பார்வை - Yathaartham
18 11 2018 தீபாவளி கொண்டாட்டம் - தார்மீக ஒழுக்கத்தை இழக்கும் சமூகம் தீபாவளி கொண்டாட்டங்களை ஒருவழியாக முடித்துக் கொண்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள். வருடம் முழுவதும் உழைத்து சேர்த்த ஒரு பெரும் தொகை சாலை முழுவதும் பட்டாசுக் குப்பைகளாக மாறி, துப்புரவுத் தொழிலாளர்களை சித்திரவதை செய்துகொண்டு இருக்கின்றது. பட்டாசு ஆலை அதிபர்களும், துணிக்கடை அதிபர்களும், சாராய ஆலை அதிபர்களும் தங்களுக்குக் கிடைத்த கொழுத்த லாபத்தில் கிறங்கிப் போய் கிடக்கின்றார்கள். உச்சநீதி மன்றம் பட்டாசு வெடிக்க விதித்த நேரக்கட்டுப்பாட்டை மயிரளவுக்குக் கூட யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போல எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பட்டாசுகளை வெடித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட்டார்கள் இளைஞர்கள். இருப்பினும் நீதிமன்றக் குட்டுக்கு அஞ்சி, தமிழகம் முழுக்க 2372 பேர் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக…
01 11 2018 தீபாவளிப் பண்டிகை வருகுதப்பா தீபாவளி - வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய். தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்-தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும்.ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது. * * * ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்துவிட்டு உன் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ! கோபம் செய்தாலெமன் கொண்டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால்…
02 10 2018 மனிதப் பற்றாளர் தந்தை பெரியார்! ஜாதி ஒழிப்புப் புரட்சி செய்த தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் - தாழ்த்தப்பட்டோர் - உயர்ஜாதிக்காரர்கள் என்ற பிறவி பேதத்தை ஒழிக்க எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டார் என்பதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘குடிஅரசு’ இதழில் பதிவாகியுள்ள ஒரு நிகழ்வு இது.திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கிராமம் மங்கலம். 30.7.1947 அன்று காலை 9 மணிக்கு மங்கலம் கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வரவேற்பு: கே.எஸ்.ராமச்சந்திரன் தலைமை: தோழர் அருணாசல அய்யர் மணியம்மையார், என்.வி.நடராஜன் ஆகியோர் உரைக்குப் பின் தந்தை பெரியார் அவர்கள் ‘சமுதாய இழிவும் பார்ப்பனியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் பெரியார் அவர்களை நோக்கி, “பார்ப்பனர் நம்மை மதிக்காததிருக்கும்போது நம் இனத்தவரைத் தலைவராகக் கூட்டத்திற்கு வைக்காமல் ஓர் ஆரியரை நியமித்தது ஏன்?’’ என்று கேட்டார்.பெரியார்…
27 09 2018 நான் யார்? பெரியார் என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன். (‘விடுதலை’, 9.3.1956) * எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன். (‘விடுதலை’, 15.1.1955) * எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்றுபட்டபடி நடவுங்கள் என்பதேயாகும். (‘குடிஅரசு’ 24.11.1940) * நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக்…
22 09 2018 பகுத்தறிவு 09.08.1931 - குடிஅரசிலிருந்து... நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும் துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்துகொண்டு இதுதான் நபிகள் சொன்னது என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக் கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்கவேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த்தெரியாது. பக்கப் பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும். மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான்தெரியும். சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாக வுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும். அதுபோலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச்…