15 06 2015 The greatest Ceylonese Leader was Sir Ponambalam Ramanathan By Hemantha Warnakulasuriya In the 2012 Gallup poll, conducted by the US in the Asian region, to find the chief executive with highest approval rating, President, Mahinda Rajapaksa, came third with a 91 percent approval rating. It was conducted by a US-based agency. When President Rajapaksa visited Rome, I had sleepless nights with Sri Lankans living all over Italy pleading with me to give them an opportunity to see him. A few years after his election as President another…
thinakkural.lk 04 08 2014 உலகத் தமிழரின் பேரபிமானம் பெற்ற "தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள் "தமிழ்த்தூது' தனிநாயகம் அடிகளைப் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்று பொதுவாகக் கூறலாம். எந்த வகையில் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று வினவினால் உடனே அவர்கள் கூறுவது. "உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை' ஆரம்பித்து வைத்தவர் என்றும், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த விழா ஒரு தமிழ் எழுச்சி விழாவாக நடந்தது என்பதுமாகும். தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி மகாகவி பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்' என்றும் தன்னுடைய கற்பனை வேட்கையைக் கவியாக வடித்துவைத்தான். இதே பாரதிதான் "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெறுவதற்கு…
20 05 2015 சேர் பொன்னம்பலம் இராமநாதன் சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு,…
22 04 2015 அமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு 2 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதொடர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். தொடர்.........
12 04 2015 அமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம் "தமிழனுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்ற தலைப்பில் 'சுதந்திரனி' ல் எழுதிய (29.09.48) அரசியல் கட்டுரைமூலம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் கவனத்தை ஈர்த்து அரசியலில் தளம் பதித்த திரு அ.அமிர்தலிங்கத்தின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு, ஈழத்தமிழர் அரசியல் வாழ்விலே பின்னிப் பினைந்தது. தமிழ்ப் பிரதேசங்களின் மூலைமுடுக்கெல்லாம் அவர் பயணித்திருக்கிறார். பொதுமேடைகளே அரசியல் போதனையின் களமாக அமைந்த நிலையினால் அமிர்தலிங்கத்தின் பொருள் பொதிந்த பேச்சுக்கள் அவரை தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக நிலைநிறுத்தின. ஈழத்தமிழ்ர் பிரச்சனை இந்தியாவின் அனுசரணையுடன்தான் தீர்க்கப்படமுடியும் என்பது அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் சிந்தனையாக இருந்தது. தமிழகத் தலைவர்களுடனும் மத்திய அரசுடனும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்களை ஆணித்தரமாகவும், அவர்கள் அதனைப் புரணமாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடனும் எடுத்துரைத்திருக்கிறார். ஈழத்தமிழ்ர் பிரச்சனையை…