02 10 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 172) திம்புப் பேச்சுவார்த்தை - (3) இரண்டாம் நாள் அமர்வுகள்   எச்.டபிள்யூ. ஜெயவர்தன, இலங்கை அரசாங்கத்தின் தீர்வுத் திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்ததுடன், பேச்சுவார்த்தையின் முதல்நாள் அமர்வுகள் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்திருந்தன.   முதல்நாள் அமர்வுகள் பற்றி, இலங்கையின் ஊடகங்கள், குறிப்பாக அரச ஊடகங்கள் கருத்து வௌியிடும்போது, தமிழர் தரப்பைப் ‘பயங்கரவாதிகள்’ என்று விழித்திருந்தன.    இரண்டாம் நாள் அமர்வுகள் ஆரம்பித்தபோது, குறித்த விடயம் தொடர்பில் தமிழர் தரப்பு, கடும் கண்டனத்தை வௌியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குறித்த விடயத்தைத் திருத்திக்கொள்ள, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்திருந்தது.  முதல் நாளில், எச்.டபிள்யூ. ஜெயவர்தன சமர்ப்பித்திருந்த அரசாங்கத்தின் தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில், பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளில் கலந்துரையாடப்பட்டது.  1984இல் நடந்த சர்வகட்சி மாநாட்டின் முடிவின் போது, ஜே.ஆர் ஜெயவர்தன…
25 09 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 171) திம்புப் பேச்சுவார்த்தை - 02 முதல்நாள் அமர்வுகள்   திம்புப் பேச்சுவார்த்தையின் முதல்நாள் அமர்வுகள், பெரும் வாதப்பிரதிவாதத்துடனேயே ஆரம்பித்திருந்தது. “தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல” என்ற, அரசாங்கத்தரப்புக் குழுவின் தலைவரும், ஜனாதிபதி ஜே.ஆரின் சகோதரருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தன சொன்ன கருத்து, திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தரப்பை, பலத்த விசனத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாக்கியிருந்த நிலையில், தாம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை, அரசாங்கத்தரப்பு ஏற்றுக்கொள்ளாவிட்டால், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று, தமிழ்த்தரப்புக் கூறியிருந்தது.   இதன் பின்னர், சிறிது நேர ஒத்திவைப்புக்குப் பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தை அமர்வுகள் ஆரம்பமானபோது, அரசாங்கத்தரப்பு நிலைப்பாட்டை எச்.டபிள்யூ.ஜெயவர்தன விளங்கப்படுத்தினார்.  இதன்போது, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ள இருதரப்பும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் காணும் நோக்கத்தையே கொண்டிருக்கின்றன என்றும், தாம் இந்தப்…
18 09 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 170 திம்புப் பேச்சுவார்த்தை 1956இல், தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரிலிருந்து, இலங்கை அரசாங்கம், தமிழ்த் தரப்பினரிடையே பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன; ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகி இருக்கின்றன.ஆனால், திம்புப் பேச்சுவார்த்தைகள் என்பது, இவை எல்லாவற்றையும் விடச் சற்றே வேறுபட்டது. இதுவரை காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே, அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சி (பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி) ஆகியவற்றுக்கு இடையேதான் இடம்பெற்றிருக்கிறது. அதுவும் நேரடியாக, எதுவித மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமுமின்றி.    ஆனால், திம்புப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரையில், முதன்முறையாக இலங்கை அரசாங்கத்தரப்புடன், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பங்குபற்றும் பேச்சுவார்த்தையாக அமைந்தது. அத்துடன், மூன்றாம் தரப்பான இந்தியாவின் ஏற்பாட்டின் பேரில், அவர்களுடைய மத்தியஸ்தத்துடன், இன்னொரு மூன்றாம் தரப்பான பூட்டானில் இடம்பெற்றது. ஆகவே, வௌித்தோற்றத்தில் இது மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு…
11 09 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 169) வரலாற்றின் முக்கியத்துவம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்ற கேள்விக்கான, விடை தேடும் இந்தப் பயணத்தின் முக்கிய கட்டம், திம்பு பேச்சுவார்த்தைகள்சுதந்திர இலங்கையில், குடியுரிமைப் பிரச்சினையில் தொடங்கி, 1956இல் மொழிப் பிரச்சினையாக உருவெடுத்து, தொடர்ந்து தமிழ் மக்கள் பல வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகி, தமது அரசியல் பலத்தைத் தொலைத்து, இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டதில் இருந்து, 1976இல் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து, அதன் பின்னர், ஆயுதவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுவரை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மாற்றமடைந்தும், கூர்ப்படைந்தும் வந்திருந்ததை நாம் அவதானிக்கலாம்.    இதனால்தான், ‘தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?’ என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதில், வரலாறை மீட்டுப்பார்ப்பது மிகமுக்கியமானதும் அத்தியாவசியமானதுமான விடயமாகிறது. இன்று, இன்றைய நாள்களில், இலங்கை மிகப்பெரும் அரசமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ‘ஜனநாயகத்தின் கோவில்’…
04 09 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 168) பேச்சுவார்த்தையும் எதிர்ப்பும்   இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்பையும் பூட்டானின் தலைநகரான திம்புவில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணங்கச் செய்ததில் இந்தியா வெற்றி கண்டிருந்தது.  இதற்காக, ஏறத்தாழ ஆறுமாத காலமாக இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டிருந்தார். ஆனால், இருதரப்பும் சுயவிருப்பின் அல்லது தன்முனைப்பின் பேரில், இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளச் சம்மதித்திருக்கவில்லை என்பது, இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது.இருதரப்பின் மீது, இந்தியா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தே, அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்திருந்தது என்பது, மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது.  இதனால்தான், இருதரப்பின் முதல்மட்ட தலைமைகள், இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், இங்கு குறிப்பிட்டு அவதானிக்கப்படக் கூடியது.  இங்கு, இனப்பிரச்சினைத்…