வரலாறு - Yathaartham
08 03 2020 டாக்டர் சி.நடேசனார்  நினைவு நாள்: 18.2.1937 நீதிக்கட்சியின் பிதாமகர்கள் என்று போற்றப்படுபவர்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோராவர். நீதிக்கட்சியின் தோற்றுவாய்க்கு மூலவித்து டாக்டர் சி.நடேசனார். சென்னை - திருவல்லிக்கேணி பெரிய தெருவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அந்தப் பெருமகனால் 1912இல் துவக்கப்பட்டதுதான் திராவிடர் சங்கம் (Dravidan Association) என்பதாகும்.அந்தக் காலத்தில் கல்லூரியில் படிக்க வேண்டுமானால் வந்துசேர வேண்டிய இடம் சென்னைதான். பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் விடுதிகள் கிடையாது. பார்ப்பனர் உணவு விடுதிகளில், பார்ப்பனர் அல்லாதவர் எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடலாம்; ஆனால், தங்கிச் சாப்பிட முடியாது! எவ்வளவு பெரிய கொடுமை! கொடுமை!!அந்த நேரத்தில் டாக்டர் சி.நடேசனார் அவர்கள் திராவிடர் இல்லம் (Dravidan Home) என்ற விடுதியைத் துவக்கினார். அந்தக் காலகட்டத்தில் பாலைவனத்தில் கிடைத்த சோலை அது…
26 08 2019 இந்தியா ஒரு குடிஅரசா? பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா? இந்தியாவில் இன்று 130 கோடி மக்கள் இருக் கிறார்கள்.இவர்கள் பேசும் மொழிகள் 1620க்கு மேல் உள்ளன.இவர்கள் பேசும் மொழிகளில் பலவும் 3,000 ஆண்டுகளாகப் பேச்சு வழக்கில் உள்ளன. இவற்றில் 3000 ஆண்டுக்கால இலக்கியங்களைப் பெற்றுள்ள மொழிகள் சில.இம் மொழிகளுள் சமற்கிருதமும் ஒன்று. அது “செப்பம் செய்யப்பட்ட” பழைய மொழி. அதைவிடப் பழைய மொழி தமிழ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பங்களா, அசாமி முதலான மொழிகளைத் தனித்தனியே கோடிக் கணக்கான மக்கள் பேசுகிறார்கள்ஆனால் சமற்கிருதம் இலட்சக்கணக்கான பார்ப்பனர்களால் மட்டுமே பேசப்படுகிறது. அது தேவமொழி எனப் பார்ப்பனர்களால் கொள்ளப் படுகிறது.எல்லாப் பார்ப்பனர்களும் தமிழை நீச மொழி - இழிந்த மொழி என்றே எழுத்திலும் பழக்கத்திலும் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளுள் தமிழும்…
15 08 2019 பிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’ இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து ஒற்றை தேசம்; ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கத் துடிக்கிறார்கள் பா.ஜ.க. - பார்ப்பன பரிவாரங்கள். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை என்பதே வரலாறு. மௌரியப் பேரரசு, கி.மு. நான்காம் நூற்றாண்டில் மகதத்திலிருந்து நர்மதை நதிக்கரை வரையில் தனது ஆதிக்கத்தைப் பரப்பியது. கலிங்கம் நீங்கலாகத் தக்காணத்தில் மற்ற பெரும் பகுதியைப் பிந்துசாரன் தன்னாட்சிக்குக் கொண்டு வந்தான். அசோகன் கலிங்கத்தை வென்றான். ஆக, தமிழகத்தின் மூவேந்தர் ஆட்சியைத் தவிர இந்தியத் துணைத் கண்டத்திலிருந்த எல்லாத் தனி நாட்டுப் பகுதிகளும் மௌரியர்களால் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. ஆனால் அரசியல் விற்பன்னர்களான மௌரியர்கள், தங்களது பேரரசை நிலை நாட்டியவுடன், தமது மைய அரசின் கீழ் சில இன்றியமையா அதிகாரங்களை மட்டும் வைத்துக்…
01 08 2019 Tamil Nadu as Country Tamil nadu should be seperated from India. It has the all values as top 5 countries in Europe like education poulation etc. Education (Higher education, Tamil nadu 50%, All India 25%)Tamil Nadu is one of the most literate states in India. The state’s literacy rate is 80.33% in 2011, which is above the national average. A survey conducted by the Industry body Assocham ranks Tamil Nadu top among Indian states with about 100% Gross Enrollment Ratio (GER) in primary and upper primary education.…
06 11 2018 யார் தமிழர்? இன அடையாளத்திற்கான வரையறை என்ன? யார் தமிழர் என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது. இனத்துக்கான வரையறையை பலர் பல்வேறு விதமாக வைக்கிறார்கள். ஓர் இனக்குழுமம் என்றால் என்ன என்று ஒரு சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை.வரலாற்றில் தோன்றிய இனக்குழுக்களை அறிவியலாளர்கள் ஆராய்ந்து, அவர்கள் எது போன்ற வரையறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கற்று, அதிலிருந்து பொதுவான காரணிகளை எடுத்து இனக்குழுக்கான வரையறையை உருவாக்குகிறார்கள். இந்த வரையறை வரலாற்றில் தோன்றிய இனக்குழுக்களுக்கு பொதுவாக பொருந்துவதால், அவ்வரையறை அக்குழுக்களின் வளர்ச்சிக்கும் தற்காப்புக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அக்குழுக்கள் எப்பொழுதோ அழிந்திருக்கும். சமூகவியலை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான மேக்சு வேபர் (Max Weber) அவர்கள் ஓர் இனக்குழுமத்துக்கு வைத்த வரையறையை இன்னும் யாரும் விஞ்சவில்லை என்பது சமூகவியலாளர்களின் பொதுவான கருத்து.…