12 04 2015 அமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம் "தமிழனுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்ற தலைப்பில் 'சுதந்திரனி' ல் எழுதிய (29.09.48) அரசியல் கட்டுரைமூலம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் கவனத்தை ஈர்த்து அரசியலில் தளம் பதித்த திரு அ.அமிர்தலிங்கத்தின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு, ஈழத்தமிழர் அரசியல் வாழ்விலே பின்னிப் பினைந்தது. தமிழ்ப் பிரதேசங்களின் மூலைமுடுக்கெல்லாம் அவர் பயணித்திருக்கிறார். பொதுமேடைகளே அரசியல் போதனையின் களமாக அமைந்த நிலையினால் அமிர்தலிங்கத்தின் பொருள் பொதிந்த பேச்சுக்கள் அவரை தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக நிலைநிறுத்தின. ஈழத்தமிழ்ர் பிரச்சனை இந்தியாவின் அனுசரணையுடன்தான் தீர்க்கப்படமுடியும் என்பது அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் சிந்தனையாக இருந்தது. தமிழகத் தலைவர்களுடனும் மத்திய அரசுடனும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்களை ஆணித்தரமாகவும், அவர்கள் அதனைப் புரணமாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடனும் எடுத்துரைத்திருக்கிறார். ஈழத்தமிழ்ர் பிரச்சனையை…
20 05 2015 சேர் பொன்னம்பலம் இராமநாதன் சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு,…
15 06 2015 The greatest Ceylonese Leader was Sir Ponambalam Ramanathan By Hemantha Warnakulasuriya In the 2012 Gallup poll, conducted by the US in the Asian region, to find the chief executive with highest approval rating, President, Mahinda Rajapaksa, came third with a 91 percent approval rating. It was conducted by a US-based agency. When President Rajapaksa visited Rome, I had sleepless nights with Sri Lankans living all over Italy pleading with me to give them an opportunity to see him. A few years after his election as President another…
20 04 2015 அமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். ( 4th august 1977 -> 24th october 1983 ) இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.
15 01 2016 13.07.1989 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நினைவுகள் இனிமை: துயரமும் கலந்த தருணங்களாக…. அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் கடந்த சில வருடங்களாகவே இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி எனது சில நினைவுகளையும் எண்ணங்களையும் எழுதவேண்டும் என்றிருந்தேன். எனினும் அது இந்த வருடம் தான் நிறைவேறுகிறது. இது அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய எனது எண்ணக்கருத்துக்களே அன்றி அவர் பற்றிய ஒரு மதிப்பீடு அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கம் என்ற அந்த மனிதரின் குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க சொல்லும் முயற்சியாக இல்லையெனினும் அவற்றின் சில அம்சங்கள் இங்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. இற்றைக்கு இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் 13/07/1989 அன்று கொழும்பில்…