கறுப்பும் காவியும் - Yathaartham
15 02 2019 கறுப்பும் காவியும் -10 இந்துமத ஒருங்கிணைப்பு ஆன்மிக அரசியல் தமிழ்நாட்டிற்குப் புதியதன்று. ஆனால் அது தமிழ்நாட்டில் வெற்றி பெறாத அரசியல் தமிழ்நாட்டு மக்கள் ஆன்மிக உணர்வுடையவர்கள், மத நம்பிக்கை கொண்டவர்கள், கடவுள் வழிபாட்டாளர்கள். ஆனால் அந்த அடிப்படையில் அரசியலை அவர்கள் மேற்கொண்டதில்லை என்பது ஒரு பெரும் வியப்பு! இரண்டு முறை ஆன்மிக அடிப்படையில் தமிழக அரசியலைக் கைப்பற்றக் காவிகள் முனைந்தனர். இரண்டு முறையும் அவர்களுக்குப் பிள்ளையாரே துணை நின்றார். எனினும் இறுதியில் அவர்களின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. 1970 அக்டோபர் மாதம் சென்னை, தியாகராயர் நகர் பகுதியில் தோன்றிய ஒரு "திடீர்ப் பிள்ளையாரும்", 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் "பால் குடித்த பிள்ளையாரும்" தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். திடீர்ப் பிள்ளையார் செய்தியாவது இந்தியா வரைதான் பரவிற்று. ஆனால் ஊடக வளர்ச்சி…
08 02 2019 கறுப்பும் காவியும் - 9 பார்ப்பனர் பார்ப்பனர், பிராமணர் என்னும் சொற்கள் குறித்த பார்வை இன்றைய சூழலில் மிகத் தேவையானதாகவே உள்ளது. எந்த விவாதமும் யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பது தெளிவானால்தான், எல்லோருக்குமானதாக இந்தத் தொடர் அமையும். பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை என்று கூறியிருந்தேன். பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள். சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடல் "பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து படிவ உண்டிப் பார்ப்பன மகனே" என்று அமைந்துள்ளது. மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.…
01 02 2018 கறுப்பும் காவியும் 8 இந்துக்களின் எதிரியா? திராவிட இயக்கத்தினரையும், தி.மு.கழகத்தையும் இந்துக்களின் எதிரிகள் என்று நிலைநிறுத்தி, அதன்மூலம், தேர்தல் அரசியலில் தி.மு.கவைத் தோற்கடித்து விடலாம் என்பது பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்களின் திட்டம். கடவுள், மதம், பகுத்தறிவு போன்றவற்றில், திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களுக்கும், தி.மு.கழகத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. தி.மு.க. என்பது தேர்தலைச் சந்திக்கும் வெகுமக்கள் கட்சி. எனவே அதற்கு ஓர் எல்லை உண்டு. திராவிடர் கழகத்தைப் போல மிக வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் திமுக வைத்துவிட முடியாது. அதே நேரத்தில், சுயமரியாதைக் கருத்துகளை திமுக விட்டுக் கொடுத்ததும் இல்லை. திமுக வில், இறை நம்பிக்கையாளர்கள், பகுத்தறிவாளர்கள் இருவருமே உண்டு. இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்கலாம். இன்றைய நிலையில், திமுக பார்ப்பன எதிர்ப்புக் கட்சியன்று. ஆனால், நூற்றுக்கு நூறு…
11 01 2019 கறுப்பும் காவியும் - 7 பசுவதை இந்தியா முழுவதும் தங்கள் கட்சியைப் பரப்புவதற்குக் காவிகள் கைக்கொண்ட இன்னொரு ஆயுதம் பசுவதைத் தடை. நெடுங்காலமாகவே பசுவதைத் தடைச் சட்டம் வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தாய் அமைப்பான இந்து மகா சபை, அதற்கும் முந்திய அபிநவ பாரத் சமிதி (புத்திளைஞர் இந்திய சங்கம்), மித்ர மேளா (நண்பர்கள் கழகம்) ஆகிய அனைத்து அமைப்புகளும், இந்தப் பசுப் பாதுகாப்பு, பசுவதைத் தடை ஆகியனவற்றைத் தங்களின் வேலைத் திட்டத்தில் தவறாமல் கொண்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இந்துத்துவவாதிகள் இதனைத் தொடங்கிவிட்டனர். இந்துக்கள் தாயாகவும், தெய்வமாகவும் பசுவை வணங்குகின்றனராம். ஆனால் கிறித்துவர்கள் மாட்டிறைச்சி உண்ணுபவர்கள், இஸ்லாமியர்களோ, மாட்டினை வெட்டுபவர்கள் என்று சொல்லி இரு மதத்தினர் மீதும் வெறுப்பை வளர்ப்பதற்கே பசுவதைத் தடையை அவர்கள்…
04 01 2019 கறுப்பும் காவியும் - 6 முத்தலாக் பொதுக் குடிமைச் சட்டம் (Uniform Civil Code) என்பது, எந்த ஒரு மதத்தினரும், தங்கள் நம்பிக்கை, தங்கள் மார்க்கம் ஆகியனவற்றைப் பொருத்திப் பார்க்க இயலா வண்ணம், ஒரே சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்னும் ஆணை. குறிப்பாக, திருமணம், மணமுறிவு, தத்து எடுத்தல், வாரிசுரிமை ஆகியனவற்றில் மதத்திற்கு மதம் மாறுபட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரே சட்டத்தை, அதாவது இந்துக்களின் சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்வதுதான் அது. பொதுவெளியில் பொதுக் குடிமைச் சட்டம் என்று கூறினாலும், இந்துக் குடிமைச் சட்டம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவைகளை ஒழித்து விடுவதே உள்ளார்ந்த நோக்கமாகும். மத மறுப்புத் திருமணங்கள் நடைபெறுமானால், அவற்றிற்கான பொதுச் சட்டம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. 1954 ஆம்…