சுயமரியாதை - Yathaartham
02 04 2018 சுயமரியாதை - 9 நாவலரும் வள்ளலாரும் வள்ளலார் குறித்து நாம் பேசும்போது, யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் குறித்தும் சேர்த்தே பேசுவதுதான் சரியானதாக இருக்கும். இரண்டு பேரும் ஒத்த வயதுள்ளவர்கள். ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். 1822இல் நாவலரும், 1823இல் வள்ளலாரும் பிறந்தனர். நாவலருக்கு ஓராண்டு பின்னே பிறந்து, அவருக்கு 5 ஆண்டுகள் முன்னே மறைந்தார் வள்ளலார். இருவரும் தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் மாறாத பற்றுடையவர்கள் என்பதில் எவர் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருவரும் சைவ மதத்தில் ஆழக் கால் ஊன்றி நின்றனர் என்பது இன்னொரு ஒப்புமை. ஆனால், வள்ளலாரின் இறுதிக் காலத்தில் அவரிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதனை அவரே குறிப்பிட்டுள்ளார். "சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க…
26 03 2018 சுயமரியாதை - 8 ஜாதி ஒழிப்பில் மூன்று வகையினர் 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் திடீரென எழுந்த இடங்கை-வலங்கைப் பிரிவுகள், 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமாகவே ஓய்ந்துவிட்டன. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் இம்மண்ணில் ஆட்சி செலுத்திய அப்பிரிவுகளின் தோற்றம், மறைவுக்கான காரணத்தை இன்றும் வரலாற்றாசிரியர்களால் வரையறுத்துக் கூற முடியவில்லை. இன்றும் அது புரியாத புதிராகவே உள்ளது என்றுதான் டாக்டர் கே.கே. பிள்ளை போன்றவர்களே சொல்கின்றனர். அப்பிரிவுகள் மறைந்தாலும், ஜாதிச் சண்டைகள் மறையவில்லை. நாகரிகமும், அறிவியலும் வளர்ந்துள்ள இன்றைய நூற்றாண்டிலும் மேலும் மேலும் அவை இறுக்கம் பெற்றே திகழ்கின்றன. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் ஜாதி மோதல்கள் கூடிக் கொண்டுதான் போயின. அவற்றிற்கான எதிர்வினைகளும் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. எனினும், ஜாதிக்கு எதிரான போக்குகளில் மூன்று வகைகள் உள்ளன என்று கூற வேண்டும்.…
19 03 2018 சுயமரியாதை - 7 இடங்கை - வலங்கை பெரியாருக்கு முன்பும் கடவுள் மறுப்புக் கோட்பாடுகள் இருந்துள்ளன என்றாலும், அவற்றிற்கும், இதற்கும் வேறுபாடு உண்டு என்பதைப் பார்த்தோம். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது ஜாதி மறுப்பையும், சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதையும் பார்த்தோம். ஆனால் ஜாதி மறுப்பும் கூடப் பெரியாரிடமிருந்துதான் தொடங்கிற்று என்று சொல்ல முடியாது. அவருக்கு முன்பும் அது குறித்த செய்திகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலேயே வருணப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொருளதிகாரம், மரபியலில் உள்ள பல நூற்பாக்கள் வருணம் பற்றிப் பேசுகின்றன. "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க் குரிய" என்னும் நூற்பா தொடங்கிப் பல நூற்பாக்களில் அரசன், வைசியன், உழுதூண் மக்கள் போன்ற சொற்களைக் காண முடிகிறது. இவையெல்லாம் இடைச் செருகல் என்று கூறும் தமிழ் அறிஞர்கள்…
12 03 2018 சுயமரியாதை - 6 வேர்களைத் தேடிய பயணம்! சமத்துவம்தான் பெரியாரின் அடிப்படை நோக்கம் என்றால், அந்த வேலையைப் பார்க்காமல், ஏன் கடவுள் மறுப்புப் பரப்புரையில் அவர் இறங்கினார்? ஏன் மதங்களுக்கு எதிராக - குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக - காலம் முழுதும் எழுதியும், பேசியும் வந்தார்? இப்படித்தான் பலரும் கேட்கின்றனர். சாதி, மதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்ததுதான் அதற்கான காரணம். அதிலும் இந்து மதம் என்பது வருண-சாதி பிரிவுகளின் உற்பத்தித் தளமாக இருக்கின்றது. அதனால்தான் இந்து மதம் வேர் கொண்டுள்ள இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டுமே ஜாதி உள்ளது. வேறு மதங்களிலும் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கும் ஜாதிக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கத்தோலிக்கம், புராடஸ்டண்ட் ஆகிய பிரிவுகளும், சன்னி, ஷியா போன்ற பிரிவுகளும்…
05 03 2018 சுயமரியாதை - 5 யாருக்கேனும் கெடுதல் செய்தோமா? சாதிய ஏற்றத்தாழ்விற்கு இந்துமதமும், கடவுளும்தான் அடிப்படை என்று உணர்ந்த பெரியார், அவ்விரண்டையும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார். கடவுள், மதம் இரண்டினாலும் பயன் பெறுகின்றவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் அவர்களைக் குறி வைத்துத் தாக்கினார். மற்றபடி யார் மீதும் எந்தத் தனிப்பட்ட வெறுப்பும் பெரியாருக்கு இருந்ததில்லை. இதனை அவரே கூறியுள்ளார். நமது நாட்டில் சாதிக் கொடுமையும் பிறவியினால் உயர்வு அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும்" என்று கூறும் பெரியார், அதனையே தன் சுயமரியாதை இயக்கத்தின் உயிர்க் கொள்கையாக ஆக்கினார். சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு யார் காரணம் என்பது குறித்தும் அவர் எழுதினார். "கோயில்களிலும், தீர்த்தங்களிலும், நதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், வாசம் செய்யும் தெருக்களிலும், ஓட்டல்களிலும், காபிக் கடைகளிலும் பிராமணர், சூத்திரர் என்கிற பிரிவும், முறையே உயர்வு தாழ்வு…