12 05 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 152 யார் பொறுப்பு? அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது, எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அந்தப் படுகொலை, எந்தத் தரப்பால் நிகழ்த்தப்பட்டாலும், அது கொடூரமானது; கண்டிக்கப்பட வேண்டியது. 1984 நவம்பர் மாத இறுதியில், மணலாற்றில் ‘கென்ட்’, ‘டொலர்’ பண்ணைகளில், விடுதலைப் புலிகள் அமைப்பால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது அரசாங்கம், அரச படைகளைத் தாண்டி, விடுதலைப் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது, நடாத்தப்பட்ட முதல் தாக்குதலாகக் கருதப்படுகிறது. இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘பயங்கரவாதிகள்’ என்ற அரசாங்கத்தின் பிரசாரத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. இது பற்றி, அப்போது இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வினவப்பட்டபோது, அவர் இதற்குச் சற்றே வேறுபட்ட வியாக்கியானம் ஒன்றைக் கொடுத்திருந்தார். போர் புரியாதவர்களைக் கொல்வதை தான் எதிர்ப்பதாகச் சொன்ன…
05 05 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 151) திட்டமிட்ட அரசாங்க குடியேற்றங்கள் 1950களில் இருந்து, தமிழ்த் தலைமைகள் முக்கியமாக எதிர்த்து வந்ததொரு விடயம், தமிழர் பிரதேசங்களில் அரசாங்கத்தால் நடாத்தப்பட்டு வந்த, திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆகும். இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள், குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைச் சிதைப்பதாக அமைகின்றன என்பது, தமிழ் மக்களின் அச்சமாகும். ஆனால், திட்டமிட்ட குடியேற்றங்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர் பிரதேசங்களில், சிங்கள மக்கள், அரசாங்கத்தால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டமை, தொடர்ந்து கொண்டிருந்ததானது, தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களின் மனநிலையையும் எண்ணப்பாட்டையும் பிரதிபலிப்பதாகவே அமைந்தது. திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றித் தமிழ்த் தலைமைகள் பேசும்போது, அதற்கெதிராகப் பொதுவான ஒரு விமர்சனம் எழுவதுண்டு. தமிழ் மக்கள் வடக்கு -கிழக்கிலிருந்து வந்து, கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கை நகரங்களில் காணி வாங்கி, வீடு கட்டி வாழ முடியுமென்றால், சிங்கள…
27 04 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 151) ‘கிழட்டு நரி’ தந்திரம் “மெத்தப் பழையதோர் இல்லம், நீ நுழைந்ததும் தரை மட்டமானது. உந்தன் நரித்தந்திரம் கொண்டு பல நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டாய். பலநூறு பொறிகளிலுமிருந்தும் நீ தப்பித்துக் கொண்டாய், ஒரு கிழட்டு நரியைப் போல!” செய்யத் அஹ்மட் அதிப் பிஷாவாரி என்ற கவிஞன், பாரசீக மொழியில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சுட்டி எழுதிய கவிதை இது. இன்றும் ஈரானியர்கள், பிரித்தானியாவைக் ‘கிழட்டு நரி’ என்று வர்ணிக்கிறார்கள். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவையும் ‘கிழட்டு நரி’ என்று, பொதுவௌியில் பலரும் விளித்திருக்கிறார்கள். சிலர் ‘ஆசியாவின் நரி’ என்றும், சிலர் ‘இருபதாம் நூற்றாண்டின் நரி’ என்றும் விளித்திருக்கிறார்கள். ‘நரி’ என்பதன் முன்னுள்ள அடைமொழி மாறுபட்டாலும், ‘நரி’ என்பது மட்டும் ஜே.ஆரோடு தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது. இந்தச் சொற்பயன்பாடானது,…
20 04 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 149 அதிகரித்த இந்திய அழுத்தம் 1984 ஒக்டோபர் இறுதிவாரத்தில், தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத்தாக்குதல்கள், இலங்கை அரசாங்கத்தையும் ஜனாதிபதி ஜே.ஆரையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. தன்னுடைய இராணுவவழித் தீர்வுத் திட்டத்துக்கு, இந்தியா கடும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று ஜே.ஆர், மீண்டும் உணர்ந்த தருணம் இது. இதேவேளை, 1984 ஒக்டோபர் 27ஆம் திகதி, அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் றிச்சட் மேர்ஃபி, இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்திருந்தார். சந்திப்பைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கை இனப்பிரச்சினை, அரசியல் ரீதியில்தான் தீர்க்கப்பட வேண்டும்; ஆனால், அது இலங்கை அரசாங்கத்தால்தான் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, அந்நியர்களால் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அங்கு, ‘அந்நியர்’ என்று சுட்டியது, இந்தியாவைத் தான் என்பது வௌ்ளிடைமலை. ஜே.ஆரைச்…
13 04 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 148) தலைநகரை அதிர வைத்த தாக்குதல்கள் வல்பொல ராஹுல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் நிராகரித்ததை, ஜே.ஆர், தனக்குச் சாதகமான பிரசாரமாக மாற்றினார். தாம் சமாதானத்தை விரும்பினாலும், தாம் நேசக்கரம் நீட்டினாலும், ‘பயங்கரவாதிகள்’ அதை ஏற்கத் தயாரில்லை என்ற பாணியில், அந்தப் பிரசாரம் அமைந்திருந்தது. இதன் உட்பொருளாக, இராணுவ நடவடிக்கைதான் ஒரே வழி என்பது வௌிப்படுத்தப்பட்டிருந்தது. ஜே.ஆர் சமாதானத்தையும் சுமுகமான தீர்வையும் விரும்பியிருந்தால், சர்வகட்சி மாநாடும், பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்கு, அவர் இந்தியாவிடம் இணங்கிய, ‘அனெக்ஷர் சி’ முன்மொழிவுகளும் அவரது கையில்தான் இருந்தன. அவற்றை மிகச் சுலபமாக நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், ஜே.ஆரின் நோக்கம், சமாதானமும் சுமுகத் தீர்வுமாக இங்கு இருந்திருக்க முடியாது. தனது, இராணுவ நடவடிக்கையை…