27 02 20106 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'  இலங்கை அரசியல் வரலாற்றைப் பற்றி பேசும் யாரும் உச்சரிக்கக்கூடிய முக்கிய பதங்களில் ஒன்று 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. தமது திருகோணமலை மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத் தம்மைத் தயாராக்கிக்கொண்டமை என்பன பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வரக்காரணமானது. பெப்ரவரி 4, 1957இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி 'தனிச்சிங்கள' சட்டத்தை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தை நடத்தியது.இந்த ஹர்த்தால் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஹர்த்தால் தினத்தில் வடக்குக்- கிழக்கு ஸ்தம்பித்துப் போனது. இதன் எதிரொலியாக சிங்களப் பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியது. பெயர்ப் பலகைகளில் காணப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாரூற்றி அழிக்கப்பட்டன. இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை அதிகரித்தது. தொடர்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் தமிழரசுக் கட்சி…
23 02 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? இலங்கை அரசியலில் இரத்தக்கறை படிந்த வரலாறு எழுதப்படத் தயாரானது. -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கை வரலாற்றில் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இனமுரண்பாடு கொதிக்கும் நிலையை அடையத் தொடங்கியது. 'தனிச் சிங்கள' சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி ஆக்கியதன் ஊடாக, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியது. அரசாங்க உத்தியோகமே பெருமளவு காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில், சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட்டமையானது, சிங்களம் தெரியாத தமிழ் உத்தியோகத்தர்கள் வேலை செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தது.அரச ஆவணங்கள் முதல் அரச இயந்திரத்தினது சகல பகுதிகளும் சிங்களத்தை மட்டும் கொண்டிருக்கக்கூடிய நிலை ஏற்பட்டதால் சிங்களம் அறியாத சிறுபான்மை மக்கள் கடுமையாகப் பாதிப்படையும் நிலை உருவானது. 'தனிச் சிங்கள'…
16 02 2016  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? தனிச் சிங்களச் சட்டம்'  சமர்ப்பிக்கப்பட்டபோது அங்கு எழுந்த வாதப்பிரதிவாதங்கள், என்.கே.அஷோக்பரன் LLB (Hons) சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக 'தனிச் சிங்களச் சட்டம்' இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது. 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தான் வழங்கிய சிங்கள மொழியை இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விரைவிலேயே உத்தியோகபூர்வ மொழிச்…
09 02 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?  1956  'தனிச் சிங்களச் சட்டம்'  -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போகும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவினை எதிர்த்தே இந்த பிரிவு உருவானது. 'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான தமிழருக்கான சுயாட்சிப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதனூடாக இலங்கையின் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தல்' என்ற கொள்கையினடிப்படையில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) உருவானது. ஆரம்ப காலங்கள் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. புதிதாகத்…
 02 02 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன ?  1949 இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்னம்பலம் பின்பற்றிய அரசியல்வழியில் இது ஒரு திருப்பம்தான். ஆனால், இந்த இணைப்பின் மூலம் ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தமிழ் மக்களுக்கென தமிழர் பிரதேசங்களில் பல…