பார்வை - Yathaartham
02 08 2018 குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்! வள்ளுவரின் மூன்று பிரிவு வேறு! வடவரின் நான்கு பிரிவு வேறு!மற்றொன்றும் நீங்கள் கவனிக்க வேண்டும். “தர்மார்த்த காமம்’’ என்பதைத்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற தத்துவமாக மாற்றிச் சொல்லியிருக்கின்றார் என்று சிலர் வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டிருக்கிறார்கள். அறம், பொருள், இன்பம் என்பன வேறு. தர்ம- அர்த்த - காம- மோட்சம் என்பன வேறு. உதாரணமாகக் காமம் என்பதை இன்பம் என்று எவனாவது கூறுவானேயானால், அக்கூற்றை அறிவுலகம் ஏற்க முடியுமா என்று கேட்கிறேன். காமத்தின் தன்மை என்ன? இன்பத்தின் நிலை என்ன? காமம், கெட்ட குணங்களில் ஒன்று. ஆசை அல்லது ஒரு நோய் (பலவீனம்). காமம் என்பது கண்டவுடன் காட்சி விகாரத்தால் தோன்றுவது. காமம் என்பதானால், கண்ட இடமெல்லாம் கண்டவாறு, மனத்தின் கண்ணே காட்சியளித்து, வெறியையுண்டாக்கி, நேர்மையை…
01 08 2018 வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள் முன்னுரைஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பாக முதன்முதலில் வருண அமைப்பை எதிர்த்து பகுத்தறிவுச் சிந்தனை அடிப்படையில் குரல் கொடுத் தவர் கவுதம புத்தர் (கி.மு.500) ஆவார். அவரைத் தொடர்ந்து மகாவீரர் திருவள்ளு வர் (கி.மு.31) அதேபோன்று 900 ஆண்டு களுக்கு முன் வைதீக மத ஆச்சாரங் களையும் தீண்டாமைக் கொடுமைகளை யும் கண்டித்தவர் ஆதிசங்கரரும், இராமா னுஜரும். தொடர்ந்து கபிலர், திருமூலர், அசோகர் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகளா வர். அந்த வரிசையில் 19ஆம் நூற்றாண்டில் வருண அமைப்பை எதிர்த்தும் மனித நேயத்தை வலியுறுத்தியும் சமத்துவ - சமதர்ம - பொது உடமை - சீரதிருத்தக் கருத்துகளையும் மூடநம்பிக்கைக்கு எதி ரான பகுத்தறிவுச் சிந்தனை கருத்துகளை யும் தமது…
28 07 2018 நெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்! “விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயன் இல்லை.’’ ஆகவே, நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கை விடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள். புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள். புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள். இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரச்சாரம் என்றால், புரிந்தாலும், புரியா விட்டாலும் தலைவணங்கி கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவத்தனமான, மானமற்ற முட்டாள் தனத்தை விட்டொழியுங்கள். அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குக் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதை பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை…
26 07 2018 சமூக சீர்திருத்தவாதி வள்ளலார் அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5ஆம் நாள் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூர் என்கின்ற கிராமத்தில் இராமய்யாப் பிள்ளை சின்னம்மையார் ஆகியோருக்குப் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே இவரின் தந்தை இறந்தார், இவரின் தாயார் சென்னை அருகே அமைந்துள்ள பொன்னேரியில் குடியேறினார்.சென்னையில் ஏழுகிணறு பகுதியில் எண்.39, வீராசாமிப் பிள்ளைத் தெருவில் தனது அண்ணன் சபாபதி குடியிருந்த வீட்டின் மாடியில் இராமலிங்கம் பிள்ளை கல்வி கற்கத் தொடங்கினார். ஆனால் கல்வியில் நாட்டமில்லை. முருகக் கடவுளை வணங்குவதிலேயே காலத்தைக் கழித்தார். சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பல பாடல்களைப் பாடியுள்ளார். அப்பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகின்றன.இராமலிங்கரின் அண்ணன் சபாபதியும் அண்ணியும் மூத்த சகோதரியின் மகள் தனக்கோட்டியை இராமலிங்கருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.…
21 07 2018 அறிவுலக மாமேதை இங்கர்சால் நினைவு நாள்: ஜூலை 21 வை.கலையரசன் இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833-ஆம் வருடம் ஆகஸ்டு 11-ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தில் ட்ரெஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தையான ரெவரெட் ஜான் என்பவர் ஒரு பாதிரியார். அவருடைய தந்தை வேதப் புத்தகத்தின் (ஙிவீதீறீமீ) ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறவராய்க் கடவுள் நம்பிக்கையோடு இருந்தவர். இங்கர்சாலை அவர் கண்டிப்புடனேயே வளர்த்தார். இங்கர்சாலும் தகப்பனார் கட்டளைப்படி பைபிளை வரிவரியாகவே வாசித்தார். அவர் மிக்க அறிவாளியாக இருந்தபடியால், படிக்கப் படிக்கச் சந்தேகங்கள் அவருக்கு அதிகமாகவே ஏற்பட்டன. ஆனாலும், அவரது தந்தை இவ்விஷயத்தில் அவரை அடித்துத் தொந்தரவு செய்து, அவரது மூளையைக் கெடுக்காமல், அவரது மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும்படிச் சொல்லிவிட்டார். இங்கர்சாலுக்குப் பள்ளிப் படிப்பு குறைவு. ஆனால், நினைவாற்றல் மிக்கவர், பேசுவதிலும், கதை…