கறுப்பும் காவியும் - Yathaartham
03 05 219 கறுப்பும் காவியும் - 20 'உயரச்' சிலையின் உள் அரசியல் பெண் அடிமைத்தனத்தைக் காவி முன்மொழிய, பெண் விடுதலையை எப்படிக் கருப்பு எடுத்துரைக்கிறது என்பதை அறிவோம் என்னும் நிலையில் சென்ற பகுதி நிறைவடைந்தது. அதனை விளக்குவதற்கு முன், இன்றைய அரசியலில்நிகழ்ந்துவரும் ஓர் இன்றியமையா நிகழ்வு குறித்துப் பேசிட வேண்டியுள்ளது. உலகிலேயே மிகக் கூடுதல் உயரம் கொண்ட சிலையாக (182 மீட்டர்) வல்லபாய் படேலின் சிலை, 31.10,2018 அன்று குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது தன் கனவுத் திட்டம் என்கிறார் பிரதமர் மோடி. காங்கிரசை அழித்துவிட வேண்டும் என்று விரும்புகிற மோடிக்கு, காங்கிரஸ்காரரான பட்டேலுக்குச் சிலை நிறுவுவதில் என்ன அவ்வளவு ஈடுபாடு? அவர் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தினார் என்பதால், 'ஒற்றுமைச் சிலை' (statue of unity) நிறுவப்படுவதாகச் சொல்கின்றனர். குஜராத்காரர் என்பது இன்னொரு காரணம். இரண்டுமே உண்மையாக…
26 04 2019 கறுப்பும் காவியும் - 19 பெண்களுக்கும் பூணூல் உண்டாம்! சாதி முறையை இந்து மதம் எப்படி ஏற்றிப் போற்றுகிறது என்பதைக் கீதையிலும், இந்துமதத் தத்துவாசிரியர் என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நூல்களிலும் பார்த்தோம். சாதி அடிப்படையில் மட்டுமின்றி, பாலின அடிப்படையிலும், இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. மதத்தின் அடிப்படை சாஸ்திர நூல்களே அதனை ஏற்கவில்லை. பிற மதங்களிலும், நடைமுறையில் சமத்துவம் பேணப்படவில்லை. சென்ற பகுதியில், அனைத்துச் சாதியினருக்கும் பூணூல் உண்டா, பார்ப்பன வகுப்பிலேயே பெண்களுக்குப் பூணூல் உண்டா என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். அதற்கு, "உண்டு என்று சங்கராச்சாரியார் கூறியுள்ளார். அதனை எல்லாம் படிக்காமல் நீங்கள் எழுத வந்துவிட்டீர்கள்" என்று ஒருவர் எனக்குச் செய்தி அனுப்பியிருந்தார். உண்மைதான். மங்கள சூத்ரம் (தாலி) என்பது பெண்களுக்குப் பூணூல் மாதிரித்தான் என்று சங்கராச்சாரியார் தன் நூலில்…
18 04 2019 கறுப்பும் காவியும் -18 எது குணம்? யார் தீர்மானிப்பார்கள்? பகவத் கீதை தொடர்பான ஒரே ஒரு செய்தியை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு, அடுத்த இடம் நோக்கி நகரலாம். வருணம் என்பது குணத்தின் அடிப்படையில்தானே தவிர, பிறப்பின் அடிப்படியில் என்று கீதையில் கூறப்படவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட முடியாது, கூடாது. ஒரு நூலில் உள்ள சொற்களுக்கும், அவை நடைமுறையில் உணர்த்தும் பொருளுக்கும் இடையில் உள்ள இமாலய வேறுபாட்டை எப்படி மறப்பது? குணத்தின் அடிப்படையில்தான் வருணம் என்றால், குணம் மாறும்போது வருணம் மாறுமா? எங்காவது மாறியுள்ளதா? மதம் மாற முடியும், நாடு விட்டு நாடு கூட மாற முடியும், ஆண் கூடப் பெண்ணாக மாற முடியும். ஆனால் சாதி மட்டும் மாறவே முடியாது என்றால் அது…
11 04 2019 கறுப்பும் காவியும் - 17 சதுர் வருணம் மயா சிருஷ்டம் மீண்டும் வருண வேறுபாட்டை நாட்டில் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே இன்று மத்தியில் உள்ள பாஜக அரசு கீதையை உயர்த்திப் பிடிக்கிறது. பகவத் கீதைக்காகச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவையும் பாஜக அரசு எடுத்தது. பகவத் கீதையின் 5161ஆம் ஆண்டு விழா என ஒன்றைக் கொண்டாடி, அதில் அசோக் சிங்கால் ஆற்றியுள்ள 'வரலாற்றுப் புகழ் மிக்க' உரையில், அவர் கீதை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 'இந்துக்களின் புனித நூலான' கீதையை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார். அவ்விழாவில் பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் பொன்மொழிகளை அங்கு உதிர்த்துள்ளார். "எப்போது ஒபாமாவைச் சந்தித்தபோது கீதை நூலை மோடி அவரிடம் கொடுத்தாரோ, அப்போதே…
05 04 2019 கறுப்பும் காவியும் - 16 கண்ணா கருமை நிறக் கண்ணா மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை. ஆனால் மகாபாரதத்தின் கண்ணனுக்கும், கீதையின் கண்ணனுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! மேற்காணும் இரு நூல்களிலும் கண்ணன் எப்படிக் காட்டப்பட்டுள்ளார் என்னும் செய்திகளை பார்க்க வேண்டும். எவ்வாறு இந்துத் தத்துவம் பற்றிய செய்திகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலிலிருந்து மேற்கோள்களாகத் தரப்பட்டதோ, அவ்வாறே, மகாபாரதச் செய்திகள் ராஜாஜி அவர்களின் உரையிலிருந்தும், பகவத் கீதைச் செய்திகள் பக்தி வேதாந்த பிரபு பாதர் நூலிலிருந்தும் இங்கு தரப்பட்டுள்ளன. கண்ணன் அவதாரம் என்று கூடச் சொல்லக்கூடாது, அவரே முழுமுதற் கடவுள் என்கிறார், கீதைக்கு உரை எழுதியுள்ள பிரபு பாதர். "அவர் (ஸ்ரீகிருஷ்ணர்) மிகச் சிறந்த மனிதர் என்று கூட எண்ணக்கூடாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாவார்" என்கிறார் அவர். ஆனால் மகாபாரதமோ,…