28 08 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 167) திம்புவுக்கு அழைத்துவருதல்  ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்கும் இடையில், திம்புவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருந்த பேச்சுவார்த்தைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைச் சம்மதிக்க வைக்க, பகீரதப் பிரயத்தனத்தில் இந்தியா ஈடுபட்டிருந்தது.தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியாவின் ஆதரவென்பது மிக முக்கியமானது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மிகச் சுதந்திரமாகத் தென்னிந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டமிது. இந்தியாவின் அந்த ஆதரவு என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு இன்றியமையாததாக இருந்த நிலையில், அந்த இன்றியமையாத ஆதரவையே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவதற்கான துருப்புச் சீட்டாக இந்தியா பயன்படுத்தியது. இந்த அழுத்தத்தின் வாயிலாக, முக்கிய ஆயுதக் குழுக்களில் அநேகமானவற்றை, அவற்றின் அதிருப்திக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர இந்தியாவால் முடிந்திருந்தாலும்,…
21 08 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 166) அஹிம்சையும் ஆயுதமும் தீர்வும்   இராஜவரோதயம் சம்பந்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “சத்தியாக்கிரகம், அஹிம்சையைக் கடைப்பிடித்திருந்தால், ஆயுதப் போராட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிச்சயமாக ஆயுதவழியில் தனித்துப் பெறப்பட்டிருக்கவே முடியாது. அரசியல் என்பதும், பேச்சுவார்த்தை என்பதும், எந்தவோர் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதில், மிக முக்கியமானவை; தவிர்க்கப்பட முடியாதவை. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை மேசைக்கு, அதிகாரத்தரப்பை அழைத்து வருவதற்கான அழுத்தம், ஏதாவதொரு போராட்ட வழியில்தான் தங்கியிருக்கிறது. அது, அகிம்ஷை வழியிலான போராட்டமாகவும் இருக்கலாம்,  ஆயுத வழியிலான போராட்டமாகவும் இருக்கலாம். மஹாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள், அஹிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் கண்டிருந்தார்கள். ஆனால், இந்திய சுதந்திரத்துக்கு ஆயுத வழி சென்ற சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகியோரே, காந்தியைவிட…
14 08 5019 இந்தியப் பிரயத்தனம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 165) இந்தியப் பிரயத்தனம் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இலங்கை அரசாங்கமும் மாறிமாறி வன்முறைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த, அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும் சேர்த்துப் பலிகொண்டிருந்த, 1985 மே - ஜூன் காலப்பகுதியில்தான், இலங்கை தொடர்பிலான தன்னுடைய காய்நகர்த்தல்களை, இந்தியா முடுக்கிவிட்டிருந்தது. இந்தியாவின் காய்நகர்த்தல் பற்றி, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயின் அறிக்கையொன்றில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பிலான இந்தியக் கொள்கையை, ராஜீவ் காந்தி மென்மையாக்கி உள்ளார். இந்தியாவின் இந்த மாற்றத்துக்கு, எதிர்வினையாற்றும் வகையில், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, மீண்டும் தமிழ்த்தரப்போடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று, இந்தியா நம்புகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.    மேலும், அதில், யுத்தத்தைத் தவிர்க்கவே இந்தியா முயற்சிப்பதாகவும் இரத்த ஆறு பாய்ந்தால் அது இந்தியாவுக்கு அதிகளவிலான அகதிகளைக் கொண்டு…
07 08 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 164) தமிழ் - முஸ்லிம் உறவும் கிழக்கும்    இலங்கை அரசியல் வரலாற்றில், 1985 ஏப்ரல் மாதத்தை மீட்டுப் பார்க்கும் போது, பொதுவாகப் பலரும் மீட்டுப் பார்க்காத, ஆனால், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், முக்கியத்துவம் மிக்கதொரு சம்பவம், 1985 ஏப்ரலில், கிழக்கில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். அது, தமிழ் - முஸ்லிம் வன்முறைகளாகும். பிரித்தானியரின் ‘பிரித்தாளும் தந்திரம்’தான், இலங்கையின் தேசிய இனங்களை, இனரீதியாகப் பிளவுபடுத்தக் காரணமானது என்ற பொதுக்கருத்தைப் பலரும் சொன்னாலும், அதே இனரீதியாகப் பிரித்தாளும் தந்திரம், சுதந்திரத்தைத் தாண்டியும் உயிர்வாழ்ந்தது; உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக, தமிழ் - முஸ்லிம் மக்களிடையே தூண்டிவிடப்பட்ட வன்முறைகளை, நோக்க முடியும்.    இலங்கையில் தமிழ் - முஸ்லிம் உறவைப் பற்றிப் பேசும் போது, ‘புட்டும் தேங்காய்ப் பூவும் போல’…
29 07 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -163) அநுராதபுரப் படுகொலைகள்    1985 ஏப்ரல், மே மாதங்களில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.இதற்குப் பதிலடியாக, அரச படைகளும் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன.அரச படைகளின் பதில்தாக்குதலில், அப்பாவிப் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர்; காயப்பட்டனர்; பாதிக்கப்பட்டனர்.    1985 மே ஏழாம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு, வல்வெட்டித்துறை பகுதியில் இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலொன்றில், ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, அரச படைகள் அப்பகுதியிலும், அதை அண்டிய பகுதிகளிலும் நடத்திய பதில் தாக்குதல்களில், ஏறத்தாழ 75 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் அரச படைகளைத் தாக்குவதும், அதற்குப் பதிலடித் தாக்குதலை, அரச படைகள் முன்னெடுக்கும் போது, அதில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதும், அப்பாவிப் பொதுமக்கள்…