18 01 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 187) தாயகமும் குடியேற்றமும் தமிழர் தாயகமாக, தமிழர்கள் இன்று கோரும் நிலப்பரப்பானது, வரலாற்றுக் காலம் முதல், தமிழர்களின் ஒற்றைத் தனி இராச்சியமாக இருந்ததா என்ற கேள்வியைத் தாண்டி, அங்கு வாழ்ந்த மக்கள், அங்கு நிலை பெற்றிருந்த கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் என்பன, பொதுவாகத் தமிழ் சார்ந்ததாகவும் சிங்களம் சாராததாகவும் இருந்ததா என்ற கேள்வியும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், தமது வாழ்வை, தமது சுய வேர்களின் அடிப்படையில், தமக்கே உரிய நம்பிக்கைகளின் அடிப்படையில், தமது விருப்பப்படி கொண்டு நடத்தினார்களா ஆகிய கேள்விகள் முக்கியமானவை ஆகும்.வெறுமனே, நடைமுறை ரீதியில் ஒரு நிலப்பரப்பு, இன்னோர் இராச்சியத்துக்குக் கீழ்பட்டதாக இருந்தது என்ற காரணம் மட்டும், அந்நிலப்பரப்பு வேறுபட்ட மக்களுக்குரிய தாயகமாக இருக்கவில்லை என்ற மறுப்பை, நியாயப்படுத்திவிடாது. இலங்கையில்…
11 01 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 186) வரலாற்று முரண்கள் வடக்கு, கிழக்குத் தமிழர்களின், 'தாயகம்' என்ற கோரிக்கையை, வரலாற்று ரீதியாக மறுப்பவர்கள், அந்தப் பிரதேசம், வரலாற்று ரீதியாகத் தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல என்பதை, வரலாற்றுச் சான்றுகள் சிலவற்றை முன்னிறுத்தி, நிறுவ எத்தனிப்பதை அவதானிக்கலாம்.வன்னிப் பகுதியானது, இராஜரட்ட இராசதானிக்கு உட்பட்டதாக இருந்தது; மட்டக்களப்பானது, ஆரம்ப காலத்தில் ருகுணு இராச்சியத்துக்கு உட்பட்டதாகவும் பின்னர், கண்டி இராச்சியத்துக்கு உரியதாகவும் இருந்தது என்று நிறுவுவதன் ஊடாக, தமிழர் தாயகக் கோரிக்கையை, நிராகரிக்கும் தமது வாதத்தை, அவர்கள் முன்னெடுக்கிறார்கள். மறுபுறத்தில், அநகாரிக தர்மபாலவுடன் தோன்றிய, 'புரட்டஸ்தாந்து பௌத்தம்', இன்று 'சிங்கள பௌத்தம்' எனப் பேரினவாதமாகவும் பெருந்தேசியவாதமாகவும் கூர்ப்பும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில், தமிழர்களின் தாயகக் கோரிக்கையை, வரலாற்று ஆதாரங்கள் ஊடாகத் தகர்க்க முனையும் முயற்சியின் இன்னோர் அத்தியாயமாக,…
04 01 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 186) திம்புக்கோட்பாடுகளில் தாயகம் திம்புக் கோட்பாடுகளில், இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்; தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல் ஆகிய இரண்டுடன் இணைந்தொன்றாக அமையும் திம்புக் கோட்பாடு, இலங்கைத் தமிழருக்கென்ற அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல் என்பதாகும்.அரசியல் களத்திலும் அன்றாட வாழ்விலும், இம்மூன்று கோட்பாடுகளும், சுருக்கமாக "தேசியம், சுயநிர்ணயம், தாயகம்" என்று அடையாளப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கலாம்.தமிழ் மக்களை ஒரு தேசமாக நிறுவுதல், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை ஆகியவற்றை விடவும், கோட்பாட்டு ரீதியாக மிகச் சவாலானதொன்றாக அமைவது, இலங்கைத் தமிழருக்கென அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல் என்ற "தாயகம்" கோரிக்கையாகும்.இந்தச் சிக்கலை விளங்குவதற்கான வசதியின் நிமித்தமாக, தத்துவார்த்த ரீதியிலான சிக்கல், வரலாற்று ரீதியிலான சிக்கல் என்ற இரு படிகளில்…
28 12 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 184) ஏகத்துவமும் த்வைதமும் சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, 'சகல மக்களுக்கும்' உரியதாக உரைக்கும் சுயநிர்ணய உரிமை, இலங்கைக்கும் பொருந்துமா என்பது, இங்கு எழக்கூடிய முக்கியமான கேள்வியாகும்.1980 ஜுன் 11ஆம் திகதி, சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டிலும் இலங்கை கையெழுத்திட்டு, குறித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் அங்கத்துவம் பெற்றுக்கொண்டது.ஆனால், உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதால் மட்டும், குறித்த உடன்படிக்கையின் சரத்துகள், நேரடியாக இலங்கையில் செல்லுபடி உடையதாகாது. இதற்குக் காரணம், இலங்கை ஒரு 'த்வைத' (dualist) அரசாகும்.சர்வதேச சட்டங்களின் நேரடிச் செல்லுபடித் தன்மையைப் பொறுத்து, அரசுகள்…
21 12 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 183) சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, 'சகல மக்களும் சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுரிமையின் பாலாக, அவர்கள் சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையைத் தீர்மானிப்பதுடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை முன்னெடுக்கிறார்கள்' என்று வழங்கியது.ஆனால், இதிலுள்ள 'மக்கள்' என்ற பதத்தின் அர்த்தம், நீண்டகாலமாகவே தொக்கி நிற்குமொன்றாகத் தொடர்ந்து வந்தது.சுயநிர்ணய உரிமையைக் கொலனித்துவ விலக்கத்துக்கு என மட்டுப்படுத்தப்பட்டதோர் உரிமையாக, மேற்குலகு நோக்கியதன் விளைவாக, 'மக்கள்' என்ற பதத்தை, நவீன அரசுக் கட்டமைப்பின் அடிப்படையில், அணுகும் போக்கே, அதுவரை கடைப்பிடிக்கப்பட்டது. உதாரணமாக, ஓர் இறைமையுள்ள சுதந்திர அரசாங்கத்துக்கு உட்பட்ட மக்கள் அனைவரும், ஒரு மக்களாகக் கருதப்பட்டனர்.…