கறுப்பும் காவியும் - Yathaartham
22 03 2019 கறுப்பும் காவியும் - 15 எழுதக் கூசும் கதைகள் கறுப்பு நிற மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிறத்திலேயே ஒரு கடவுள் அவதாரத்தை உருவாக்கி, அந்த அவதாரத்திற்குக் கிருஷ்ணர் என்று பெயர் சூட்டினர். கிருஷ்ணன் என்றாலும், கண்ணன் என்றாலும் கருப்பன் என்றுதான் பொருள். கடவுள் அவதாரத்தைக் கறுப்பாக உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? புத்த மதம் பரவத் தொடங்கிய பின்னர், பார்ப்பன ரல்லாதார் (கறுப்பு மக்கள்) அம்மதத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். இவர்கள் நிலைநாட்ட விரும்பிய நால்வருண அமைப்பைப் புத்தமதம் தகர்க்கத் தொடங்கியது. இதனை, "பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்" (Revolution and counter revolution in ancient India) என்னும் தன் நூலில் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருப்பார். "(புத்த மதக் கொள்கைகளால்) சதுர்வருணத்தின் அடிப்படையே உடைக்கப்பட்டது. சதுர்வருணத்தின் அமைப்புமுறை…
15 03 2019 கறுப்பும் காவியும் - 14 "கறுப்புக் கடவுள்" ஒருவன் எந்த வருணத்தில் பிறந்தவன் என்று முத்திரை குத்தப்படுகின்றானோ, அதே வருணத்திலேயே வாழ்ந்து, வளர்ந்து மடிந்து போக வேண்டும். இந்த வருணப் பாகுபாடு, தலைமுறை தலைமுறையாகத் தொடரும். இதுதான் உண்மை. ஆனால் இந்த உண்மை அச்சுறுத்துவதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகச் சில சமாதானங்கள் கவனமாகக் கூறப்பட்டுள்ளன. வருணம் என்பது பிறப்பினால் இல்லை, சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்களால் (sattuva,rajas, tamas Gunas) தீர்மானிக்கப்படுவதால், மேலேறவும், கீழிறங்கவும் வாய்ப்புகள் உள்ளன என்று மனு கூறுவதாக ராதாகிருஷ்ணன் சொல்கிறார் ("Manu admits the possibility of ascent and decent"). அந்த வாய்ப்புகள் கூட அவாள் மூவருக்கும்தான். நான்காவது குணம் பற்றி பேச்சே இல்லை பாருங்கள். நம் பழைய திரைப்படப் பாடல் ஒன்று கூட, "கல்வியா, செல்வமா,…
08 03 2019 கறுப்பும் காவியும் - 13 இழிவுபடுத்தப்படும் "இந்துக்கள்" டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் நூல்களிலிருந்து நான் சான்று காட்ட விரும்புவதற்குத் தக்க காரணம் உண்டு. தத்துவத் துறையிலும், இந்தியத் தத்துவம் குறித்தும், உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் பலர் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளனர். தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, எஸ். என். தாஸ்குப்தா, ஜாதுநாத் சின்ஹா, எம். ஹிரியண்ணா, பி. டாய்சன், ராகுல் சாங்கிருத்தியாயன் ஆகியோர் இந்தியத் தத்துவ இயல் பற்றிய நூல்களை எழுதியுள்ளனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரும் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளனர். எனினும், அன்று தொட்டு இன்று வரையில், இந்துத்துவ ஆதரவாளர்கள், வலதுசாரிச் சிந்தனையாளர்கள் பலர் உயர்த்திப் பிடிப்பதும், மேற்கோள்கள் காட்டுவதும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய நூல்களைத்தான்!. எனவே நாமும், அவருடைய நூல்களிலிருந்தே சான்றுகளைக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அவர்…
01 03 2019 கறுப்பும் காவியும் -12 இந்து தர்மம் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நாடெங்கும் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. 'பிள்ளையார் பால் குடிக்கிறார்' என்பதே எங்கு பார்த்தாலும் பேச்சாக இருந்தது. 1970களில் இந்தியாவிற்குத் தொலைக்காட்சி வந்துவிட்டது. 1990களில் தனியார் தொலைக்காட்சிகளும் வரத் தொடங்கிவிட்டன. எனவே பிள்ளையார் பால் குடிப்பது காட்சியாகவே மக்களுக்குக் காட்டப்பட்ட்டது. ஒரே நாளில் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஈழவயல்' என்னும் ஏடு, இங்கும்மக்கள் கையில் பால் எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோயில்களுக்கு ஓடுகின்றனர். எல்லா இடங்களிலும் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது. இவ்வளவுக்கும் அப்போது அங்கே போர் நடந்து கொண்டிருந்தது. அந்தப் போரில் தமிழர்களைக் காக்காத பிள்ளையார், பால் குடிக்க மட்டும் தவறவில்லை. பிறகு 2006இல்,…
22 02 2019 கறுப்பும் காவியும் - 11 "திடீர்ப்" பிள்ளையார் தலைவர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, 1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் அதிகாலை 3.30 மணியளவில், சென்னை, மாம்பலம் பகுதியில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. வானில் ஒரு பெரிய ஒளியும் தெரிந்ததாகப் பிறகு சிலர் கூறினார். நிலத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருக்க, அங்கு திடீரென ஒரு பிள்ளையார் சிலை வந்திருந்தது. பொழுது விடிவதற்குள், மக்கள் கூட்டம் கூடிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் பலரும் வந்து சேர்ந்தனர். மக்களோடு சேர்ந்து, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் விஸ்வநாதனும், "அது ஒரு சுயம்பு பிள்ளையார்தான்" என்றார். யாரும் கொண்டுவந்து வைக்காமல், தானே ஒரு "கடவுள் சிலை" தோன்றினால், அதற்குச் சுயம்பு என்று பெயராம். எனவே இது சுயம்பு விநாயகர். அன்று உதவி…