கறுப்பும் காவியும் - Yathaartham
26 12 2018 கறுப்பும் காவியும் - 5 இந்து முன்னணி தர்மம் காக்க, அதர்மம் அகற்ற என்னும் முழக்க வரிகளோடு கூடிய ஒரு கோயில் கோபுரமும், அதன் நடுவே இரண்டு வாள்களுமாய் அமைக்கப்பெற்ற முத்திரையுடன் இந்து முன்னணி தமிழக மண்ணில் பிறந்தது. இராம கோபாலன் அதன் நிறுவனத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.தர்மம் என்பது வருணாசிரம தருமமே என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருண தருமத்தை, ஆயுத வலிமை கொண்டு நிலைநாட்டுவோம் என்பதே அந்த முத்திரையின் அறிவிக்கப்படாத உட்பொருளாக இருந்தது. வலதுசாரி இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் வன்முறையின் மூலமே தம் கருத்தைக் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடையவை. அதன் தொடக்க காலத்திலிருந்தே அதற்கான ஆதாரங்கள் உண்டு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் ஒரு தாய் இயக்கம் உண்டு. அதற்கு இந்து மகா…
19 12 2018 கறுப்பும் காவியும் - 4 மீனாட்சிபுரம்               மண்டைக்காட்டில் திடீரெனக் கலவரம் தொடங்கக் காரணம் என்ன? பிற மதத்தினர் மீது கரணம் இல்லாமல் ஏன் இந்துக்கள் கோபம் கொள்ளப்  போகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் நியாயமானவையே! அவர்களுக்கு ஒரு காரணம் இருந்தது. அடிப்படையில் அது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கோபம். ஆனால் கிறித்துவர்களுக்கு எதிராக மையம் கொண்டுவிட்டது.  நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் மீனாட்சிபுரம் என்றொரு சிற்றூர். அவ்வூர் 1981 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் உற்றுக் கவனிக்கப்பட்ட  ஊராக ஆகிவிட்டது. அங்கு நடந்த மதமாற்றம் அதற்குக்  காரணம். அந்த ஊரில் ஏறத்தாழ 220 தலித் குடும்பங்கள் இருந்தன. அவற்றுள் 180 குடும்பங்களைச் சேர்ந்த  மக்கள் ஒரே நாளில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டனர். அது…
12 12 2018 கறுப்பும் காவியும் -3 மண்டைக்காடு  நான் முன்பு குறிப்பிட்ட நான்கு இயக்கங்களில், காங்கிரஸ் தவிர, மற்ற மூன்று இயக்கங்களும் 1915-25 காலகட்டத்தில் இங்கு தோன்றியவை. பொதுவுடைமை இயக்கம், வெளிநாட்டில் தோன்றி, இங்கு பரவியது. திராவிட இயக்கம் தமிழகத்திலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாக்பூரிலும் தோன்றின. இவ்விரு இயக்கங்களும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் சித்பவன் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, இந்துக்களுக்கான இயக்கம் என்னும் பெயரில் அது உருவானது. திராவிட இயக்கமோ, மறுமுனையில், பார்ப்பனர் அல்லாதோரால் மட்டுமே உருவாக்கப்பட்டது. 1912-13 திராவிடர் சங்கம் என்னும் பெயரிலும், 1916க்குப் பிறகு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) என்னும் பெயரிலும் அதுநடைபெற்றது. அக்கட்சியின்  முதல் அறிக்கையே "பார்ப்பனரல்லாதோர் அறிக்கை" (Non-brahmin Manifesto) என்றுதான் பெயரிடப்பட்டது. தமிழர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, திராவிடர்களுக்கான இயக்கம்…
02 12 2018 கறுப்பும் காவியும் - 2 கறுப்பாய் வீசிய காற்றின் பெயர் திராவிட இயக்கம். அதற்கு எதிர்க்காற்றும் வீசத் தொடங்கியது. அதன் நிறம் காவியாய் இருந்தது. இன்றைய சமூக அமைப்பு மாற வேண்டும் என்பது கறுப்பின் கொள்கை. இந்த அமைப்பை மாற்றவே கூடாது என்பது காவியின் பிடிவாதம். இடதுசாரி, வலதுசாரிக் கொள்கைகளின் பிறப்பிடம் இது என்று கூறலாம். ஆம், நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி வலப்புறம் அமர்ந்திருக்கும். எதிர்க்கட்சிகள் இடப்புறம் அமர்ந்திருப்பர். இந்த ஆட்சியோ, இந்த  அமைப்போ தொடர வேண்டும் என்பது வலதுசாரிக் கொள்கை. ஆட்சியும் அமைப்பும் மாற வேண்டும் என்பது இடதுசாரிக் கொள்கை. இப்போது நாங்கள் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுநிலை என்று பேசும் கட்சிகள் தமிழ்நாட்டில் தோன்றியுள்ளன. இந்தக் கொள்கை, இந்த சித்தாந்தம் இவற்றிற்காகத்தான் எங்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று தெளிவாகச் சொல்கிறவர்கள் இல்லை.…
20 11 2018 கறுப்பும் காவியும் - 1 வெற்றிடம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, தமிழ் நாட்டின் சமூக அரசியல் தளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.காலில் கிடக்கவேண்டிய செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, கூனிக் குறுகி மனிதர்கள் நடந்த காலம் அது. எழுபது வயதுப் பெரியவரை 'ஏன்டா முனியா' என்று ஏழு வயது சேஷாசலம் அழைத்தால், அது கண்டு கோபம் கொள்ளாத காலம் அது. மாடுகளை மேய்த்துக்கொண்டு நம் நாட்டிற்குள் வந்தவர்கள், நம்மைப் பார்த்து, "அபிஷ்டு, நோக்கெல்லாம் படிப்பு வராது, நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று கரித்துக் கொட்டிய காலம் அது. "பொம்பளைக்கு செருப்பு ஒரு கேடா?' என்றும், "பாருங்கோ, அந்த பொம்மனாட்டி ஆம்படையானோட ஒட்டி ஒரசி நடந்து போயிண்டிருக்கா!" என்று ஒரு பெண் தன்கணவனோடு நடந்து போவதைப் பார்த்து அவதூறு பேசியும் திரிந்த காலம்…