06 04 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 147) ஒரு பௌத்த துறவியின் தூது “இலங்கைத் தீவானது புத்தருக்குச் சொந்தமானது. அது மூன்று இரத்தினங்களால் நிறைந்த திறைசேரியைப் போன்றது. அதனால் ஆதிகால இயக்கர்கள், இந்தத் தீவில் வாழ்ந்தது நிரந்தரமற்றதாக அமைந்ததைப் போலவே, தவறான நம்பிக்கையைக் கொண்டவர்கள், இந்தத் தீவில் வாழ்வதும் நிரந்தரமில்லை. பௌத்தரல்லாத ஒருவர், தனது வலிமையைக் கொண்டு இலங்கைத் தீவைச் சில காலம் ஆண்டாலும், புத்தரின் குறிப்பிட்டதொரு சக்தியால், அத்தகையவரது தொடராட்சி நிலைக்காது. ஆகவே, இலங்கை என்பது, பௌத்த மன்னர்களுக்கே பொருத்தமுடையது; ஆகவே, அவர்களது ஆட்சியே நிரந்தரமாக நீடிக்கும்” என்று ‘பூஜாவலிய’ என்ற 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிங்கள நூல் குறிப்பிடுகிறது. ‘சிங்கள-பௌத்த’ மேலாதிக்க மனப்பான்மையை மட்டுமல்ல, இலங்கை ஒரு பெளத்த தேசம் என்ற புனைவின் அடிப்படையையும் இது சுட்டி நிற்கிறது.…
11 03 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 146 வரலாற்றுத் திருமறையும் மனிதக் கடவுள்களும் அமெரிக்காவில் அடிக்கடி இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பற்றிய செய்திகள், பெரும் பரபரப்பை உலகமெங்கும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, அமெரிக்கப் பாடசாலைகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், பல அப்பாவி உயிர்கள் பலியாகின, பலியாகிக் கொண்டிருக்கின்றன. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டும், எட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், அமெரிக்கப் பாடசாலைகளில் இடம்பெற்றிருப்பதாக ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் வேர், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் அரசமைப்புக்கான இரண்டாவது திருத்தமானது, பொதுமக்களது ஆயுதம் வைத்திருக்கும் உரிமை, மீறப்படக்கூடாது என்று குறிப்பிடுகிறது. அதாவது, அமெரிக்க அரசமைப்பின்படி ஆயுதம் வைத்திருத்தல் என்பது, அமெரிக்கக் குடிமகனின் உரிமையாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அரசமைப்பு உரிமையால், பல்லாயிரம்…
04 03 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 145 சர்வகட்சி மாநாடு: இணக்கமும் பிணக்கும் யுத்தம் தொடர்பாகப் பல்வேறுபட்ட தத்துவநிலை விளக்கங்களுண்டு. ‘நியாயயுத்தம்’ என்ற தத்துவ விளக்கமானது, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. நியாயயுத்தத்தை நாம், மகாபாரத காலத்திலும் காணலாம். மிகச்சுருக்கமாக, இதன் சாரத்தைக் கூறுவதென்றால், யுத்தம் என்பது தார்மீக ரீதியில் தவறானதெனினும், அனைவருக்குமான பெருநன்மை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக யுத்தம் செய்வதில் தவறில்லை. இந்தத் தத்துவம் இன்றுவரை, உள்ளூரிலும் உலக அரங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம். ஒவ்வொரு யுத்தமும், ஏதோவொரு வகையில், அனைவருக்கும் நன்மை தரத்தக்க உயர்தார்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு, நியாயப்படுத்தப்படுவதைக் காணலாம். மனித உரிமைகள், அடக்குமுறையைத் தகர்த்தல், சர்வாதிகார எதிர்ப்பு, ஜனநாயகம், விடுதலை, ஆபத்தான ஆயுதங்களை இல்லாதொழித்தல் என அனைவருக்கும் பொதுவான, உயர்தார்மீக சித்தாந்தங்கள் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டன. இத்தகைய உயர்தார்மீக சித்தாந்தங்கள்,…
25 02 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 144) பயனின்றித் தொடர்ந்த சர்வகட்சி மாநாடு: அதிகரித்த வன்முறைத் தாக்குதல்கள் 1984 ஓகஸ்ட் மாதத்தில், வடக்கில் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. வடக்கில் பொலிஸார், அரச படைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருந்தன. இதற்குத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடம் ஏற்பட்டிருந்த போட்டியும் முக்கிய காரணமென, ரீ.சபாரட்ணம் சுட்டிக் காட்டுகிறார். மற்ற அமைப்புகளைவிடத் தாம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில், போட்டி மனப்பாங்கோடு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டனவென அவர் பதிவுசெய்கிறார். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் எனப் பல இடங்களிலும் தாக்குதல்களும், அவற்றுக்கெதிரான அரசபடைகளின் கோரமான பதில்த் தாக்குதல்களும், தொடர் தாக்குதல்களும் மாறிமாறி நிகழ்ந்த வண்ணமிருந்தன. தமிழ் மக்களின் உயிர்களும், உடைமைகளும் இந்தக் கோர தாக்குதல்களில் பலியாகிக்…
18 02 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 143 தோற்றுப்போன தேசிய அரசுப் புனைவு சுதந்திரத்தின் பின்னர், மேற்கத்தேய தேசிய அரசுகளின் அடிப்படையிலான ஓர் இலங்கைத் தேசிய அரசைக் கட்டியெழுப்பும் முனைப்புகளுக்கு, பெரும் சவாலாக அமைந்தது ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம். 1956இன் பின்னர், ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம், இலங்கைத் தேசியத்தை முழுமையாகத் தனது மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரத் தொடங்கி, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், அது அரசமைப்பு ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. ‘ஒரு நாடு, ஒரு தேசம்’ என்ற ஒற்றைத் தேசியப் புனைவுக்கு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், உத்தியோகபூர்வமாக மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது. 19ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி பெற்ற, நவீன சிங்கள-பௌத்த தேசியவாதப் புனைவின் சிற்பியாக அநகாரிக தர்மபாலவை பலரும் அடையாளப்படுத்தும் அதேவேளை, அவரின் சமகால எதிரிணையாக ஆறுமுக நாவலரை…