பார்வை - Yathaartham
27 04 2025 மூடநம்பிக்கையின் கோரம்! கோவர்தன் பூஜை எனப்படும் நிகழ்வு தீபாவளிக்கு அடுத்த நாளில் வட இந்தியாவில் நடைபெறுவது வழக்கம். இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்தபடி ஓடுகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில் ஒரு பாரம்பரிய வழிபாடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. தீபாவளியை ஒட்டி நடைபெறும் இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்து ஓடுகின்றன. இவ்வாறு பசுமாடுகளிடம் மிதி வாங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனராம்.இந்த ஆண்டு நடைபெற்ற இந்தக் கேவலமான வழிபாட்டின் காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைர லாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பிதாத்வாட் கிராமத்தில், ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வுக்காக ஏராளமான பசுக்கள் வருகின்றன.…
24 04 25 பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே மும்மொழிக் கொள்கை திணிப்பு கடந்த 15.02.25 அன்று புதிய தேசியக் கல்விக் கொள்கை, PM SHRI திட்டத்தை தமிழ்நாடு ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2152 கோடி கல்விக்கான நிதித்தொகையை தர மாட்டோம் என ஆணவத்தோடு ஒன்றிய பாஜக அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதையடுத்து தமிழ்நாடு அரசின் எதிர்வினைகளை தொடர்ந்து இந்த மும்மொழிக் கொள்கை இந்திய துணைக்கண்டம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆரியம் Vs திராவிடம் ஆரியம் பார்ப்பன ஆதிக்கத்தை வலியுறுத்துறுகிறது, திராவிடம் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆரியம் மனுதர்மத்தை சட்டமாக கொண்டு வர முயற்சிக்கிறது. திராவிடம் ஜனநாயகத்திற்கான அரசியல் சட்டத்தை வலியுறுத்துகிறது. ஆரியர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் திராவிடர்களின் தாய்மொழி தமிழ். ஆரியம் ஒரே நாடு (இந்துராஷ்டிரா)…
09 04 2025 பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே மும்மொழிக் கொள்கை திணிப்பு கடந்த 15.02.25 அன்று புதிய தேசியக் கல்விக் கொள்கை, PM SHRI திட்டத்தை தமிழ்நாடு ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2152 கோடி கல்விக்கான நிதித்தொகையை தர மாட்டோம் என ஆணவத்தோடு ஒன்றிய பாஜக அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதையடுத்து தமிழ்நாடு அரசின் எதிர்வினைகளை தொடர்ந்து இந்த மும்மொழிக் கொள்கை இந்திய துணைக்கண்டம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆரியம் Vs திராவிடம் ஆரியம் பார்ப்பன ஆதிக்கத்தை வலியுறுத்துறுகிறது, திராவிடம் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆரியம் மனுதர்மத்தை சட்டமாக கொண்டு வர முயற்சிக்கிறது. திராவிடம் ஜனநாயகத்திற்கான அரசியல் சட்டத்தை வலியுறுத்துகிறது. ஆரியர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் திராவிடர்களின் தாய்மொழி தமிழ். ஆரியம் ஒரே நாடு (இந்துராஷ்டிரா)…
06 04 2025 கடிகாரம் ஓடுமுன் ஓடு (2) தந்தை பெரியாரின் காலந் தவறாமை, காலந் தாழ்த்தாமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டான நிகழ்வுகள் உண்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் ‘மாலை மலர்’ நாளேடு அவரது 74ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஒரு வரி பதில் கேட்டு பேட்டி எடுத்து வெளியிட்டது.அதில் ஒரு கேள்வி: “பெரியாரிடம் பிடித்தது?கலைஞர் பதில்: குறித்த நேரம் தவறாமை. அவர் நன்கு அறிந்து அனுபவப்பட்டவர் – காரணம் ஈரோட்டில் குருகுலவாசம் செய்து அவரிடம் பலவற்றை கற்ற உற்ற மாணவர். அதனால்தான் மற்றொரு கேள்வி – பதிலும் இப்படி அமைந்துள்ளது போலும்! “பிடித்த விருது?” “பகுத்தறிவாளன்” என்ற விருது! இதுபோலவே மற்றொரு சந்தர்ப்பத்தில் செய்தியாளர் கேட்ட கேள்வி. “உங்களைப் பற்றி ஒரு வரியில் ஒரு விமர்சனம்” ‘சட்’டென்று பதில்: “மானமிகு சுயமரியாதைக் காரன்” கலைஞர் உழைப்பு கடுமையானது என்பதுபோலவே காலந்தவறாமையும் – காலத்தின் அருமையை…
03 04 2025 கடிகாரம் ஓடு முன் ஓடு!”(1) காலந் தாழ்த்தாது, எதையும் குறித்தபடி குறித்த நேரத்தில் செய்வது என்பது காலத்தை வெகுவாக மதிப்பது மட்டுமல்ல; நமக்கும் ஒரு வகை ஒழுங்கு கட்டுப்பாட்டினை அன்றாட வாழ்க்கைக்கு பெற்றுக் கொடுப்பதாகும்! அதன்படியான சீரிய அறிவுரையே “கடிகாரம் ஓடுமுன் ஓடு” என்பதாகும்! நான் பார்த்துக் கற்றுக் கொண்ட அப் பாடத்தை பல அரும் தலைவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறையாகவே அதனை ஆக்கிக் கொண்டவர்கள். எடுத்துக்காட்டாக, முதலில் தந்தை பெரியார் அவர்கள் – அடுத்து நூற்றாண்டு நாயகர் கலைஞர் அவர்கள்! தந்தை பெரியார் அவர்கள், வேறு பணிகள் – கூட்டங்கள், நிகழ்ச்சிகளென எதுவுமே இல்லாத போதும்கூட “நாளை காலை 7 மணிக்குத் திருச்சிக்குப் புறப்படுவோம்” என்று அம்மாவிடமோ அல்லது அருகில் இருக்கும் எங்களிடமோ முதல் நாள் கூறி விட்டால், அடுத்த நாள் அதன்படியே…