Easy Facebook Share Button

18 04 2015

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி 

நாம் அன்­றாடம் சமை­யலில் பாவிக்கும் பொருட்­களில் கொத்­த­மல்­லியும் ஒன்­றாகும். உண­வுக்கு மட்­டு­மல்ல நோய்க்கு மருந்­தா­கவும் இது விளங்­கு­கி­றது. கொத்­த­மல்லி விதை­யையும் கொத்­த­மல்லி இலை­யையும் பசை­யாக அரைத்து எடுத்து மேல்­பூச்­சாக பூசும் போது தோல் நோய்க்கு சிறந்த மருந்­தாக விளங்­கு­கின்­றது. தோல் சுருக்­கத்தை நீக்கி பள­ப­ளப்­பாக்­கின்­றது. கண்­களில் ஏற்­படும் இரத்த அழுத்­தத்தை குறைக்கக் கூடி­யது. கரு­வ­ளையம் சுருக்­கங்­க­ளுக்கு கண் வட்­டத்­திற்கு கீழே பூசி சிறிது நேரத்தின் பின் கழு­வினால் நல்­லது . வயிற்­று­வலி அஜீ­ர­ணத்தை குறைக்கும். ஈர­லுக்கு பலத்தை தரும். சிறி­யவர் முதல் பெரி­யவர் வரை பயன்­ப­டுத்­தலாம். சீனாவில் அம்மை வருத்­தத்­திற்கு கொத்­த­மல்லி இலையை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள்.

 கொத்­த­மல்லி தேநீர்

ஒரு பாத்­தி­ரத்தில் ஒரு லீற்றர் தண்­ணீரைக் கொதிக்க வைத்து ஒரு கைப்­பிடி கொத்­த­மல்லி இலையைப் போட்டு சுக்கு ஒரு தேக்­க­ரண்டி சுவைக்கு வெல்லம் போட்டு கொதிக்க வைத்து வடி­கட்டி காலை மாலை சூடாகப் பரு­கவும். வயிற்­றி­லுள்ள புண்­களை ஆற்றும். இரத்­தத்­தி­லுள்ள விஷத்­தன்­மையை போக்கக் கூடி­யது. சிறு­நீர்ப்­பி­ரச்சினைக்கும் இது நல்ல மருந்­தாக அமை­கின்­றது. உள்­ளத்­திற்கு இத­மான பான­மாக அமை­கின்­றது. கோப்பி தேநீ­ருக்குப் பதி­லாக பாவிக்­கலாம். குடற் புண்­களை ஆற்­றக்­கூ­டி­யது. பசி­யின்­மையை போக்கக் கூடி­யது. பித்த நிலையை சமப்­ப­டுத்தக் கூடி­யது.

கொத்­த­மல்லி விதை­யையும் சுக்­கையும் நீரில் போட்டு கொதிக்க விடவும். சுவைக்கு சீனி சேர்த்து பரு­கலாம். பால் சேர்த்தால் திரிந்து விடும். சிறுநீர் வெளி­யே­றாத போது கைகளில் வீக்கம் கால்­களில் வீக்கம் ஏற்­படும் போது சிறு­நீரை வெளியேற்றக்­கூடி­யது . ஏப்பம் அடிக்­கடி வரு­ப­வர்­க­ளிற்கு கொத்­த­மல்லி ஒரு அரு­ம­ருந்­தா­கின்­றது. உற்­சா­கத்தை தரக் கூடி­யது. கரு­வுற்ற பெண்­க­ளிற்கு கொத்­த­மல்­லி­யுடன் பெருஞ்­சீ­ரகம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பனை­வெல்லம் சேர்த்து கொடுத்தால் கை கால்­களில் வீக்கம், இரத்த அழுத்தம் ,நீரி­ழிவு நோய் உடலில் ஏற்­ப­டு­கின்ற நீரேற்றம் என்­பவை குறையக் கூடிய நிலை ஏற்­படும். இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர் எரிச்சல் இரண்­டிற்கும் பனை­வெல்­லத்­துடன் கூடிய தேநீர் சிறந்­தது. இரத்தம் கலந்து வரு­வது நின்று விடும். கொத்­த­மல்­லியை பொடி­யாக்கி பன்­னீ­ருடன் கலந்து பூசும் போது முகச்­சு­ருக்கம் போகும். கொத்­த­மல்லி சுக்கு கோப்பி

கொத்­த­மல்லி சுக்கு கோப்பி

ஒரு­பாத்­தி­மொன்றை அடுப்பில் வைத்து அதில் கொத்­த­மல்லி விதையைப் போட்டு நன்­றாக வறுக்­கவும். கருக விடக்­கூ­டாது. பொன்­னிற­மாக வரும். கைக­ளினால் அழுத்திப் பார்த்தால் வறுத்த விதை உடையும். அது தான் பதம். பின்பு சுக்­கையும் தனி­யாக வறுத்து எடுக்­கவும். மிளகு, சீர­கமும் வறுத்துப் போடவும். எல்­லா­வற்­றையும் சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்து எடுக்­கலாம் அல்­லது வீட்­டிலே மின் அரை­வையில் அரைத்து எடுத்து அரித்து எடுத்து தேநீர் போல் செய்து குடிக்­கலாம் நல்ல பலனைப் பெறலாம் எமது மூதாதையர்கள் இவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாகவும். நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள். நாம் அதை மறந்து விட்ட காரணத்தினாலே ஆரோக்கியமற்றவர்களாகவும் நோய் நொடியினாலும் கஷ்டப்படுகின்றோம்.

virakesari.lk  06 04 2014