28 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 194) எந்தவோர் பிரச்சினைக்கும், சிக்கலுக்குமான தீர்வை, அந்தப் பிரச்சினையின் இரு முரண்பட்ட எல்லைகளில் தேடுவதைவிட, அதன் நடுப்பகுதியிலான ஒரு சமரசமே, இருதரப்புக்கும் உகந்ததொன்றாக அமையும். இது சமரசத்தின் அடிப்படையிலான அணுகுமுறையாகும்.இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படையை, நாம் உற்று அவதானித்தால், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளான 'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்பதற்கும், பெரும்பான்மைப் பலம் கொண்ட சிங்கள-பௌத்தர்களின் அரசியல் அடிப்படையாக மாறிப்போயுள்ள, 'மஹாவம்சக் கனவுக்கும்' இடையிலான இடைவௌியில் இலங்கையின் இனப்பிரச்சினை உருப்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். இலங்கை என்பது, அதாவது இந்தத் தீவு மொத்தமும் 'சிங்கள-பௌத்த' நாடு என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை, கடந்த கால வரலாறு தௌிவாக உணர்த்தி நிற்கிறது.அதேவேளை, இலங்கையில் தமிழர்கள் என்போர் தனித்த தேசம் என்பதையும், இலங்கையின் குறித்ததொரு பகுதி, தமிழ் மக்களின் தாயகம்…
15 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 192) பல தசாப்தங்களாக, நம்பிக்கைத் துரோகத்தையும் தொடர் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்த ஒரு மக்கள் கூட்டம், நல்லெண்ணத்துடன் எழக்கூடிய முயற்சிகளையும்கூட, ஐயக்கண் கொண்டே நோக்குவதென்பது இயல்பானது; யதார்த்தமானது.அதில் எந்தத் தவறும் உள்ளதென்று, எவரும் எழுந்தமானமாகச் சுட்டிக்காட்டிவிட முடியாது. அது அந்த ஏமாற்றமும், நம்பிக்கைத் துரோகமும் நிறைந்த வரலாறு தந்த ஆறாத வடுவின் விளைவால் எழும் நம்பிக்கையீனம். அந்த நம்பிக்கையீனத்தை, ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. அதற்கு மிகுந்த நல்லெண்ணமும், இடைவிடாத முயற்சியும் தேவை.மாறி மாறி வந்த பெரும்பான்மையின சிங்கள-பௌத்த அரசாங்கத் தரப்புகள், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று சொல்லும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள், கருத்தியல்கள் அன்றி, நாம் கேட்பதை அரசாங்கம் ஒருபோதும் தரத்தயாராகவில்லை என்ற செய்தியே, தமிழ் மக்களைச் சென்றடைகிறது என்பது, இங்கு…
08 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 191) தமிழர் அரசியல் வரலாற்றை நோக்கினால், தமிழ் மக்களின் ஆரம்பகால அரசியல் கோரிக்கைகள் சமஷ்டியாகவோ, பிரிவினையாகவோ, பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வாகவோ இருக்கவில்லை.தமிழ் மக்களுக்கு ஆரம்பத்திலிருந்த அச்சம் என்பது, எண்ணிக்கை ரீதியிலான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த சிங்கள பௌத்தர்கள், பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் முறையை ஒத்த ஆட்சிமுறையொன்றின் கீழ், எண்ணிக்கை ரீதியான சிறுபான்மையினரை, அவர்களின் உரிமையை, அடக்கியாளத்தக்க பலத்தைப் பெறுவார்கள். அதனைச் சமன் செய்வதே, சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழ்த் தலைமைகளின் கோரிக்கையாக இருந்தது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த 50:50 என்பதன் உட்பொருள் இதுதான். பிரித்தானியர் 50:50ஐ நிராகரித்ததன் காரணம், அது வெஸ்ட்மினிஸ்டர் அடிப்படைகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுடன், ஏலவே நிறுவப்பட்டுள்ள எண்ணிக்கை, பெரும்பான்மையின் அடிப்படையில் கொண்டு நடத்தப்படும் ஜனநாயகக் கட்டமைப்புக்கு, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் இந்தக் கோரிக்கை…
01 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 189) இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள்.குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களிடையே இன முரண்பாடுள்ளது என்பதையும் அது தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள்.ஆனால், அந்தப் பிரச்சினை தொடர்பான வரையறைகள் தொடர்பிலும், தீர்வுக்கான அடிப்படைகள் தொடர்பிலும், அனைத்துத் தரப்பினரிடையேயும் தரப்பினுள்ளேயும் நிறைந்த கருத்து நிலைப்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனும், தமிழ்த் தேசியத்துக்காகச் சர்வதேசமெங்கும் குரல்கொடுத்த குமார் பொன்னம்பலத்தின் மகனும், தீவிரத் தமிழ்த் தேசியவாதிகள் என்று பொதுவாகச் சுட்டி நோக்கப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அண்மையில் அரசியல் மாநாடொன்றில் உரையாற்றியபோது,…
25 01 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 188) இலங்கைத் 'தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன' என்ற இந்தத் தேடலுக்கான பதிலாக, 'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்பவை, திம்புக் கோட்பாடுகளினூடாக முன்னிறுத்தப்பட்டன.ஆனால், 'தேசியம்', 'தாயகம்', 'சுயநிர்ணயம்' என்ற கோட்பாடுகள், மேலோட்டமாகப் புரிந்துகொள்ளப்பட முடியாதவை. அத்துடன் அவை, மிக ஆழமானதும் சிக்கலானவையும் ஆகும். அரசறிவியல் தத்துவார்த்த மற்றும் சட்டப் பார்வையில், பல்வேறுபட்ட சிந்தனைகளுக்கும் பொருள்கோடலுக்கும் உட்பட்டவை என்பதையும் கடந்த சில வாரத் தேடலில், நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. 'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்ற அரசியல் அபிலாஷைகளும் அந்த அபிலாஷைகளை அடையப் பெறுவதற்கான கோரிக்கைகளும் முயற்சிகளும் பிரயத்தனங்களும் புதுமையானவையோ, தவறானவையோ, அபத்தமானவையோ, அர்த்தமற்றவையோ அல்ல.'மனிதன் ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டொட்டிலின் 'அரசியல்' என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆகவே,…