28 04 2014
வெந்நீரின் மகிமை
தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெந்நீரில் உள்ள பயன்கனை அறிந்திருக்கின்றோமா?
1. அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புப்பண்டங்கள் உண்ட பின் சிலருக்கு ஒருவாறு நெஞ்சு எரிச்சல் இருந்தக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் வெந்நீரை பருகினால் நெஞ்சு எரிச்சல் போய்விடுவதோடு மற்றும் உணவும் செரித்துவிடும்.
2. காலையிலேயே வெந்நீர் அருந்தினால் மலப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.
3. வெந்நீர் குடித்தால் உடலில் போடும் அதிகப்படி சதை குறைக்கலாம்.
4. உணவு உண்ட பின்பு வெந்நீரை பருகினால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல் கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உண்டு.
5. பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள் வாரத்திற்கு ஒரு முறையேனும் தங்களின் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி கைகள் சுத்தமானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
6. உடம்பு அசதியாகவுள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்தால் நன்றாகத் தூக்கம் வருவதோடு வலியும் பறந்துவிடும்
7. வெளியில் சென்று அலைந்துவிட்டு வருபவர்கள் வெந்நீரில் உப்புக்கற்கள் சிறிதளவு இட்டு அதில் சிறிது நேரம் பாதத்தை வைத்து எடுத்தால் கால் வலி குறைவதோடு கால்களில் உள்ள அழுக்கு நீங்கி பாதமும் சுத்தமாகிவிடும்.
8. மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் முகத்தைக் காண்பித்தால் மூக்கடைப்பு குணமாகும்.
9. வெயிலில் அலைந்து விட்டு வருபவர்கள் குளிர்ந்த நீரை குடிப்பதை விட சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது தாகம் தீர்க்கும் நல்ல வழியாகும்.
10. ஆஸ்துமா போன்ற நோய் இருப்போர் தங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடித்து வர வேண்டும் மற்றும் தடிமன், காய்ச்சல் இருப்பவர்கள் வெந்நீர் குடித்து வந்தால் இதமாக இருப்பதோடு விரைவில் குணமாகி விடும்.
virakesari,lk 09 01 2014