14 12 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 182) இலங்கைத் தமிழர்களை, ஒரு தேசமாக அங்கிகரித்தல் என்பதைத் தொடர்ந்து, அடுத்த மிக முக்கியத்துவம் வாய்ந்த திம்புக் கோட்பாடாக அமைவது, 'தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல்' என்பதாகும்.சுயநிர்ணய உரிமை என்பது, வெளி வற்புறுத்தல்கள் இன்றி, ஒருவர், தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள், தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு, தமது தற்போதைய நாட்டில் இருந்து, விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே சுயநிர்ணய உரிமையாகும்.அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், ஐக்கிய அமெரிக்க, பிரான்ஸ் அரசமைப்புகள் ஆகியவை, சுயநிர்ணய உரிமைக் கருத்தியலின் ஆரம்பமாக, பலராலும் கருதப்படுகின்றன.ஆயினும், நவீனகால சுயநிர்ணய உரிமைக் கருத்தியலானது, அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன், 1918இல் ஆற்றிய 'பதின்னான்கு புள்ளி'…
05 12 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -181) வேற்றுமையில் ஒற்றுமை "சிங்கள-பௌத்த" பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. அதனால்தான், ஏ.ஜே. வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் 'தற்காப்புத் தேசியம்' என்கிறார்கள்."தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை" என்கிறார் ராம்சே மயர்.சாதிகள் சேர்க்கையாக, சாதி ரீதியாகக் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, 'தமிழர்' என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்ய பேரினவாதத் தேசியம் முயன்றதன் எதிர்விளைவாக, அதே தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணைந்தமையை நாம் காணலாம்.இது, தமிழரிடையேயான சாதி ஆதிக்கக் கட்டமைப்பிலும் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தமையை நாம் மறுக்க…
28 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 180) சிவில் தேசியமும் இனமத தேசியமும் "இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்" என்பது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை எடுத்துரைக்கும் திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடாகும்.இலங்கையில் தமிழர்கள் தனித்தேசமா என்பது, மிகுந்த வாதப்பிரதிவாதத்துக்கு உரியதொரு விடயமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம், தமிழர்கள் தனித்ததொரு தேசம் என்ற கருத்தியலுக்கான ஆதரவு, மிகக் குறைவாகவே உள்ளது. அத்துடன், அதை அவர்கள் மறுதலித்து வருவதையும் நாம் அவதானிக்கலாம்.இலங்கை என்பது ஒரு நாடு, ஒரு தேசம். அதற்குள் வாழும் சிறுபான்மை இனங்களில் தமிழர்களும் ஒருசாரார் என்பது, பெரும்பான்மைச் சிங்கள மக்களின் நிலைப்பாடாகும். மறுபுறத்தில், 'கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி', 'ஆண்டகுடி' என்ற, 'உயர்வு நவிற்சி வழி மனநிலை' தமிழ் மக்களிடம் பகட்டாரவாரப் பிரசாரப் போக்கால் ஆழமாக…
21 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 179) சாதியும் தேசியமும் சேர் ஐவர் ஜென்னிங்கஸ், இலங்கையின் மக்கள் கூட்டம் பற்றிய தன்னுடைய அவதானத்தைப் பதிவு செய்கையில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான் என்கிறார்.அதாவது, 'நாம் சிங்களவர்', 'நாம் தமிழர்' என்ற இன அல்லது தேச பிரக்ஞை உருவாக அல்லது உருவாக்கப்பட முன்பு, இலங்கையின் மக்கள் கூட்டம் இன, தேச ரீதியில் கட்டமைந்ததை விட, சாதி ரீதியில்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. சிங்களவர்கள் தொடர்பில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலும் இதுவே நிதர்சனமாகும்.இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தமட்டில், குறிப்பாக யாழ்ப்பாணத்தை மய்யமாகக்கொண்ட தமிழர்களைப் பொறுத்தமட்டில், சாதிச் செல்வாக்கு என்பது, 20ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியைத் தாண்டியும் மிகவும் செல்வாக்குமிக்க ஒன்றாகவே இருந்து வந்தது. இன்றும் சமூக மட்டத்தில், அதன் செல்வாக்குக் குறையவில்லை என்று சொல்பவர்களும் உளர்.…
14 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 178) அநகாரிக தர்மபாலவுக்குப் பின்னர் தோன்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாளம், மய்யநிலை அரசியலுக்குள் நுழைய, நீண்ட காலம் கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில், இலங்கை அரசியலில் செல்வாக்கு நிலையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளுக்கு, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாள அரசியலில், பெரும் ஈர்ப்பு இருக்கவில்லை என்பதுடன், அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்கவில்லை. ஏனெனில், 1931இற்கு முற்பட்ட அரசியலில், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தவோ, அவர்களது விருப்பை வெற்றிகொள்ளவோ வேண்டிய அவசியம், அரசியல் தலைமைகளுக்கு இருக்கவில்லை. இதற்கு அர்த்தம், அன்றைய சூழலில் இன, மதப் பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதல்ல. பல சமூகங்கள் வாழும் எந்தச் சூழலிலும் இன, மத, அடையாள வேறுபாடுகள் சார்ந்த பிரச்சினைகள் இருப்பது, தவிர்க்க முடியாதது. இந்த இன, மத, சமூக வேறுபாடுகளை, கொலனித்துவ ஆட்சியாளர்கள்…