06 05 2015

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

Read more ...
29 04 2015 

சளி இருமலுக்கு இயற்கை மருத்துவம்

மிளகையும் வெல்­லத்­தையும் வெறும் வயிற்றில் உட்­கொண்டால் இருமல், நீர்க்­கோவை ஆகி­யவை குண­மாகும். சீர­கத்­தையும் கற்­கண்­டையும் மென்று தின்றால் இருமல் குண­மாகும். நான்கு மிள­கையும், இரு கிராம்­பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்­றி­லையில் மடித்து மென்று விழுங்­கினால் இருமல் குண­மாகும். நான்கு வால் மிளகைச் சிறி­த­ளவு புழுங்­க­ல­ரி­சி­யுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பரு­கினால் இருமல் குண­மாகும்

தூய்­மை­யான அரு­கம்­புல்லை எடுத்து நன்­றாக மென்று பற்­களில் வலி­யுள்ள பகு­தியில் ஒதுக்­கினால் பல்­வலி உடனே குண­மாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழு­வதும் தட­வ ­வேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக் ­கொப்­பளித்தால் பற்­களில் உள்ள கிரு­மிகள் அழியும். தேங்காய் எண்­ணெயை நாள்­தோறும் பல­முறை உதட்டில் தட­வினால் உதடு வெடிப்பு, உதட்டு புண், தோல் உரிதல் ஆகி­யன குண­மாகும்.

Read more ...
18 04 2015

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி 

நாம் அன்­றாடம் சமை­யலில் பாவிக்கும் பொருட்­களில் கொத்­த­மல்­லியும் ஒன்­றாகும். உண­வுக்கு மட்­டு­மல்ல நோய்க்கு மருந்­தா­கவும் இது விளங்­கு­கி­றது. கொத்­த­மல்லி விதை­யையும் கொத்­த­மல்லி இலை­யையும் பசை­யாக அரைத்து எடுத்து மேல்­பூச்­சாக பூசும் போது தோல் நோய்க்கு சிறந்த மருந்­தாக விளங்­கு­கின்­றது. தோல் சுருக்­கத்தை நீக்கி பள­ப­ளப்­பாக்­கின்­றது. கண்­களில் ஏற்­படும் இரத்த அழுத்­தத்தை குறைக்கக் கூடி­யது. கரு­வ­ளையம் சுருக்­கங்­க­ளுக்கு கண் வட்­டத்­திற்கு கீழே பூசி சிறிது நேரத்தின் பின் கழு­வினால் நல்­லது . வயிற்­று­வலி அஜீ­ர­ணத்தை குறைக்கும். ஈர­லுக்கு பலத்தை தரும். சிறி­யவர் முதல் பெரி­யவர் வரை பயன்­ப­டுத்­தலாம். சீனாவில் அம்மை வருத்­தத்­திற்கு கொத்­த­மல்லி இலையை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள்.

Read more ...
10 04 2015

புற்றுநோயை வராமல் தடுக்கும் பூண்டு

பூண்டு என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது, இதயம் காக்கும், கொழுப்பைக் கரைக்கும் சிறந்த உணவுப் பொருள் என்பதுதான். பூண்டுக்கு இந்தச் சிறப்பு மட்டுமல்ல, மேலும் ஏராளமான மருத்துவக் குணங்கள் பூண்டுடில் உள்ளது.

வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

Read more ...
20 01 2015

எப்­போ­துமே ஆரோக்­கி­யமாக இருக்க வேண்­டுமா? இதோ தண்ணீர் மருத்­துவம்

இத்­த­கைய தண்­ணீரை வெறும் வயிற்றில் நாம் தினமும் குடித்து வரு­வதால் நம்மை தாக்கும் பல நோய்­களில் இருந்து விடு­ப­டலாம். இதற்கு பெயர் தண்ணீர் தெரபி. இதை கடை­பி­டிக்கும் ஜப்­பா­னிய மக்கள் எப்­போதும் சுறு­சு­றுப்­புடன் ஆரோக்­கி­ய­மாக இருக்­கின்­றனர். இதை பற்­றிய நன்­மை­களை தெரிந்து கொள்­ளலாம்.

செரி­மா­னத்­திற்கு உதவும்

காலையில் வெறும் வயிற்றில் வெது­வெ­துப்­பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்­ட­பாலிக் விகி­த­மா­னது 24 சத­வீதம் அதி­க­ரிக்கும். இதனால் உண்ணும் உண­வா­னது விரைவில் செரி­மா­ன­ம­டைந்­து­விடும்.

Read more ...
01 07 2014

நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா

கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. கொய்யா முக்­க­னி­யான மா, பலா, வாழை இவற்­றிற்கு இணை­யாக வர்­ணிக்­கப்­படும் பழ­மாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் இது.

கொய்யா கோடைக்­கா­லங்­களில் தான் அப­ரி­மி­த­மாக விளையும். தற்­போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழு­வதும் உற்­பத்தி செய்­யப்­பட்டு விற்­ப­னைக்கு வரு­கி­றது. கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் உள்­ளன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி ரோஸ் நிறத்தில் காணப்­படும். இவை அனைத்தின் மருத்­துவப் பயனும் ஒன்­றுதான். கொய்­யாக்­க­னியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்­மி­ய­மாக இருக்கும். இதில் அதி­க­ளவு விட்­டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்­துள்­ளன. குறிப்­பாக நெல்­லிக்­க­னிக்கு அடுத்த நிலையில் விட்­டமின் சி சத்து கொண்ட பழம் கொய்­யாதான்.

Read more ...