07 06 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 33 தமிழர் பெரும்படைக்கு ‘விழுப்புரத்தில்’ உற்சாகமான வரவேற்பு ஆகத்து 22: நேற்று பகல் 1.30 மணிக்குத் தமிழர் பெரும்படை வளவனூரிலிருந்து விழுப்புரம் வந்து சேர்ந்தது. சுமார் 50 முஸ்லீம் லீக் வாலிப சங்கத் தொண்டர்களும், அன்னியூர் தமிழ்க் கழகத்தாரும் மற்றும் ஏராளமான இந்து முஸ்லிம் பெரியவர்கள் உள் ளிட்ட சுமார் 1000 பேர்கள் எதிர்கொண்டு வரவேற்று படைத்தலைவர்கட்கு மாலையிட்டு “வீழ்க இந்தி”, “வாழ்க தமிழ்” ஆகிய பேரொலியுடன் படையை அழைத்து வந்தனர். படை முன்னாள் நகர மன்றத் தலைவர் எம். கோவிந்தராசுலு நாயுடு பங்களாவில் தங்கியது. பகல் 2 மணிக்கு எம். கோவிந்தராசலு நாயுடு, எம். சண்முக உடையார் (நகர மன்ற உறுப்பினர்) எம். முத்துத்தாண்டவப் படையாட்சியார் (நகர மன்ற உறுப்பினர்) ஆகிய…
30 05 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 32 பல மாவட்டங்களில் தன்னார்வமாக தமிழ்த் தொண்டர் படை அமைத்து இந்தி எதிர்ப்புப் பிரச்சா ரத்தை தமிழ் உணர்வாளர்கள் தீவிரப்படுத்தி வந்தனர். ஓமலூர் தமிழ்த் தொண்டர் படை இந்தப் படை 25 பேர் கொண்டதாய் தே.வெ. கதிரி செட்டியார் தலைமையில் ஓமலூர் தாலுக்காவில் மாத்திரம் இரண்டு வாரம் பிரச்சாரம் செய்து திரும்பி விடும். இந்தப் படையை அன்புடன் தாலுக்கா வாசிகள் எதிர்பார்க்கிறார்கள். இப்படைக்கு வேண்டிய சகல வசதிகளையும் பல கணவான்கள் செய்து வருகிறார்கள். இப்படைக்கு சாப்பாட்டு வசதிகள் யாருக்கும் சிரமம் கொடுக்காமல், சொந்த சமையல் செய்து கொள்ள அரிசி, பருப்பு முதலிய உணவு சாமான் வண்டியும் பின்னால் தொடர்ந்து வரும். இந்தப் படையில் சேர விருப்பமுள்ள தோழர்கள் 1-9-1938ஆம் தேதிக்குள் தங்கள் முழு…
23 05 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 31 ஆம்பூரில் பெரியார்: சென்ற மார்ச்சு இதழில் வடஆர்க்காடு மாவட்ட இந்தி எதிர்ப்புப் படையைப் பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி சித்தக்காடு ராமையா அவர்களிடம் ஆலோச னைகள் வழங்குவதற்காக, பெரியார் ஈ.வெ.ரா. 30-8-1938 செவ்வாய் காலை சோலையார்பேட்டைக்கு வந்து அங்கிருந்து மிட்டாதாரர் பார்த்தசாரதி அவர் களுடன் காரில் ஆம்பூர் வந்து சேர்ந்தார். வடஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புறப்படப்போகும் தொண்டர் படை விவரத்தைத் தெரிந்து அதை அனுமதிப்பதற் காகப் படையை நடத்திச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தோழர் சித்தக்காடு கே. ராமை யாவைச் சந்தித்து அது விஷய மாகப் பேசினார். தலைவர் அவர்கள் தோழர் கே. ராமையா ஜாகை முன் மோட்டாரை விட்டு இறங்கிய தும் அந்தச் சேதி விநாடி நேரத் தில் நகர்…
16 05 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 30 இந்தி எதிர்ப்பாளர்கள் சென்னைச் சட்டசபை முற்றுகை : 15.8.1938 அன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி சரியாக மாலை 4 மணிக்கு வடசென்னைத் தமிழர் கள் “தமிழ்த் தாயை இந்தி என்ற விஷப்பாம்பு, காலைப் பிடித்து விழுங்குவதுபோல்” எழுதப்பட்ட ஒரு பெரிய படத்தை எடுத்துக் கொண்டும், இந்திக் கண்ட னப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஊர்வலமாகப் பீப்பிள்ஸ் பார்க்கை வந்து சேர்ந்தார்கள். 4.30 மணிக்குப் பார்க்கை விட்டு சுமார் 5000 பேர் கை யில் தமிழ்க் கொடிகளுடன் இந்திக் கண்டன முழக்கங்களை முழக் கிக் கொண்டு தோழர்கள் சாமி சண்முகானந்தா. டாக்டர் தருமாம் பாள். நாராயணி அம்மாள். மீனாம் பாள். பாவலர் பாலசுந்தரம். என்.வி. நடராசன் முதலியவர்கள் தலைமையில் புறப்பட்டனர். ஊர்வலம் பெரியமேடு. சிந்தாதிரிப்பேட்டை,…
09 05 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 29 வடநாட்டு மில் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண் டும் சென்னைக் கூட்டத்தில் தீர்மானம் : தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு 101 பேர்கள் கால்நடையாக பல்வேறு பகுதிகளில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்துவரும் வேலையில் சென் னையில் பல பகுதிகளில் அன்றாடம் மறியலும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வந்தன. 11.08.1938 அன்று சென்னைப் புதுப்பேட்டையில் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தலைமையில் ஒரு பெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர். அது சமயம் வடநாட்டு இந்தியை கட்டாயமாகப் புகுத்துவதை ஆதரிக்கும் வடநாட்டு மில் முதலாளிகளின் துணிகளை அறவே தென்னாட்டு மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கடலூர் எம்.என்.முத்து குமாரசாமி பாவலர் அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இத்தீர்மானத்தைத் தோழர் சாமிநாதன்…