16 06 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 157) பயங்கரவாத ஒழிப்பும் அச்சுவேலித் தாக்குதலும் 1985 ஜனவரியில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் இராணு ரீதியான அணுகுமுறை, அதனுடைய முழுவடிவத்தைப் பெறத்தொடங்கியது. ‘தேசிய பாதுகாப்பு’ என்பது, சகல நிலைகளிலும் முக்கியத்துவம் மிக்கதொன்றாக மாற்றப்பட்டது. ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்பது, அரசாங்கத்தின் வேதவாக்கானது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தலைமையில், இந்தச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, களையெடுக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இதன்படி, 1985 ஜனவரி முதல்வாரத்திலேயே, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, வவுனியா, அக்கரைப்பற்று என, வடக்கு, கிழக்கு எங்கும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்கள். 1985 ஜனவரி ஒன்பதாம் திகதி, யாழ். அச்சுவேலிப் பகுதியில், இலங்கை இராணுவம், விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைவிடம் ஒன்றின் மீது,…
09 06 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 157) அமீரின் கோரிக்கை ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு தொடர்பில், ஓராண்டு காலத்துக்கு முன்பே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சொன்ன ஆரூடம் பலித்திருந்தது. இது அமிர்தலிங்கத்தையும் தமிழ் மக்களையும் பொறுத்தவரையில், துரதிர்ஷ்டவசமானதாகும். இராணுவ வழியில், இந்த இனப்பிரச்சினையை அணுக ஜே.ஆர் எண்ணியிருந்தார். அதற்குத் தயாராவதற்குத் தேவையான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான, காலங்கடத்தும் முயற்சியாகவே சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது என்பதே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தாக இருந்தது. இதன் காரணமாகத்தான், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கடுமையாக எதிர்த்திருந்தன. ஜே.ஆர், தன்னுடைய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான முன்மொழிவுகளையும் சர்வகட்சி மாநாட்டையும் கைவிட்டதாக, 1984 டிசெம்பர் இறுதியில் அறிவித்த நிலையில், அமிர்தலிங்கத்தின் நிலைமை, பெரும்…
02 06 219 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -155 அரசும் மதமும் ஒரு நாட்டை ஆள்வதற்கான உரிமையை, ஓர் அரசன் எவ்வாறு பெற்றுக்கொண்டான் என்பது, அரசாட்சி பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. மேற்குலகைப் பொறுத்தவரை, ஒருவனுக்கு ஆட்சி அதிகாரம் செலுத்துதற்கான ஏற்புடைமை பற்றிய நியாயப்படுத்தல், பல நூற்றாண்டுகளுக்கு, “தெய்வீகத்தன்மை வாய்ந்த உரிமை” என்ற ரீதியில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தது. அதாவது, அந்த உரிமை இறைவனால் நேரடியாக அரசனுக்கு வழங்கப்பட்டது என்று நம்பப்பட்டது. இதனால் அரசன், இறைவனுக்குக் கீழ்ப்பட்டவனாகவும், மக்களுக்கு மேற்பட்டவனாகவும் கருதப்பட்டான். ஆகவே அவன், இறைவனைத் தவிர வேறெவர்க்கும் பொறுப்புடையவன் அல்லன் என்றும் கருதப்பட்டான். பழங்காலத் தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசன் “இறையனார்”, “கோ”, “கோன்” என்று விழிக்கப்பட்டான். ஆகவே அரசனை, இறைவனாக அல்லது இறைவனின் ரூபமாகக் காணும் மரபிருந்தது என்று சிலர் குறிப்பிடுவர். நிற்க,…
26 05 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 154) சிங்கள - பௌத்த தேசியவாதமும் ஜே.ஆரும் சமகால ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் ஈற்றில், அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ சித்தாந்தத்திலிருந்து தோன்றியது என்று கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களும் லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரட்ன உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள். அநகாரிக தர்மபாலவில் உதித்த ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமாக, வல்பொல ராஹூல தேரர் போன்ற வித்யாலங்கார பிரிவேனாவைச் சேர்ந்த அரசியல் ஈடுபாடுகொண்ட பௌத்த துறவிகளாலும், மெத்தானந்த, மலலசேகர உள்ளிட்ட பௌத்த தொண்டர்களாலும் 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்டது. 1956இல் ஆட்சியை எவ்வாறேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தாகம் கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவால், அதுவரை காலமும் பிரதான அரசியல் களத்துக்குள் நுழைய முயன்று கொண்டிருந்த, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்குச் செங்கம்பளம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து,…
19 05 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 153) ஜே.ஆர் முன்மொழிந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை 1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்தின் பின்னர் மீண்டும் ஒன்றுகூடிய சர்வகட்சி மாநாட்டில், புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு, ஜே.ஆர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக, மாநிலங்களின் சபை ஒன்றை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த, ஜே.ஆர் அரசாங்கம் விளைந்திருந்தது. படிநிலையின் அடித்தளத்தில், கிராமமட்டத்தில் ஏறத்தாழ 4,500 கிராமோதய மண்டலங்களை ஸ்தாபிக்கவும்; அதற்கடுத்த தளத்தில், ஏறத்தாழ 250 அளவிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளாகப் பிரதேச சபைகளை ஸ்தாபிக்கவும்; மூன்றாவது மட்டத்தில், ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும்,…