பார்வை - Yathaartham
02 01 2020 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை  : இருபது கேள்விகளும் எமது பதில்களும் 5 கேள்வி 18: ஈ.வெ.ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்கிற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்கிற பயமா? பதில்: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது நல்ல ஓர் எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கிப் பரப்பலாமே? ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டு. பெரியாரின் மூத்த தொண்டர் ஒருவர்…
19 12 2019 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை  : இருபது கேள்விகளும் எமது பதில்களும் 4 கேள்வி 13: பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா? பதில் 13: பிச்சையெடுத்துப் பிழைக்க இந்த நாட்டுக்கு வந்து, தமிழன் கட்டிய கோயிலுக்குள் புகுந்து, ஆட்சியில் புகுந்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களில் வேலையிலிருந்து வெளியேறி விட்டு, பார்ப்பன நிறுவனங்களில் மற்றவர்களைச் சேர்ப்பதில்லை என்று முடிவு செய்யட்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் எங்கள் நிறுவனத்தில் நுழைந்து பிழைப்பீர்கள். எங்கள் மண்ணில் கொள்ளையடித்து நீங்கள் உருவாக்கியிருக்கும் நிறுவனத்தில் நாங்கள் வரக்கூடாது…
09 12 2019 எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்? "தி லான்செட்" என்ற மருத்துவ வாரப் பத்திரிக்கை 1823ஆம் ஆண்டில் தாமஸ் வேக்லி என்ற ஆங்கிலேய மருத்துவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. இன்று இது இலண்டன், நியூயார்க், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதில் மருத்துவ அறிவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அண்மையில் உலக சுகாதார நிறுவனம், பல்கலைக் கழகக் கல்லூரி, இலண்டன், திசுங்குவா பல்கலைக் கழகம், பெய்ஜிங் உட்பட உலகின் மிக உயர்ந்த 33 நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய கட்டுரை ஒன்று இதில் வெளியாகி உள்ளது. இது புது தில்லியில் 13.11.2019 அன்று பத்திரிக்கையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இக்கட்டுரையில், புவி வெப்ப உயர்வு தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், இதன் காரணமாக, உணவு…
07 12 2019 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை  : இருபது கேள்விகளும் எமது பதில்களும் 3 ஜாதிய கொடுமைகள் செய்வது பார்ப்பனர்களா? மற்ற ஜாதியினரா? கேள்வி 9: நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்கிற விவரங்கள் உங்களிடம் உண்டா? பதில் 9 : நாங்கள் என்ன காவல்துறையா நடத்துகிறோம்? இந்தக் கேள்விக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? எதனால் இக்கேள்வி கேட்கப்படுகிறது? அர்த்தமற்ற கேள்வி என்றாலும் பதில் சொல்ல விரும்புகிறோம்.முதலில் இக்கேள்விகளையெல்லாம் கேட்பதே ஒரு பார்ப்பனர்தான் என்பது எங்களுக்குப் புரியும். பெரியார் தொண்டர்கள் ஆள் அசைவை மட்டுமல்ல, அவர்கள் எழுத்தைக் கொண்டே ஆளைக் கணக்கிடுவோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் ஜாதியோடு தொடர்புடையது அல்ல.…
22 11 2019 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்! -2 பெரியார் சிலைக்கு மாலை போடுவது ஏன்? கேள்வி 6: தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் திராவிடர் கழகம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்தத் திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரச்சாரம் செய்ய தைரியமுண்டா? பதில் 6: அறியாமையின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்வி; அரைவேக்காட்டுத் தனமான கேள்வி இது.முதலில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அல்லர்; எனவே, நாங்கள் எங்களுக்காக வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனால், அரசியலில் பங்குகொண்டு வாக்கு கேட்கும் எக்கட்சியும் கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்ட கட்சியல்ல. அதனால், அதை ஒரு நிபந்தனையாக வைத்து வாக்குக் கேட்க…