அதிகளவான சீனியால் மூளைக்குப் பாதிப்பு
அதிகளவில் சீனியை உபயோகிப்பது மனஅழுத்தம் மற்றும் துஷ்பிரயோகங்களால் ஏற்படுவதையொத்த பாதிப்பை மூளைக்கு ஏற்படுத்துவதாக அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சீனி மனிதர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதியை பாதிப்பதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சீனியானது பழப்பானங்கள் மற்றும் தேன் என்பவற்றில் இயற்கையாக காணப்படுகின்ற நிலையில் மனிதர்களின் தினசரி சக்தி உள்ளீடுகளில் சீனியிலிருந்து பெறப்படும் சக்தி 10 சதவீதத்துக்கும் மேற்படாது இருப்பது அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.
virakesari'lk 18 02 2016