வளர்ச்சி வரலாறு - Yathaartham
22 08 2019 மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி 3) குல தெய்வங்கள் இறந்தோர் நினைவாகக் கல்நடுவதும், நடுகல் எனப்படும் அவற்றை வழிபடுவதும் - பண்டைய வழக்கம்.நடுகல்லாய் நிற்கும் முன்னோரைக் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் அன்றைய மக்கள் கருதினர்.ஒரு குலத்துப் பிறந்தோரைப் பங்காளிகள் என அடையாளம் காணவும் தமக்குள் மணவுறவு நேராமல் தடுத்துக் கொள்ளவும் குலதெய்வ வழிபாடு உதவியது. குலத்தலைவர்கள் ஊர் காத்த வீரர்கள் தீயில் புகுந்து உயிர்விட்ட பத்தினிப் பெண்டிர் முதலிய முன்னோரை வழிபட்ட வழக்கமே - குலதெய்வ வணக்கமாக இன்றும் தொடர்கிறது. பக்தியின் தொடக்கம் பழங்கால மக்கள் - தத்தம் குலக்குறியை மனிதனுக்கு மீறிய ஆற்றலாகக் கருதி, அதனிடம் பக்தி கொண்டனர்.பழங்கால மக்கள் இயற்கையுடன் கொண்ட தொடர்பினால் விலங்கு, செடி, கொடி என இயற்கைப் பொருள்களைத் தம் பாதுகாவலராகக்…
18 07 2019 மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி 2) மாற்றம் பலி கொடுத்தல் முறை - இப்போது மாறிவிட்டது. உயிர்பலி கொடுப்பதற்கு மாறாக - குங்குமம் பூசிய பூசணிக்காயையோ எலுமிச்சம் பழத்தையோ வெட்டிக் குருதி சிந்துவதுபோல் காட்டப்படுகிறது.அம்மை நோய் வந்தால் மாரியம்மன் - கோவில் பூசாரிக்கு இளநீர், பனங்கற்கண்டு, கோழி, ஆடு எனப் பூசைப் பொருட்களும் காணிக்கைகளும் முன்பு குவியும்; இன்று மறைந்துவிட்டது.தூய சைவர்கள் கூட அச்சம் காரணமாக ஆடு, கோழி பலி கொடுத்து இறைச்சியைப் பிறருக்கு வழங்கிவிடுவது அன்றைய வழக்கம்.சுடலை, மாரி, சூலக்கல் மாரி - என ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தெய்வங்கள், இன்று மக்களின் நினைவிலிருந்து மறைந்துவிட்டன. அய்யப்பன், ஆதிபராசக்தி, மூகாம்பிகை முதலிய புதிய தெய்வ வழிபாடுகள் இப்போது அறிமுகமாகியுள்ளன.தாயின் வயிற்றிலிருந்து நாம்…
11 07 2019 மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி –1 கோவில் வாழ்வு மனித இனம் கடந்து வந்த காலடிச் சுவடுகளை அறிய விரும்பும் எவரும் கோவில்களைப் புறக்கணித்துவிட்டு, உண்மை காண இயலாது, வழிபடுவது வேறு; வரலாற்றைக் காண்பது வேறு. நம் முன்னோரின் வாழ்வும் வளர்ச்சியும் கனவும் முதிர்ச்சியும் வீழ்ச்சியும் சாதனையும் - இன்றளவும் கோவில்களில் தான் வீற்றிருக்கின்றன. கோவில்கள் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல. கலை, பண்பாடு, வரலாறு, சமுதாயம், அரசியல் - அனைத்தின் வேர்களும் கோவிலோடு பின்னிக் கிடக்கின்றன. கோவில் வரலாறு தமிழ்நாட்டில் முன்பு கற்கோவில்களே இல்லை. செங்கற்களினாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட கோவில்களே இருந்தன. பல்லவ மன்னர்களே முதன் முதலாகக் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கற்கோயில் அமைத்தனர். பல்லவர்களைப் பின்பற்றி, ஊர்தோறும் கற்கோவில்களை எழுப்பத் தொடங்கினர். முதற் கோவில்…