10 07 2020 பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு!நக்கீரன் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பார்கள். நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தத் திருப்பணியைத்தான் முதலமைச்சராக வந்த நாளிலிருந்து செய்து கொண்டிருந்தார். இப்போதும் செய்கிறார்.2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க 'வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்" என்று அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரட்டை அர்த்தத்துடன் கொழும்பில் இருந்து ஒரு அறிக்கை விட்டார்.…
30 06 2020 எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்! மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்குச் சிங்களத்தில் கொடுத்த நேர்காணல் பற்றிய வாதம், எதிர்வாதம் நின்ற பாடில்லை..Colombo Telegraph என்ற இணையதளத்தில் ததேகூ பேச்சாளர் சுமந்திரன் ததேகூ இல் இருந்து உடனடியாக விலக வேண்டும் (TNA Spokesperson Sumanthiran Should Resign From…
07 06 2020 உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப்…
25 02 2020 அடுத்த தேர்தலில் தமிழர்கள்   இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம்.ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால்…
06 02 2020 தமிழ்த் தேசிய அரசியலுக்குச் சோதனை விஞ்ஞானத்தில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து விடயங்களிலும் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.அதேபோன்றுதான், அரசியலிலும் சோதனைகள், சாதனைகள், வெற்றிகள், தோல்விகள் சாதாரணமானவை; இவை தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.இவை அரசியலில் வெறுமனே, தேர்தல்களுக்கு மட்டுமானவை இல்லை; ஆனால், இப்போதைய காலச்சூழலில் இந்தச் சோதனை முயற்சிகள் தேர்தல்கானவையாகவே மாறியிருக்கின்றன. இதில் நகைச்சுவை என்னவென்றால், இலங்கையில் தமிழர் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்துக்கு…
30 11 2019 தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா? தேர்தலுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, தத்தம் தரப்பு நியாயங்களைப் பட்டியல்படுத்தி, அவற்றை மெய்ப்பிப்பதற்கான முயற்சிகளில், ஏட்டிக்குப் போட்டியாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறத. இவை யாவும் 'அறிக்கை அரசியல்' என்ற பழைய மொத்தையில் கள்ளருந்தும் கலாசாரமாகவும் புளித்துப்போன உப்புச்சப்பற்ற வியாக்கியானங்களாகவுமே காணப்படுகின்றன.இத்தகைய போக்குகள், தமிழ்த் தேசிய இருப்பின் ஊடாகச் சமகால அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் ஒரு…