200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்

13 06 2015

200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில் 

இந்த உல­கத்தில் எத்­த­னையோ வகை­யான தொழில்கள் இருக்­கின்­றன. எல்­லாத்­தொ­ழி­லுக்கும் புரோ­மோஷன் என்ற அம்சம் உள்­ளது. ஆனால் இரு­நூறு வரு­டங்­க­ளாக பதவி உயர்வே இல்­லாத ஒரு தொழில் என்றால் அது நிச்­சி­ய­மாக கொழுந்து பறித்தல் தொழில் தான், ஏனெனில் அன்று காடு­களை அழித்து தேயிலை கன்­று­களை நட்­டது இரா­ம­சாமி என்றால் கொழுந்து பறித்­தது காமாட்சி. இன்று வரை காமாட்­சியின் கொள்­ளுப்­பே­ரப்­பிள்­ளையும் கொழுந்து பறித்­துக்­கொண்­டி­ருக்க அன்று கன்­று­களை நட்ட இரா­ம­சா­மியின் வம்சம் இன்று வரை கவ்­வாத்து வெட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. அப்­ப­டி­யானால் இந்த உலகில் புரொ­மோஷன் இல்­லாத தொழில் இது தானே?

புரோ­மோ­ஷ­னுக்கு தடை யார்? இன்று எந்த தொழிலை எடுத்­துக்­கொண்­டாலும் வெட்டு குத்­து­க­ளுக்கு பஞ்­ச­மே­யில்லை. காயம் உண்­டாக்­காமல் இரத்தம் வராமல் ஒரு­வரை வெட்­டு­வது எப்­படி என்றால் நம்­ம­வர்­க­ளுக்கு பேரா­சி­ரியர் பட்­டங்கள் கொடுக்க வேண்டும். ஆனாலும் இந்த தேயிலை தொழிற்­று­றையை பொறுத்­த­வரை தொழி­லா­ளர்­க­ளுக்கு எம­னா­கவும் எதி­ரி­க­ளா­கவும் இருப்­பது தோட்ட நிர்­வாகம், தொழிற்­சங்­கங்கள் , அர­சி­யல்­கட்­சிகள் ,அர­சி­யல்­வா­திகள் இவர்­களா? இல்லை முத­லா­வது பிர­தான காரணம் தொழி­லா­ளர்­களே தான். தேயிலை இருக்கும் வரை இந்த தொழி­லாளர் வர்க்கம் இருக்கும் அதன் மூலம் பணம் பார்க்­கலாம் கடன் கொடுக்­கலாம் என்ற நம்­பிக்கை உலக வங்­கி­யி­லி­ருந்து உள்ளூர் வங்கி வரை உள்­ளது. இன்று தேயிலை பறித்தல் செயன்­மு­றையின் நவீன தொழில்­நுட்­பத்தை காட்டி அதை தொழி­லா­ளர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுத்து இதோ புரொ­மோஷன் கொடுத்து விட்டோம் என மார்­தட்­டிக்­கொள்­கின்­றன சில நிர்­வா­கங்கள் வேறு என்­னென்ன வழி­களில் இந்த மக்­க­ளுக்கு புரொ­மோ­ஷன்கள் கிடைத்­துள்­ளன ?

இது வரை கிடைத்­தவை ஆரம்­பத்தில் வெள்ளைக்­கா­ரர்கள் கம்­ப­ளியும் சாக்கும் கொடுத்­தார்கள். குடி­யி­ருக்க லயன்­களும் வழங்­கி­னார்கள் ஒன்றும் இல்­லாத இந்த வர்க்­கத்­திற்கு அது முதல் புரொ­மோஷன். பின்பு தொழிற்­சங்­கங்கள் லயத்தின் கூரைகள் ஒழுகு­வ­தையும் தொழி­லாளர் பிள்­ளை­களின் மூக்கு ஒழு­கு­வ­தையும் மேடையில் பேசி எமது உரி­மை­களை பெற வேண்­டு­மானால் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் வேண்டும் என வாயில் எச்சில் ஒழுக பேசி­னார்கள். தமி­ழ­கத்தில் தீப்­பொறி ஆறுகம் என ஒரு பேச்­சாளர் இருந்­தாரே ? அவர் பேசத்­தொ­டங்­கினால் அனல் பறக்­குமாம். அதை­யொற்றி பேசப்போய் ஒரு சிலர் மைக்கை எச்­சிலால் நிறைத்­தார்கள். ஆனால் அங்கு ஒன்றும் நடக்­க­வில்லை. மாறாக இந்த மக்­களின் வாக்­கு­களை வாங்­கிக்­கொண்டு எம்.பி, பிரதி அமைச்சர்,அமைச்சர்,அமைச்­ச­ரவை அந்­தஸ்த்­துள்ள அமைச்சர் என்ற புரொ­மோ­ஷன்­களை படிப்­ப­டி­யாக அவர்கள் மட்டும் பெற்­றுக்­கொண்­டார்கள்.. ஒழுகும் லயன்­க­ளுக்கு கூரையும் இல்லை தொழி­லாளர் பிள்­ளை­களின் மூக்­கு­க­ளுக்கு துணித்­துண்டும் இல்லை.ஆனால் சந்தா என்ற பெயரில் ஒரு ஒப்­பந்த பிச்­சைக்கு சம்­மதம் வாங்­கப்­ப­டு­கி­றது.

கல்வி புரொ­மோஷன் அடுத்­த­தாக கல்­வி­பு­ரட்சி ஒன்றின் மூல­மா­கவே இந்த சமூகம் மீட்சி பெறும் என கட்­டி­டங்­களை கட்­டிக்­கொண்டே போனார்கள். பல­ருக்கு டீச்சர்ஸ் என்ற புரொ­மோஷன் இந்த சமூ­கத்­தி­லி­ருந்து கிடைத்­தது. ஆனால் அவர்­க­ளையும் மேலே படிக்­க­வி­டாது பார்த்­துக்­கொண்­டார்கள். அப்­ப­டியும் படித்து பட்டம் பெற்­ற­வர்­களை தமது கட்சி அர­சி­யலில் இணைத்­துக்­கொண்­டார்கள். இதனால் ஒரு கட்­டத்­திற்கு மேல் எவ­ருக்கும் போக­மு­டி­யாது போயிற்று. ஆங்­கி­லேயர் காலத்து பாட­சாலை கட்­டி­டங்­களை வைத்­துக்­கொண்டு தேசிய பாட­சாலை, மலை­யக பல்­க­லைக்­க­ழகம் என பேசி ஏனைய சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் கொமடி பீஸ் ஆனார்கள்.

வீடு புரொ­மோஷன் தொழி­லா­ளர்­க­ளுக்கு லயன் வாழ்க்­கை­யி­லி­ருந்து விடு­தலை பெற்­றுத்­தர வேண்டும் என ஒரு சிலர் வீறு­கொண்­டெ­ழுந்து இனி எவரும் லயம் என உச்­ச­ரிக்­கக்­கூ­டாது என உத்­த­ரவு போட்­டார்கள். தொழி­லாளர் குடி­யி­ருப்பு என அழைக்க வேண்­டுமாம். அதற்கு ஏற்­றாற்போல் “ குடி” இருப்­புக்­காக பாட­சா­லைகள், வீடு­க­ளுக்­குப்­ப­தி­லாக பல பார்கள் திறக்­கப்­பட்­டன. லயம் என சொல்­லக்­கூ­டாது அல்­லவா தோட்­டத்­த­லை­வர்மார் எங்­க­ளது வீடு நீண்ட பங்­களா ஆனால் கூரை மட்டும் ஒழுகும் என பெரு­மை­யாக பேச ஆரம்­பித்­தார்கள் , பேச வைத்­தார்கள். மாடி வீடு கட்­டித்­த­ருவோம் என முழங்­கி­ய­வர்கள் மல­ச­லக்­கூ­டங்­களை வௌிப்­பு­ற­மாக அதற்­குப்­பக்­கத்­தி­லேயே வரி­சை­யாக கட்டி வைத்­தார்கள். இரவு நேரத்தில் அவ­ச­ர­மாக மாடி­யி­லி­ருந்து படி­கட்டு வழி­யாக இறங்கி கத­வைத்­தி­றந்து வரு­வ­தற்கு கஷ்­டப்­பட்ட ஒரு சில தொழி­லா­ளர்கள் கதவை தாழ்ப்பாள் போடாமல் கீழ் அறை­யி­லேயே வாழ ஆரம்­பித்­தனர்.

காணி புரொ­மோஷன் பல கால­மாக பேசிக்­கொண்­டி­ருந்த காணி விடயம் தற்­போது இவர்­களின் தேர்தல் புரொ­மோ­ஷ­னுக்­காக டீட் என்ற பெயரில் வழங்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. ஏதோ கொடுத்­தார்கள் வாங்­கிக்­கொண்­டி­ருக்­கிறோம் என்ற ஆறுதல் மட்­டுமே தொழி­லா­ளர்­க­ளுக்கு. ஏழு பேர்ச் மட்­டும்தான் உங்­க­ளுக்கு நீங்கள் பாவிக்கும் மிகுதி நிலத்தை கொடுப்­பீர்­களா என்று கேட்டால் திரு திரு. ஒரு சில இடங்­களில் காணிக்கு மட்டும் பதவி உயர்வு கிடைத்­துள்­ளது. எப்­படி? இங்கு வீடு கட்­டப்­படும் என போர்ட் மாட்­டப்­பட்டு சில கற்­களும் ஊன்றி வைக்­கப்­பட்­டுள்­ளன. காடு மண்­டி­யி­ருந்த காணிக்கு போர்ட் புரொ­மோஷன்.

ஊதிய புரொ­மோஷன் இவை எல்­லா­வற்­றையும் விட தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கையை கொண்டு செல்ல உதவும் ஊதிய விவ­காரம் இருக்­கின்­றதே….இவர்­களின் சம்­ப­ளத்தை யார் யாரோ தீர்­மா­னிக்­கின்­றார்கள். ஏதா­வ­தொரு தொகையை பேசி முடித்தால் பேசி­ய­வர்­க­ளுக்கு அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரே­டி­யாக போனஸ் தொகை கிடைக்கும் வரை பேச்­சுகள் தொடர்­கின்­றன. எல்லா தொழில்­க­ளுக்கும் வருடம் ஒரு முறை இன்­கி­ரிமண்ட் வழங்­கப்­ப­டு­கி­றது, ஆனால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கோ இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை அடிப்­படை சம்­ப­ளத்தை கூட்­டு­வ­தற்கே போராட்டம் தான். சங்கு ஊதி வேலைக்­குச்­செல்லும் சமூகம் காலையில் பெரட்­டுக்­க­ளத்­திற்கு நேரத்­திற்­குச்­செல்ல வேண்டும் என

சங்கு ஊதி தொழி­லா­ளர்­களை எழுப்பும் பழக்கம் இன்றும் சில தோட்­டப்­ப­கு­தி­களில் உள்­ளது. அதுவும் சற்று தாம­த­மாக சென்றால் அன்­றைய வேலைக்கு சங்கு ஊதப்­பட்டு விடும்.180 வரு­டங்­க­ளாக இவர்­களின் வாழ்க்­கைக்கு சங்கு ஊதப்­பட்­டுக்­கொண்டே இருக்­கின்­றது என்ற சொல்­ல­லாமா? இதையும் சுட்­டிக்­காட்­டினால் அந்த வேலைக்கும் புரொ­மோஷன் கொடுத்து விடு­கிறோம் என்று கூறி காரை நிப்பாட்டி காலையில் ஹோர்ன் அடித்து தொழிலாளர்களை எழுப்புவார்களோ தெரியவில்லை.

சொந்தங்கள் இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கு சொந்தங்களாக பாம்பு,அட்டை,குளவிகள் ,பூச்சிகள், சிறுத்தைகள் ,பன்றிகள் மட்டுமே உறவாடிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில் இந்த அனைத்து உயிரினங்களின் குணங்களையும் கொண்டு இயங்கும் நபர்கள் சொந்தம் கொண்டாட வருவார்கள். ஆக இந்த மக்களின் நிலை இப்படி இருக்கும் போது இவர்களுக்கு வாழ்க்கையில் புரொமோஷன் என்றால் அது உழைத்து களைத்து மண்ணுக்கு உரமாகிய பின்பு கிடைக்கும் சொர்க்கம் சேர் கைலாசம் சேர் தானோ?

virakesari.lk 11 06 2015