பார்வை - Yathaartham
03 03 2020 மதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’ இந்தியாவின் தற்கால சமூக - அரசியல் - பொருளதார நிலைமைகளையும், அதன் எதிர்கால விளைவுகளையும் பற்றி கவலைப்படுகின்ற பல நகர்ப்புற பெற்றோர்களை நான் நன்கு அறிவேன். அவர்களது கவலைகளுக்குக் காரணம் யாதெனில், இந்தியாவோடு சேர்ந்தே அவர்களது குழந்தைகளும் வளர்கின்றார்கள். இந்தியச் சமூகத்தின் தற்கால நிலை, நாட்டின் பொருளாதாரம், தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, பின்னோக்கிச் செல்லும் வாழ்க்கைத் தரம் இவை குறித்து அவர்கள் அக்கறை கொள்கிறார்கள். சுருங்கச் சொல்வது எனில், தங்கள் குழந்தைகள் எதிர்கொள்ளவிருக்கின்ற வருங்கால இந்தியாவைப் பற்றி அவர்கள் கவலைப் படுகிறார்கள். மேற்சொன்ன இந்த அம்சங்களில் இந்திய கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்களின் கவலைகள் வேறுவிதமாக இருக்கின்றன என்பது தனிச் செய்தி.எண்ணிக்கை அடிப்படையில் பார்க்குங்கால், மிகக்…
13 02 2020 ஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள் பேராசிரியர் ந.வெற்றியழகன் எம்.ஏ., பி.எட் வாழ்வியலின் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்து, நுணுகி ஆய்ந்து தம் தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை உலகுக்கு எடுத்துரைத்த தனக்குவமையில்லாத சுய சிந்தனையாளர், தந்தை பெரியார் அவர்கள்.அய்ந்தாம் வகுப்புவரைதான் படித்தவர் என்றாலும், தம் கருத்து வலுவுக்கு வேறு பேரறிவாளர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டாத மேதகு சிந்தனைச் சிகரமாக அவர் விளங்கி வந்தார்.சமயம் சார்ந்த தத்துவ அறிஞர்களாக எல்லோரும் விளங்கிய நிலையில் சமுதாயம் சார்ந்த உண்மையான ஒப்பற்ற சமூகச் சிந்தனையாளர் ஆகத் திகழ்ந்தவர் பெரியார் அவர்கள்.இணையற்ற சமுதாயச் சிந்தனையாளர் என்னும் நிலையில் தந்தை பெரியார் அவர்களின் கல்விச் சிந்தனைகளை ஆய்கிறபோது வியப்புக்குரிய சிறந்த கருத்துகள் வெளியாகின்றன. கல்வியின் நோக்கு முழுமையாக ஆய்ந்து, கல்வியின் குறிக்கோள்கள் இவை என பெரியார் அவர்கள் திட்டவட்டமாக…
28 02 2020 திருவள்ளுவர் ஆண்டு வரலாறு தமிழ் வரலாற்றுப் பெருமையைச் சுட்டும் முறையில் தமிழில் தொடர் ஆண்டு மேற்கொள்ளப்படாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.திருவள்ளுவர், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும், அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிற்கு ஆங்கில (கி.பி.) ஆண்டுடன் _ 31அய்க் கூட்ட வேண்டும். இப்போது கி.பி.1999+31=(கி.பி.2030), 2000+31=2031) வரலாற்றுக் கண்கொண்டு, தொன்மையைக் கணக்கிடும்போது கி.மு. ஆண்டு எண்ணில் 31அய் கழித்தால் கி.மு. ஆண்டு பெறப்படும். திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் முதல் மாதம் தை (சுறவம்), இறுதி மாதம்…
16 01 2020 திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம் தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன. இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துகளை, சடங்குகளை,…
13 01 2020 மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது... சமீபத்திய ஆய்வு முடிவுகள் கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங் கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, "லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்" ஒரு கட்டுரை வந்திருந்தது. How Secular Family Values Stack up என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் ((Phil Zuckerman) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறை யில் பேராசிரியராக அமெரிக்காவின் Pitzer கல்லூரி யில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள் ளார்.2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க் கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவ தில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவ…