28 03 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 20 வாலாசா வல்லவன் 8-5-38, 15-5-38, 22-5-38, 29-5-38 ஆகிய நான்கு வார “குடி அரசு” இதழ்களில், “ஹிந்தி வந்து விட்டது. இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியது தான்” “நெருக்கடி-என்றுமில்லா நெருக்கடி”, “தொண்டர்களே சென்னை செல்க” “போர் மூண்டுவிட்டது-தமிழர் ஒன்று சேர்க” என்னும் தலைப்புகளில் தலைவர் பெரியார் அவர்கள் நான்கு தலையங்கங்களைத் தீட்டினார். அந்த எழுத்துகள் தமிழ்நாட்டில் பெருத்த பரபரப்பையும் ஆவேசத்தையும் மூட்டிவிட்டதோடு, கொஞ்சம் அப்படியும் இப்படியுமாய் இருந்த தமிழர்களைக்கூடக் கையைப்பிடித்து இழுத்து வந்து போர்க் களத்தில் நிறுத்திவிட்டன. இந்திப்போர் - திருச்சி திட்டம் தீட்டுகிறது! தமிழர் எதிர்ப்பு கண்டு சளைக்காது ஆச்சாரியார் அவர்கள் 21-4-1938-இல் இந்தி கட்டாயப் பாட உத்திரவைப் பிறப்பித்துவிட்டார். எனவே, தமிழ்ப் பெருமக்களும் மொழிப் போருக்கான…
21 03 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 19 வாலாசா வல்லவன் போர் மூண்டு விட்டது; தமிழர் ஒன்று சேர்க : ஆரியச் சூழ்ச்சிக்கும், தமிழர் (திராவிடர்) வீரத்திற்கும் போர் மூண்டுவிட்டது. மூளாமல் தடுக்க தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் பயனற்ற தாகிவிட்டன. தமிழர்கட்குள் ஒற்றுமை இல்லை என்றும், தமிழர் களைக் காட்டிக் கொடுத்துத் தமிழர்களை அழிக்க, தமிழ் மக்களில் தங்களுக்கு வேண்டிய “அநுமார், சுக்கிரீவன், விபீஷணன்” போன்ற இழி மக்கள் கிடைத் திருக்கிறார்கள். இன்னும் கிடைப்பார்கள் என்றும் கருதியிருக்கும் இறுமாப்பால் “நான் செய்வதைச் செய்கிறேன். உன்னால் ஆனதைப் பார்” என்று சூழ்ச்சி யில் வல்ல நமது ஆச்சாரியார் போர்க்கோலம் கொண்டு விட்டார். பிரிட்டிஷ் ஆட்சியும் தனது சுயநலத்தையும், தமிழ் மக்களின் கதியற்ற நிலைமையும் கருதி தமிழர் மானத்தைச் சூறையாட…
14 03 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 18 வாலாசா வல்லவன் தந்தை பெரியாரின் குடிஅரசு 1938 மே மாதம் முதல், வாரந்தோறும் - கடுமையான அதே நேரத்தில் தமிழர்களுக்கு வீரமும், உணர்ச்சியும் ஏற்படுத்துகின்ற அளவுக்கு மிகக் கோபக்கனலைக் கொட்டுகின்ற தலையங்கங்களைத் தீட்டி வந்தது. 1938 மே மாதம் 15ஆம் நாள் குடிஅரசு இதழில், ‘நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி’ என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில், தமிழ் இனத்திற்குக் கேடு செய்யும்; துரோகம் இழைக்கும் தமிழர்களைக் கண் டனம் செய்தது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி இங்கே மறுவெளியீடு செய்யப்படுகிறது. தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம் “தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்றுப் பெரிய மனிதனாக உள்ள மக்களில்…
07 03 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 17 வாலாசா வல்லவன் இராசாசி 1938 ஏப்பிரலில் கட்டாய இந்தி ஆணை பிறப்பித்தவுடன் தந்தை பெரியாரின் குடிஅரசு இதழும் விடுதலை நாளேடும் தான் போர்வாளாகச் செயல் பட்டன. தமிழக இளைஞர்களைப் போர்க்களத்திற்கு முரசறைந்து அழைத்தன என்பது தான் கடந்த கால வரலாறு. சென்ற சிந்தனையாளன் இதழ் கட்டுரைத் தொடர் எண்.16இல் எப்படிப்பட்ட இளைஞர்கள் போராட்டத்திற்குத் தேவை என்பதை 8.5.1938 குடி அரசில் தலையங்கம் தீட்டப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக இங்கே மறுவெளியீடு செய்யப்படுகிறது. மாண வர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும், சைவ மடாதிபதிகளையும் அறைகூவல் விட்டு அழைத்தது. “கோடை விடுமுறை முடிந்தவுடன் இந்தி கட்டாயப் பாடமுறை அமுலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள…
21 02 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? வாலாசா வல்லவன்15 இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் காலிகள் கலாட்டா “திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் சுமார் 10,000 பேர்கள் கொடிகளுடன், வாத்தியங் களுடனும், ஊர்கோலம் போகும் போது காங்கிரசாரும், அவர்களுடைய அடியாட்களும் ஆத்திரத்தை மூட்டக்கூடிய வார்த்தைகள் கொண்ட நோட்டீசுகளைக் கூட்டத்தில் வீசியதல்லாமல், தலைவர்கள் கையில் கொண்டு போய்க் கொடுப்பதும், கோபமுண்டாகும் வண்ணம் ‘ஜே’ போடுவதுமான காரியங்களைச் செய்துகொண்டு வந்ததுமல்லாமல், கூட்டத்தில் கற்களையும் வீசினால் யார்தான் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள்? போலீசார் இந்தக் காலிகளை விரட்டிவிட்டார்களே ஒழிய, அவர்களைக் கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை. ஊர்கோலம் மாநாட்டு மண்டபத்துக்கு வந்தபிறகும், மாநாட்டுக் கொட்டகை மீதும் கற்கள் எறியப்பட்டன. பொது ஜனங்களுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இந்தக் காலிகள் உயிர் பிழைத்திருக்க வேண்டும்…