதிர்கால நோய்களைப் பற்றி 1972-ஆம் ஆண்டு கூறியவற்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. "இனிவரும் காலங்களில் நாம் எதிர்கொள்ளப் போகும் தொற்றுநோய்களின் தன்மை குறித்து முன்னரே கணிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கும்" என்று அவர்கள் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள். அத்துடன், எதிர்காலத்தில் முற்றிலும் நாம் எதிர்பாராத வகையில் உலகம் தழுவிய அளவில், இதுவரை நாம் கண்டிராத புதிய வகை…
21 03 2020 கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு என்ன? - 7 முக்கிய தகவல்கள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றி தற்போது இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறதுகடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் தொற்றுநோயாகப் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், இப்போது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. அப்போதிலிருந்து இந்தியாவும் அதிக எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது. 1. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலை என்ன?இந்தியாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை புதிதாக இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு பாதித்திருப்பது முன்பு கண்டறியப்பட்டிருந்தது.…
13 03 2020 கொரானோ வைரஸ் கொரானோ வைரஸ் இன்றைய மருத்துவ உலகில் அதிகம் பேசப்படும் நிலையில் உள்ளது. சீனாவின் ஹீபே மாகாணத்தில் தோன்றிய இந்நோய் இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆயிரம் பேர் சீனாவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்-பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் மரணமடைந்துள்ளனர். சீனாவில் இதன் பாதிப்பு அதிகமிருந்தாலும், உலகில் வேறு எங்கும் இது பரவவில்லை. சீனாவின் 'ஹீபே' மாகாணத்தில் "வூஹான் நகரில் இவ்வைரஸ் பாதிப்பு அதிகம். பாம்பு உண்பதால் இந்நோய் வந்ததாக ஆரம்ப மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. நோயுண்ட ஒரு வவ்வாலை விழுங்கிய பாம்பை உண்ட மனிதர்களுக்கு இந்நோய் பரவியதாகவும் ஒரு கருத்து உலவுகிறது. சிலர் சீனாவின் பொருளாதார மேலாண்மையும், வளர்ச்சியும் விரும்பாத ஏதோ ஒரு நாட்டின் "உயிரியல் போர்'' (Biological War) ஆகவும் இருக்கலாம் என்கிற கருத்தும் சொல்கின்றனர். அறிகுறிகள்: தொடர்…