11 05 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 109) ஜே.ஆரின் அச்சம் ஆறாம் திருத்தமும் தமிழ்த் தலைமைகளும் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, ஜே.ஆர் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்படி, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரப் பதவிகளிலுள்ளவர்கள், இலங்கையின் அரசமைப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் விசுவாசமாகவும், பிரிவினைக்கு, ஆதரவாகவோ, துணைபோகவோ மாட்டோம் என்று, சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு இல்லையெனில், அவர்கள் பதவிகளை இழக்கும் நிலையும், குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய நிலையும், ஆறாவது திருத்தத்தின் விளைவாக உருவாகியிருந்தது. ஆறாவது திருத்தத்தின் பின்னரான, தமது நிலைப்பாடு பற்றியும், எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றியும் கலந்துரையாடித் தீர்மானிப்பதற்காக, ஆறாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு தினங்களில், அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் 16 பேரைக் கொண்ட நாடாளுமன்றக்…
04 05 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 108) “கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும்  சரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம் 1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் முத்தெட்டுவேகம, ஆதங்கம் மிக்க உரையொன்றை ஆற்றியிருந்தார். 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்புக்கு, மார்க்ஸிய - இடதுசாரிக் கட்சிகளே காரணம் என்று கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய மூன்று கட்சிகளையும், ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தடை செய்திருந்த நிலையில், தமது கட்சி மீது சுமத்தப்பட்டிருந்த அபாண்டமான பழிக்கெதிராக, சரத் முத்தெட்டுவேகம, ஆதங்கம் மிக்க பேச்சொன்றை…
27 04 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 106) ஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் ஆறாவது திருத்தமும் பிரிவினையும் ஜனநாயகமும் 1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவால், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, இலங்கையின் ஆட்புலக் கட்டுக்கோப்பை மீறுவதற்கான தடையை, அரசமைப்பில் 157அ என்ற புதிய சரத்தை உள்ளிணைப்பதினூடாக அறிமுகம் செய்யப்பட்டது. சுருங்கக் கூறின், இலங்கையின் ஒற்றையாட்சியை சித்தார்ந்த ரீதியில், ஜனநாயக அரசியலின் மூலம் கூட, எதிர்க்க முடியாத நிலையை உருவாக்குவதே, இந்த அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தின் நோக்கம் ஆகும். இந்த ஆறாம் திருத்தத்தின் விளைவை, நாம் இன்று வரை கண்டுகொண்டே இருக்கிறோம். சந்திரசோம என்ற நபர், 2014 ஆம் ஆண்டு,…
20 04 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 105) ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த ஊடகத் தணிக்கை, உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்தினாலும், அதனால், வெளிநாட்டு ஊடகங்களின் வாயை அடக்க முடியவில்லை’ என்று இயன் குணதிலக, 1983 ‘கறுப்பு ஜூலை’ பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். ஆகவே, வெளிநாட்டு ஊடகங்கள், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ததோடு, ஜே.ஆர் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கையும் கடுமையாகச் சாடின. இதன் விளைவாக, ஜே.ஆர் அரசாங்கம், கடும் சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிட்டது. அந்த அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய, கடுஞ்சூழலுக்குள் சிக்கிய…
13 04 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 104) 1983 ‘கறுப்பு ஜூலை’: புலியும் பலிகடாவும் நரசிம்ம ராவ் இலங்கைக்கு வந்த 29 ஆம் திகதி, முன்னைய நாட்களோடு ஒப்பிடுகையில், கொழும்பில் வன்முறைகள் பெருமளவில் அடங்கியிருந்தன. ஆனால், பெட்டா (புறக்கோட்டை) பகுதியில், மீண்டும் ஒரு வன்முறைச் சம்பவம் நடக்கக் காத்திருந்தது. இலங்கையின் வர்த்தகத்தின் மையம் கொழும்பென்றால், கொழும்பின் வர்த்தக மையம் புறக்கோட்டை. வணிக, வர்த்தக நிலையங்கள் செறிந்த பகுதி; பொன் கொழிக்கும் மையம். 1983 ஜூலைக்கு முன்பு, புறக்கோட்டையில் தமிழ் வர்த்தகர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். குறிப்பாகத் தங்க நகைகள், மொத்த விற்பனை, ஆடையகங்கள் எனச் சகல வர்த்தகத் துறைகளிலும் தமிழ் வர்த்தகர்கள் கோலோச்சிய காலம் அது. இந்த நிலையில்தான், 1983 ஜூலை 25 ஆம் திகதி, பெட்டா, இன அழிப்புக்…