03 09 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 50 மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருவர் பலியாயினர். முதலாமவர் இல.நடராசன். மற்றொருவர் தாளமுத்து ஆவார். இல.நடராசன் அவர்கள் 5.12.1938இல் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்துகொண்டு இந்து தியாலஜிகல் பள்ளியின்முன் மறியல் செய்து கைது செய்யப்பட்டார். நீதிபதி அப்ரஸ் அலி அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் 50 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஆறு வாரம் சிறையி லிருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.நடராசன் சென்னை 11ஆவது டிவிஷன் பண்ணைக் கார ஆண்டியப்பன் தெரு எண்.2/2 இல்லத்தில் வசித்து வந்தார். அவருடைய தந்தையார் பெயர் இலட்சுமணன் ஆகும். இவர் அந்தக் குடும்பத்திற்கு ஒரே மகன் ஆவார். இவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்.இல. நடராசன் சென்னை சிறையில் பலநாள் நோயி னால் அவதிப்பட்டு…
30 08 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 49 பெரியார் சிறைக்குச் சென்ற பின்னர் மேலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறை சென்றனர். பெரியாரை பெல்லாரி சிறை யில் அடைத்தார் இராசாசி. அங்கு அவருக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. உடல் எடையும் குறைந்து வந்தது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் எடுத்துக் கூறப் பட்டது. ஆளுங்கட்சித் தரப்பில் கிண்டலாகவும் கேலியாகவும் விடைகள் அளிக்கப்பட்டன. அது ஆர்க்காடு இராமசாமி யின் மகன் டாக்டர் கிருட்டிணசாமி நடத்திய லிப்பட ரேட்டர் வெளியீடான ஆரிய ஆட்சி நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரது தேக நிலை யைப் பற்றியும் அவரது எடைக் குறைவைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஈ.வெ.இராவின் தேகநிலை நகைப்புக்கிடமாதல் 1938ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் 1939 ஆம் வருடம்…
26 08 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 48 (1938இல் திசம்பரில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் பெரியாரின் தலைமையுரை-சென்ற இதழ் தொடர்ச்சி...) தோழர்களே! இந்தி நம் நாட்டு மக்களில் 100க்கு 93 பேருக்குத் தாய் பாஷையில் தங்கள் கையெழுத்துக் கூடப் பாடத் தெரியாத நிலையில், ஆரம்பப் பாடசாலைகளை ஜில்லாதோறும் 100ம் 200மாக திடீர் திடீரென மூடிக்கொண்டு வரும் நிலையில், கேட்பதற்கெல்லாம் பணமில்லை, பண மில்லையென்று பல்லவிபாடும் நிலையில், வடமொழி யென்றும், ஆரியமொழியென்றும், அந்நிய மொழி யென்றும் சொல்லப்படும் இந்தி மொழியை (பலர் ஆட்சேபித்த பிறகு) இந்துஸ்தானி என்று சொல்லிக் கொண்டு கட்டாய பாடமாகப் படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது காங்கிரஸ் திட்டத்தில் எத்தனையாவது திட்டமென்றும், ஓட்டர்களுக்கு எப்பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறுதியென்றும் கேட்கின்றேன். ஜனநாயக ஆட்சிக்காரர் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும்…
22 08 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 47 (1938இல் திசம்பரில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் பெரியாரின் தலைமையுரை-சென்ற இதழ் தொடர்ச்சி...)தோழர்களே!நம் தற்கால நிலைமையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.மேலும் அரசியல் துறையில் நாம் மிகப் பிற்போக்காளர்கள் என்றும், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் தேசீய உணர்ச்சியற்றவர்களென்றும் ஜமீன்தார் கட்சியினர் என்றும் நம் எதிரிகள் நம்மை அழைக்கின்றனர்.அரசியலில் நாம் எவ்வகையில் பிற்போக்காளர்கள்? நமது அடிப்படையான அரசியல் கொள்கை எல்லா மக்களும் சம நீதியும், சம உரிமையும், சம சந்தர்ப்பமும் பெற வேண்டுமென்பதே. இக்கொள்கையை இந்நாட்டுத் தீவிர அரசியல் கட்சியான காங்கிரஸ் கைக்கொண்டிருக்கின்றதாவென்று கேட்கின்றேன்?அப்படியிருந்தால் இன்று காங்கிரசில் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றிருக்கவும், மற்றவர்கள் கைதூக்க மாத்திரம் உரிமை கொண்டவர்களாகவும் இருக்க யாது காரணம்?அரசியல் துறையில் காங்கிரஸ்காரர்கள் அந்நியர்கள் இந்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமென்று…
19 08 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 46 பெரியார் அவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறை சென்ற பின்பும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொய்வின்றி நடைபெற்று வந்தது. ஆண் களும், கைக்குழந்தைகளுடன் பெண்களும் தொடர்ச்சி யாக மறியல் செய்து சிறை சென்றனர்.இங்கே சிறையில் அடைத்தால், தொண்டர்கள் அவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வருவார்கள் என்பதால், பெரியாரை, பெல்லாரி சிறையில் அடைத் தார் இராசாசி. பெரியார் சிறை செல்லும் முன்னே நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் நாள் பெரியார் சிறையில் அடைக்கப் பட்டார். அதே திசம்பர் மாதம் இறுதியில் 29, 30, 31 நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது.கி.ஆ.பெ. விசுவநாதம், ஏ.டி. பன்னீர்செல்வம் இருவரும் பெல்லாரி சென்று பெரியாரைச் சிறையில் சந்தித்து,…