Easy Facebook Share Button

10 03 2016

உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தடுக்கும் எளிய வழிமுறைகள்
பலருக்கும் எந்த எண்ணெய் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இவற்றை எல்லாம் விட, ஒலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்டரோல் தான். கெட்ட கொலஸ்டரோல் , இரத்தத்தில் சேரும்போது, இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. நம்மில்பல பேருக்கு எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே.

இதோ சில வழிகள்:
* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொரிக்கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம். தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.
* ஒரு முறை பாவித்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.
* பிளாஸ்டிக் போத்தலில் எண்ணெய்யை ஊற்றி சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.