சுயமரியாதை - Yathaartham
07 05 2018 சுயமரியாதை - 14 தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தவர்கள் இரண்டு சுப்பையாக்கள். ஒருவர் என் அப்பா காரைக்குடி ராம சுப்பையா. இன்னொருவர் சுவரெழுத்து சுப்பையா. இருவருமே பெரியார் மீது அளவு கடந்த பற்றும், மதிப்பும் உடையவர்கள். அன்றும் இன்றும் பெரியாரிடம் மாறாத பற்றுக் கொண்ட 'முரட்டுப் பற்றாளர்கள்' பல்லாயிரவர் உண்டு. அய்யா இறந்தபின்னும், நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஓரிடத்தில் பதிவு செய்துள்ளார். "பெரியார், கூட்டங்களில் மாலைகளைப் போடும் சடங்குகளை வீண் விரயம் என்று கூறினார். அதற்குப் பதிலாக நிதி தரும் வழக்கம், திராவிட இயக்க மேடைகளில் அறிமுகமானது. பெரியாருக்கு, மாலைக்குப் பதிலாக ஒரு ரூபாய் நிதி அளிக்கும் தோழர்கள் ஏராளம். பெரியார் மறைந்து உயிரிழந்த நிலையில் சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி அரங்கில்…
30 04 2018 சுயமரியாதை - 13 அச்சம் விடுக! அறிவு பெற்றெழுக!! சமூக நீதிச் சிந்தனைகளோடு பகுத்தறிவையும் பெரியார் சேர்த்துக் கொண்டபோது இம்மண்ணில் சுயமரியாதை இயக்கம் பிறந்தது என்றால், அதற்கு முன் பகுத்தறிவுச் சிந்தனைகளே தமிழ்நாட்டில் இல்லை என்று பொருள் ஆகாது. உலகம் தோன்றிய விதம் குறித்து, "நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்" என்று தொல்காப்பியம் கூறுவதே அறிவியல் வழிப்பட்ட சிந்தனைதான். "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்" "எப்பொருள் எத்தன்மைத் தாயினும்" அவற்றின் "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்னும் திருக்குறள் பகுத்தறிவுச் சிந்தனை உடையதே. அடுத்தடுத்து வந்த தமிழ் இலக்கியங்களிலும் பகுத்தறிவுக் கருத்துகள் அங்குமிங்குமாக இடம்பெற்றே உள்ளன. எனினும் இலைமறை காயாக இல்லாமல் நேரடியாகவும், பகுத்தறிவுச் சிந்தனைகளை ஓர் இயக்கமாகவும் கொண்டு சென்ற பெருமை பெரியாரையே சேரும். தன் 70ஆவது…
23 04 2018 சுயமரியாதை - 12 சமூக ஆவணம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் உலகம் முழுவதும் குறிக்கத்தக்க பல மாற்றங்கள் நடைபெற்றன. இருண்ட உலகத்தின் மீது ஒளி படர்ந்த காலம் என்று அதனைக் கூறலாம். 1855-60 கால கட்டத்தில்தான், மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்ட பொதுவுடமைக் கட்சி அறிக்கை, டார்வினின் பரிணாமத் தத்துவம் ஆகிய இரண்டும் வெளியாயின. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின் விளக்குகள் நடைமுறைக்கு வந்தன என்றாலும், மின்சாரம் பற்றிய தேடலும், ஆராய்ச்சிகளும் 1850களில் தொடங்கி விட்டன. அறிஞர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் 1856இல் வெளிவந்தது. அது வெறும் நூல் அன்று. 'நூல்களின்' ஆதிக்கத்தைப் புரட்டிப்போட்ட சமூக வரலாற்று ஆவணம். கால்டுவெல்லின் நூல் இரு பெரும் செய்திகளை உலகறியத் தந்தது. இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமற்கிருதமே தாய்…
16 04 2018 சுயமரியாதை - 11 பற்றி எரியும் நெருப்பு! இருவேறு மதங்களுக்குள்தான் மோதல் நடைபெறும் என்றில்லை. ஒரே மதத்திற்குள்ளேயே கடும் போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன., நடைபெற்றுக் கொண்டும் உள்ளன. சிலுவைப் போர், சன்னி-ஷியா மோதல்கள், சைவ-வைணவச் சண்டைகள் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்றும் கூட குஜராத்தில் நாம் காணும் தலித் எழுச்சி, ஒரே இந்து மதத்துக்குள்ளேயே நடக்கும் பெரும் யுத்தம்தானே! குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், உனா என்னும் இடத்தில்தான் சென்ற மாதம் 11 ஆம் தேதி,இறந்த மாட்டுத் தோலை உரித்தார்கள் என்ற குற்றம் சாற்றி, நான்கு இளைஞரகளைச் சங்கிலியால் கட்டி வைத்து, இரும்புக் கம்பிகளால் "கோ ரக்ஷன் சமிதி" (பசுப் பாதுகாப்புக்கு குழு) அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்தார்கள். அடித்தவர்கள், அடிபட்டவர்கள் இருவருமே இந்து மதத்தினர்தாமே! இந்து மதத்தில், மதத்தை விட,…
09 04 2018 சுயமரியாதை - 10 சைவம் காத்த சமரர் வள்ளலார் மீது மட்டுமின்றி, சைவ சமய விதிகளைச் சரிவரப் பின்பற்றாத சைவர்கள் மீதும் ஆறுமுக நாவலர் கடுங்கோபம் கொண்டார். சைவ ஆகம விதிகளின்படியே எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால்தான் "நாவலர்" என்னும் பெயரைத் திருவாவடுதுறை ஆதினம் அவருக்கு வழங்கிற்று. யாழ்ப்பாணத்திலேயே பல சைவக் கோயில்கள் ஆகம விதிப்படி செயல்படவில்லை என்பதைத் தன்னுடைய "யாழ்ப்பாணச் சமய நிலை" என்னும் நூலில் அவர் விளக்கினார். நாவலர் வாழ்ந்த காலம், ஆங்கிலேயர்களின் காலம் என்பதை நாம் அறிவோம். அதனால் அப்போது கிறித்துவ சமயம் விரைந்து பரவிக் கொண்டிருந்தது. கல்விக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவிய கிறித்துவ மதத்தினர் மக்களை வெகுவாகக் கவர்ந்தனர். அந்த மதத்தை எதிர்த்தும் நாவலர் அங்கு கடுமையாகப் போராடினார். அவருடைய வாழ்க்கை…