07 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 177) 'சிங்கள-பௌத்த' தேசத்தின் பிறப்பு இது 'சிங்கள-பௌத்த' நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல.ஆனால் அந்தக் கருத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் நியாயங்கள்தான் கேள்விக்குரியவை ஆகின்றன. இது, 'சிங்கள-பௌத்த' நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது.ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட, 'சிங்கள-பௌத்த' நாடு இது என்ற கற்பிதம், இந்தப் புனைகதை வரலாற்றிலிருந்தே பிறக்கிறது. ஆனால், இந்த இணைந்த 'சிங்கள-பௌத்த' அடையாளத்துக்கு, 2000 வருடத்துக்கு மேற்பட்ட கால வரலாறு கிடையாது என்பதுதான், கே.எம். டி சில்வா போன்ற வரலாற்றாய்வாளர்களின் கருத்தாக உள்ளது. புரட்டஸ்தாந்து பௌத்தம் இன்றுள்ள 'சிங்கள-பௌத்த' அடையாளம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அநகாரிக தர்மபாலவுடன் எழுந்த 'புரட்டஸ்தாந்து - பௌத்த'…
30 10 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 176) 'தேசிய அரசாங்கத்தை' உருவாக்குதல் மீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான சொற்றொடர்கள், "இலங்கை என்பது ஒரு நாடு; இலங்கை என்பது ஒரு தேசம்; நாம் அனைவரும் இலங்கையர்கள்" என்பதாகும். இதைவிடவும் பரவலாக, இலங்கை என்பது காலங்காலமாக ஒரு நாடு, ஒரு தேசம், ஓர் இறைமையாவே தொடர்ந்து இருந்து வருகிறது போன்ற கருத்துகள், தொடர்ந்தும் சிலரால் முன்வைக்கப்பட்டு வருவதையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.ஆகவே, இவற்றைச் செவிமடுக்கும் போது, இலங்கை என்பது இன்றுள்ளதைப் போலவே, தீவு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு 'தேசிய அரசாக'வே எப்போதும் இருந்துள்ளது என்ற விம்பம், தவிர்க்க முடியாது உருவாகிவிடுகிறது. ஆனால், வரலாற்று, மானுடவியல் ஆய்வுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக இல்லை. தெற்காசியாவின் 'பெரியண்ணன்' ஆக இன்று, இந்தியா…
23 10 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 175) தேசமும் தேசியமும் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்த திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடானது, 'இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்' என்பதாகும்.நாடு (Country), தேசம் (Nation), அரசு (State) ஆகிய சொற்கள் அன்றாட வாழ்வில், ஒத்த பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் தத்துவவியல், அரசறிவியல், சட்ட ரீதியாக அவை, வெவ்வேறு பொருளை உணர்த்தும் தொழில்நுட்பச் சொற்களாகும்.ஆகவே, அந்தவகையில் நாடு, தேசம், அரசு என்பவை, ஒத்தபொருள் கொண்ட சொற்கள் அல்ல. அண்மைக்காலங்களில் இலங்கையில் 'ஒரு நாடு, ஒரு தேசம்' (one country, one nation) என்ற சொற்றொடர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமையையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையையும் நாம் அதிகமாகக் காணலாம். இது இலங்கை என்பது, ஒரே நாடு மட்டுமல்ல; ஒரே தேசமும் என்ற சிந்தனைப்…
16 10 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 174) முதலாம் கட்டப் பேச்சுவார்த்தையின் இறுதி நாள் 1985 ஜூலை எட்டாம் திகதி, உத்தியோகபூர்வ வரவேற்புடனும் ஒன்பதாம் திகதி, முதலாவது அமர்வுகளுடனும் ஆரம்பமாகி, இடம்பெற்று வந்த திம்புப் பேச்சுவார்த்தையின் முதலாவது கட்டம், ஜூலை 13ஆம் திகதி, அதன் நிறைவு நாளை எட்டியிருந்தது.யதார்த்தமாகப் பார்த்தால், திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி கண்டிருந்தது என்பதுதான் உண்மை. இந்தப் பேச்சுவார்த்தையின் முதலாவதும் குறிப்பிடத்தக்கதுமான வெற்றி, ஆயுதம் தாங்கிய இயக்கங்களுடன் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்த இலங்கை அரசாங்கத்தை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுடன் பேசச் சம்மதிக்க வைத்ததாகும்.அத்துடன், ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்து, ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேசச் செய்தமையாகும்.மற்றப்படி, நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமோ,…
09 10 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 173) திம்பு பேச்சுவார்த்தை (4) திம்பு பேச்சுவார்த்தைகள் பற்றி முழுவிவரங்களையும் அறிந்துகொள்வதில் உள்ள முதல் சிக்கலானது, அது தொடர்பிலான தகவல்கள் பேச்சுவார்த்தை நடந்தபொழுதிலிருந்தே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமைதான். உத்தியோகபூர்வ பதிவுகள் இல்லாத நிலையில் அதில் பங்குபற்றியவர்களது தனிப்பட்ட கருத்துகள், பங்குபற்றிய தரப்புகள் வௌியிட்ட சில ஆவணங்கள், அவற்றினடிப்படையில் பலரும் எழுதியுள்ள, பதிவுசெய்துள்ள விடயங்கள் என்பவற்றைக் கொண்டே திம்பு பேச்சுவார்த்தைகளைப் பற்றி நாம் ஆராயக்கூடியதாக உள்ளது. இந்தியாவின் மத்தியஸ்தம் எச்.டபிள்யு.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தை குழு சமர்ப்பித்திருந்த இலங்கை அரசாங்கத்தின் “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வுத் திட்ட முன்மொழிவை தமிழர் தரப்பு நிராகரித்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை அமர்வுகளின் மூன்றாம் நாளில் இறுதியில் திம்பு பேச்சுவார்த்தை ஒரு தேக்க நிலையை எட்டியிருந்தது.ஆரம்பம் முதலே ஜே.ஆர்.…