கறுப்பு இன மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தமிழர்களுக்காக நீரிக்கண்ணீர் வடிக்கிறது

thinakaran.lk  11 05 2014 

கறுப்பு இன மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தமிழர்களுக்காக நீரிக்கண்ணீர் வடிக்கிறது அமெரிக்காவில் டெக்ஸஸ் சிறைச்சாலையில் சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்டு அங்குள்ள சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவதுடன் சித்திரவதைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் 2007ம் ஆண்டில் மாத்திரம் இந்த டெக்ஸஸ் சிறைச்சாலையில் 14 கைதிகள் உயிர்துறந்தனர். மனித உரிமைகள் குறித்து உலகத்துக்கு உபதேசம் செய்யும் நல்லாசானைப் போல் வேஷமணிந்து இலங்கை போன்ற சிறிய நாடுகளை துன்புறுத்தும் அமெரிக்க ஆட்சியாளர்கள் இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் மனித உரிமை மீறப்படுகின்றன, யுத்தக் குற்றங்கள் இடம்பெறுகின்றன என்ற ஆதாரமற்ற குற்றங்களை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை நிறை வேற்றுவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் இவ்விதம் மனித உரிமைகள் பேணப்ப டுகின்றனவா என்பதை முதலில் திரும்பிப் பார்த்துச் செயற்படுவது நல்லது.

 

அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல் சாசனம் சாதாரண கைதிகள் கொடிய முறையிலும் அசாதாரண முறையிலும் தண்டிக்கப்படுவதை தடை செய்கின்றது. டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தின் சட்டபீடம் மனித உரிமைகள் மீறல் பற்றி நடத்திய ஆய்வையடுத்து வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸஸ் பிரதேசம் அமெரிக்காவிலேயே அதிக உஷ்ண நிலையை கொண்டுள்ள பகுதியாகும். இந்த சிறைச்சாலையில் குளிரூட்டும் சாதனங்களோ, மின் விசிறிகளோ பொருத் தப்படாத காரணத்தினால் இங்குள்ள 15 ஆயிரம் கைதிகள் இரவும் பகலும் உஷ்ண நிலையை தாங்க முடியாது நோய்வாய்ப் பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிப்பதற்கும் எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திற்கு எத்தனையோ முறைப்பாடுகள் செய்திருந்தும் கூட, அந்த அரசாங்கம் தங்கள் நாட்டிலுள்ள சிறைக்கைதிகளின் வேதனைகளை பொருட்படுத்தாமல் இருந்து வருவதாக அமெரிக்காவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்ற நாடுகளில் சிறுபான்மை மக்களை அதுவும் தமிழ் மக்களை அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணையை நிறைவேற்றிய அமெரிக்கா தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை கறுப்பு இன மக்களை மிக மோசமாக இனவாதத்தின் அடிப்படையில் துன்புறுத்தி வருவதுடன் அந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகளை கூட பெற்றுக் கொடுக்க மறுக்கின்றது. கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அந்த மனிதர் கூட அங்கு அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் அமெரிக்க காங்கி ரஸ¤க்கும் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபைக்கும் அடி பணிந்து அவர்களின் அங்கீகாரமின்றி எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத அதிகாரமற்றவராகவே இருக்கிறார். இவ்விரு சபைகளிலும் பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் அமெரிக்காவின் வெள்ளை இன மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கறுப்பு இன மக்களுக்கு அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்குமிக்க பதவிகள் கிடைப்பது அந்நாட்டில் அரிதாகவே இருக்கிறது. பராக் ஒபாமா போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய சிறு எண்ணிக்கையிலான அமெரிக்காவின் கறுப்பு இன மக்களுக்கே அந்நாட்டில் உயர் பதவிகளும் செல்வாக்கும் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மை கறுப்பு இன மக்கள் அந்நாட்டில் ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வசதிகளற்ற சிறிய வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால் கறுப்பு இன இளைஞர்கள் அங்கு வருமானமற்ற காரணத்தினால் திருட வேண்டிய அவலநிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

வெளியுலகத்துக்கு தங்களை ஒரு ஜனநாயக நாடு என்று வேஷம் போடும் அமெரிக்க ஆட்சியாளர்கள் உண்மையிலேயே அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை கொடுக்காமல் அவர்களை அடிமைகள் போல் நடத்திவருவதை இன்று உலகம் அறியாது இருக்கிறது. அமெரிக்காவின் ஊடகங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பொது ஸ்தாபனங்கள் அனைத்துமே அந்நாட்டின் வெள்ளை இன மக்களின் கஷ்டங்களை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்ட விரும்பாமல் கறுப்பு இன மக்களின் பிடியில் இருந்து வருவதனால் அவை கறுப்பு இன மக்களின் கஷ்டங்களை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்ட விரும்பாமல் கறுப்பு இன மக்களின் கஷ்டங்கள் பற்றி வெளிவரும் செய்திகளை தணிக்கை செய்து விடுகிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் தங்கள் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தங்களின் இது போன்ற சமூக விரோத செயல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஈராக்கை சிறப்பான முறையில் பல்லாண்டு காலம் ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி சதாம் ஹுசைன் என்றாவது ஒருநாள் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அஞ்சிய அமெரிக்க அந்நாட்டில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்று போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதனை தங்களின் கைப்பிள்ளைகளாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிறைவேற்றியது.

ஐக்கிய நாடுகள் சபையின் இரசாயன ஆயுதங்கள் பற்றிய நிபுணர்களை ஈராக்கிற்கு அனுப்பி சோதனையிடுவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிக்கு சதாம் ஹுசைன் முழுமையாக தனது ஒத்துழைப்பை வழங்கினார். அங்கு சென்ற ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு ஈராக்கில் தாங்கள் சென்ற இடங்களில் இரசாயன ஆயுதங்களை காணவில்லை என்று கையை விரித்து விட்டார்கள் என்றாலும் அமெரிக்கா சலிக்காமல் ஈராக்கிற்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்தியது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று பிரச்சினையில்லாமல் இயங்குவதற்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு நிதி வழங்க முடியாது என்று நிதியுதவியை நிறுத்தி விட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்கு கூட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இயங்க முடியாத ஸ்தம்பித நிலையை அடைந்துவிடும்.

இதனால் அமெரிக்கா உலகில் தனிக்காட்டு ராஜாவைப் போன்று தான் விரும்பியபடி மற்ற

 நாடுகளை துன்புறுத்தி தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் உலகில் பெருக்கிக் கொள்ளும் சதி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இவ்விதம் அமெரிக்கா ஈராக்கில் தலையிட்டு இறுதியில் அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து ஈராக்கில் ஒரு பயங்கரமான உள்நாட்டு யுத்தத்தை தன்னுடைய நலனை பேணுவதற்காக ஆரம்பித்தது. இறுதியில் சதாம் ஹ¥சைனை கைது செய்து போலியான நீதி விசாரணையின் மூலம் அந்த 

நல்ல மனிதனை தூக்கிலிட்டு கொலை செய்தது.

இதே அடிப்படையிலேயே லிபியாவின் தலைவர் கடாபியையும், பதவியிறக்க வேண்டும் என்ற தன்னுடைய சதி திட்டத்தை நிறைவேற்றி அந்நாட்டையும் இன்று உள்நாட்டு யுத்தத்தின் மூலம் சின்னாப்பின்னப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் கூலிப் படையினர் இறுதியில் கடாபியையும் சுட்டுக் கொன்றனர். ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு யுத்தத்தின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா இப்போது தனது கவனத்தை இன்னுமொரு பலம் வாய்ந்த அரபு நாடான எகிப்தின் மீதும் செலுத்தி இருக்கிறது. எகிப்தின் பலம் வாய்ந்த தலைவராக இருந்தவர்களை அங்குள்ள தங்கள் ஒற்றர் படையின் மூலம் மக்களை தூண்டிவிட்டு அந்த நாட்டையும் இன்று சீர்குலைத்து வருகிறது. அமெரிக்கா இவ்விதம் உலகில் அமை தியாக இருந்துவரும் நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்கும் தனது சதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சில நாடுகளுக்கு நிதியுதவி செய்து அவற்றை தனது கையாட்களாக பயன்படுத்தி வருகின்றது. அந்த பணியை பிரிட்டிஷ் அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்திற்கு சிறப்பாக செய்து கொண்டு வருகின்றது.

அமெரிக்காவின் தூண்டுதல் காரண மாகவே பிரிட்டிஷ் அரசாங்க தலைவர்கள் இன்று இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களை ஆதரிப்பது போன்று பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை விடயத்தில் நடந்து கொண்டாலும் அந்த அரசாங்கம் அமெரிக்காவின் உத்தரவையே இவ்விதம்

 நிறைவேற்றி எங்கள் நாட்டிற்கு தீங்கை ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இவ்விதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூலம் எங்கள் நாட்டை துன்புறுத்துவதற்கு சதி திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொண்டாலும் எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எந்தவொரு சவால்களையும் எதிர்நோக்கி வெற்றி காணும் தலைவர்கள் என்ற முறையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தை நிறைபெறச் செய்வதுடன் இந்நாட்டு மக்களிடையே நல்லிணக் கப்பாட்டை வலுப்படுத்தி தொடர்ந்தும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு இலங்கையை அடுத்த சில வருடங்களுக்கு தேனும் பாலும் ஊற்றெடுக்கும் ஒரு சொர்க்க பூமியாக மாற்றிவிடுவார் என்று நாம் நம்பிக்கை வைக்க முடியும். எஸ். தில்லைநாதன்...