வரலாறு - Yathaartham
18 10 2018 இந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல! தமிழர் என்றால் அவரது மொழி தமிழ், அவரது இனம் தமிழினம்.மலையாளி என்றால் அவரது மொழி மலையாளம், அவரது இனம் மலையாள இனம்.இதே போல கன்னடர், தெலுங்கர், குஜராத்தி, வங்காளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, மராத்தி, காசுமீரி, அசாமி என இந்தியர் என வகைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தனித்த இனங்களாக அவர்களது மொழியால் அடையாளம் காணலாம். இந்த அளவுகோலின் படி இந்தியர் என்ற அடையாளம் ஒரு மொழிவழிப் பட்ட தேசிய இனம் அடையாளம் அல்ல என்பது தெளிவு.இது பற்றி தோழர் கார்முகில் அவர்கள் தனது "இந்தியாவில் தேசியப் பிரச்சனையும், ஜனநாயகப் புரட்சியும்" என்ற ஆய்வு நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் "இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்திற்கு இடம் இருக்க முடியாது. இங்கு பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற வேறுபட்ட பண்படுகளையும்,…
15 09 2018 பெரியாரும் வ.உ.சி.யும் சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு பூணூல் மட்டும் முதுகிலே தொங்கி இருக்குமேயானால், அவரது சிலை மூலைக்கு மூலை வைக்கப்பட்டு இருக்கும், அவரது படம் ஒவ்வொரு அக்கிரகாரவாசிகள் வீடுகளிலும் மாட்டப்பட்டிருக்கும். அவர் பேரால் மண்டபங்கள், மனைவி, பிள்ளை குட்டிகளுக்கு பதவி வாழ்க்கை வசதிகள் எல்லாம் கிடைத்து இருக்கும்.- தந்தை பெரியார் ‘விடுதலை’ - 13.5.1961 ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல்…
22 07 2018 தமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து... தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார். போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த ஆதரவும் இல்லாததாலேயே இருண்டகாலம் எனும்…