பார்வை - Yathaartham
15 11 2019 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்! கடவுள் இல்லை என்றால் ஏசுவும் - அல்லாவும் இல்லை என்றே பொருள்! ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை.கேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்தக் கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள் எளிய, இளைய திராவிடர் இயக்கத் தோழராலும் கூட விளக்கமளிக்கப்படக் கூடியவையே! அப்படியொரு தோழரின் பதில்கள் கீழே! கேள்வி 1: ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே,…
08 11 2019 ஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள் நிவேதிதா லூயிஸ் 2019 அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சென்னை சி.ஆர்.பி. ஆர்ட் சென்டரில், தொல்லியல் அதிசயம் ஒன்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப் போவதாகவும், ஒளிப்படக் கலைஞருடன் ஊடக நண்பர்கள் நேரில் வரவேண்டும் என்றும் அம் மய்யத்தின் முத்திரை பதித்த லெட்டர் பேடில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தொல்லியல் அதிசயத்தை நமக்கு அறிமுகம் செய்துவைக்கப் போகின்றவர் என்று 'வரலாற்று ஆய்வாளர்' நந்திதா கிருஷ்ணாவின் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது அந்தச் செய்தி. நந்திதா கிருஷ்ணா புளூ கிராஸ் அமைப்பை நடத்துபவர்; பீட்டா போன்ற அமைப்புகளுடன் நெருங்கிச் செயல்படுபவர், 'இண்டாலஜிஸ்ட்' என்று சங்கிகளால் போற்றப்படுபவர். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அரசியல் செய்து நீர்த்துப் போகச் செய்ததில் இவரது பெரும் பங்கும் உண்டு. "காளைகள்…
04 11 2019 திருக்குறள் கூறும் பகலவன் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. இதற்குப் பொருள்: எப்படி எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் அகரம் முதன்மையாக உள்ளதோ, அதுபோல இந்த உலகத்திற்குக் கடவுள் முதன்மையாக உள்ளது என்று உரைகாரர்கள் கற்பித்து உள்ளார்கள். விஞ்ஞானப்படிப் பார்த்தால் உலக உற்பத்திக்குக் கடவுள் ஒன்று அவசியம் இல்லை. அது இயற்கையாகவே நிகழக்கூடியது என்கின்றார்கள். மற்றும் இந்த உலகமானது சூரியனில் இருந்து சிதறி விழுந்த ஒரு தீப்பிழம்பானது குளிர்ச்சியடைந்து பூமியாயிற்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். ஆகவே சூரியனே இந்தப் பூமி உண்டாவதற்கு ஆதாரமானவன்; ஆதிகாலந்தொட்டு இருந்து வருபவன் என்பதோடல்லாமல், மேல் நாட்டினரும் முன் காலத்தில் சூரியனைத் தான் வணங்கி வந்திருக்கிறார்கள்; ஆதலால் பகவன் என்பது சூரியனைத்தான் குறிக்கும். 'விடுதலை' 22.3.60 தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப்…
03 10 2019 இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகையாகப் பகுக்கப் பெற்றுள்ள நில எல்லை உலகளாவிய நிலைகளில் பொருந்திப் போகின்றது. மலையும் மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த பகுதியை முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த பகுதியை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும், மணலும் மணல் சார்ந்த பகுதியை பாலை என்றும் தமிழ் மரபில் வரையறை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதில் நானிலம் என்பது மாறி, குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை எனும் நிலம் உருவாகியுள்ளது. இவ்வாறே நில எல்லையை நானிலம் என்றும், ஐநிலம் என சூழலியல் மாறுதலுக்கு ஏற்ப இயற்கையின் இயல்பினைப் பார்க்க…
02 09 2019 பக்த கோடிகளுக்கு அத்திவரதர் எதை கொடுத்துச் சென்றார்? ஒரு வழியாக ஊடகங்களின் அத்திவரதர் அனத்தல் முடிவுக்கு வந்திருக்கின்றது. பார்ப்பனப் பத்திரிகைகள், சூத்திரப் பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் 48 நாட்களாக ஆக்கிரமித்திருந்த அத்திரவதர் நம்மை எல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு, பக்த கோடிகளை கண்ணீர்க் கடலில் மிதக்க விட்டுவிட்டு, அனந்தசரஸ் குளத்துக்குள் சயனிக்க சென்றுவிட்டார். இனி அவரைக் காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அத்திவரதர் தரிசனத்தை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அவரது பக்தகோடிகள் தொடுத்த வழக்கைக் கூட உயர்நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. எல்லா வழக்குகளிலும் சம்மந்தமே இல்லாமல், தங்களது உள்ளத்தை அரித்து தின்று கொண்டு இருக்கும் கருத்துக்களை சொல்வதற்கான மேடையாக நீதிமன்றத்தைப் பயன்படுத்தும் நீதிபதிகள் இதைப் பற்றியும் ஏதாவது திருவாய் மலர்வார்கள் என்று…