சுயமரியாதை - Yathaartham
24 09 2018 சுயமரியாதை - 39 "மடையர்கள், வஞ்சகர்கள், மடச்சாம்பிராணிகள்" 1937-39இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பொதுவுடைமைக் கட்சியினர், பிரிட்டிஷ் ஆதரவு நிலை, பிரிட்டிஷ் எதிர்ப்பு நிலை என இரண்டாகப் பிரித்துப் பார்த்தனர். இந்தி எதிர்ப்பு என்பது மறைமுகமான வெள்ளையர் ஆதரவு என்று தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். 11.06.1938 இல் ஜனசக்தி வெளியிட்ட அவர்களின் கட்சி நிலைப்பாட்டைச் சற்று நாம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தி எதிப்பாளர்களின் உண்மையான நோக்கம் அதுவன்று எனக் கூறும் ஜனசக்தி, "இந்தச் சாக்கில் காங்கிரஸை எதிர்த்து, ஏகாதிபத்தியத்திற்கு நல்ல பிள்ளைகளாக நடப்பதுதான் அவர்களுடைய உண்மையான முயற்சி" என்கிறது. ஆதலால் அவர்களை பற்றிய கடுமையான விமர்சனம் அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிரஞ்சீவிப் பட்டம் கட்டி அதன் குடை நிழலிலேயே இந்நாட்டார் சுதந்திரத்தையும், சுபீட்சத்தையும் அள்ளி அள்ளி அனுபவிக்கலாம் என…
20 09 2018 சுயமரியாதை - 38 இந்தியை எதிர்த்த செந்தமிழ் நாடு! 1936ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் அரசியல் விடுதலையே முதன்மையானது என்று கருதிய காங்கிரஸ், பொதுவுடைமையினர் ஓர் அணியாகவும், சமூக விடுதலையே முதல் தேவை என்று எண்ணிய நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தினர் இன்னொரு அணியாகவும் பிரிந்ததோடல்லாமல், இரு அணிகளும் ஒன்றையொன்று கடுமையாக எதிர்த்தும் நின்றன. இந்தச் சூழலில், 1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் நிலையை முற்றிலுமாக மாற்றிப் போட்டன.ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி, தேர்தலில் தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ராஜாஜி தமிழ்நாட்டின் பிரதமர் (அப்போது முதலமைச்சர் பதவி என்பது பிரிமியர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது) ஆனார். அவரது தலைமையில், பிரகாசம், சுப்பராயன், டி.எஸ்.எஸ். ராஜன், எஸ்.ராமநாதன் (பெரியாரோடு மிக நெருக்கமாக இருந்த அதே ராமநாதன்தான்), முனுசாமிப் பிள்ளை, கோபால்…
16 09 2018 சுயமரியாதை - 37 முதலும் கடைசியுமாய் ஒரு மாநாடு! சுயமரியாதை இயக்கம் தந்த எந்த விளக்கத்தையும் ஜீவா உள்ளிட்ட தோழர்கள் ஏற்கவில்லை. இதற்கிடையே, 1935 நவம்பரில் நீதிக்கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பெரியாரின் திட்டத்தைச் சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்வதாக நீதிக்கட்சி அறிவித்தது. 'விடுதலை' ஏடு நாளேடாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுவேலைத் திட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பெரியாரும் ஒருவராக நியமிக்கப்பட்டது, சிங்காரவேலர், ஜீவா போன்றோரிடம் பெரும் சினத்தை உருவாக்கியது. இப்படிப்பட்ட குழப்பமான நேரத்தில், 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருத்துறைப்பூண்டியில் சுயமரியாதை மாநாடு கூடிற்று. அந்த மாநாட்டில், மேடையில் பெரியாரை வைத்துக் கொண்டே, "இன்றைய இளைஞர்கள், தோழர் ஈ.வெ.ரா.வின் தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேறட்டும்" என்று ஜீவா பேசினார்.அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் புதுக்கோட்டை முத்துச்சாமி…
10 09 2018 சுயமரியாதை -36 எது முதல் தேவை? தோழர் ஜீவா அவர்கள் எழுதியுள்ள 'ஈரோட்டுப் பாதை' என்னும் கட்டுரை குறு நூலாகவே வெளிவந்துள்ளது. பேராசிரியர் வீ.அரசு தொகுத்துள்ள ப.ஜீவானந்தம் ஆக்கங்கள் - பகுதி ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது. அது ஒரு கார சாரமான கட்டுரை. சிலவிடங்களில், ஜீவாவின் எழுத்தா இது என்று ஐயப்படக்கூடிய அளவிற்குத் தரம் சற்றுத் தாழ்ந்தும் காணப்படுகிறது. நீதிக்கட்சியுடன் சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்பட்ட உறவை ஜீவா மிகக் கடுமையாகக் கண்டிக்கிறார். 'சாக்கடையில் சறுக்கி விழுந்தார் ஈ.வெ.ரா' என்று கூட எழுதுகின்றார். காங்கிரசை விட்டுப் பெரியார் வந்தது முதலே தவறான பாதையில்தான் ஈரோட்டுப் பாதை அமைந்துள்ளது என்பது போலச் சில செய்திகள் காணக்கிடக்கின்றன. "ஈ.வெ.ரா.வோ வகுப்புவாதச் சகதியை அள்ளிக் காங்கிரசின் முகத்தில் எறிந்துவிட்டுத் தேசிய ஸ்தாபனத்தைத் துறந்தார்" என்று 1925ஆம் ஆண்டு பெரியாரின் நிலைப்பாட்டைப் 10…
06 09 2018 சுயமரியாதை - 35 நீதிக்கட்சியா, காங்கிரஸா - எது சிறந்தது? தோழர் சிங்காரவேலரின் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, இறுதியில் அது குறித்த தன் கருத்தைப் பெரியார் கூறியிருந்தார். அந்தக் குறிப்பு, "சரியாகவோ, தப்பாகவோ ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தம் 6, 7 வருடங்களாக இருந்து வருகிறது" என்று தொடங்குகிறது. எனவே நீதிக்கட்சியுடனான உறவை அவர் முழுமையாக நியாயப்படுத்தவில்லை.. இருப்பினும், காங்கிரஸ் கட்சி உறவை விட, நீதிக்கட்சி உறவு குறைவானது இல்லை என்று எழுதுகிறார்.ஜஸ்டிஸ் கட்சியில் பண ஆதிக்கம் இருக்கிறது என்பது உண்மைதான். காங்கிரஸ் கட்சியிலோ சாதி ஆதிக்கம் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களால் பணத்தைத் தூக்கி எறிய முடியவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் பூணூலைத் தூக்கி எறிய முடியவில்லை. இவ்வாறு இரண்டு கட்சிகளையும் ஒப்பிட்டு எழுதிவிட்டு, இறுதியில் தெளிவாக, " என்னைப் பொறுத்தவரை பணக் கொடுமையை…