25 08 2018

கீரைகளின் மருத்துவப் பயன்கள்

கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகளின் பயன்களைக் காண்போம்.

அரைக்கீரை...

இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்.இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு குறையும்.இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உண வோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக் கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும். இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.

Read more ...

10 08 2018

புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன் படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

Read more ...

18 10 2016

கத்த­ரிக்காய் சாப்­பி­டு­வதால் ஏன் அலர்ஜி ஏற்­ப­டு­கி­றது?

புகழ்­பெற்ற காய்­கறி வகை­களில் ஒன்­றான கத்­த­ரிக்காய், சைவப் பிரி­யர்­க­ளுக்கு மிகவும் அரு­மை­யான சுவை­யுள்ள உண­வாகும். பிஞ்சுக் கத்­த­ரிக்­காயை நல்­லெண்­ணெ­யுடன் சேர்த்து செய்யும் சமை­ய­லா­னது ஆஹா! மிகவும் அற்­பு­த­மாக இருக்கும்.  கத்­த­ரிக்­காயில் அதிக நீர்ச்­சத்து, இரும்­புச்­சத்து, புரதம், நார்ச்­சத்து, கார்­போ­ஹை­தரேட், பாஸ்­பரஸ், கல்­சியம், விற்ற­மின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்­ப­டு­கின்­றன.இந்த கத்­த­ரிக்காய் வெள்ளை, ஊதா மற்றும் கறுப்பு போன்ற நிறங்­களில் காணப்­ப­டு­கின்­றது.கத்­த­ரிக்காய் சாப்­பி­டு­ப­வர்­களின், உடம்பின் தன்­மையை பொறுத்து, சில­ருக்கு ஒத்துக் கொள்­ளாமல், உடம்பில் அலர்­ஜியை ஏற்­ப­டுத்தி பெரிய பாதிப்­பு­க­ளாக மாற்­றி­வி­டு­கி­றது.

Read more ...
04 10 2016

ஓஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்பு புரை நோயை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி?

தற்காலத்தில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர். இதனை தடுக்க இயலாதா? என்று ஒரு பிரிவினரும், இதனை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி? என்று மற்றொரு பிரிவினரும் கேட்பார்கள்.
எலும்புக்கு வலுவூட்டுவது கல்சியம் என்னும் தாதுசத்து. இந்த சத்தை நாம் எம்முடைய உடலில் குறையாமல் பார்த்துக்கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. அலட்சியப்படுத்தினால் உடலில் கல்சியத்தின் அளவு குறைந்து எலும்பின் வலு குறையும். இதனால் எலும்பு முறிவு கூட ஏற்பட வாய்ப்புண்டு.

Read more ...
22 09 2016

கொலஸ்ட்ரோல் என்­றதும் அச்சம் வேண்டாம்

மார­டைப்பு ஸ்ரோக் முத­லான உயிர்க்­கொல்லி நோய்கள் பற்றி உரை­யா­டும்­போ­தெல்லாம் கொலஸ்ட்ரோல் பற்­றிய அச்சம் இன்­று­ ப­ல­ரிடம் பர­வ­லாக இருப்­பதை காண்­கிறோம்.இதனால் கொழுப்பு உண­வுகள் எல்­லா­வற்­றையும் கட்­டுப்­ப­டுத்த ஆரம்­பிக்­கிறோம். முட்டை, பால் ,இறைச்சி உள்­ளிட்ட பல உண­வு­களை தவிர்க்­கின்றோம்.இதனால் எமக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாக தேவைப்­படும் புரதம் மற்றும் நுண்­போ­ச­னை­களை இழந்­து­வி­டு­கிறோம் என்­பதை பற்றி சிந்­திக்க மறந்து விடு­கிறோம்.உல­க­ம­ய­மா­த­லுடன் ஏற்­பட்ட சில தப்­பான புரி­தல்­களே இதற்கு கார­ண­மாக இருக்­கி­றது.சுகா­தார கல்வி அறி­வூட்­டலின் தவ­றான விளை­வு­களும் கூட இதற்­கான காரணம் எனலாம்

Read more ...
15 09 2016

தும்மலின் தூரம்

எம்மில் பலரும் ஒரு அசௌகரியமான சூழலில் ஆரோக்கிய ரீதியாக தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதபோது அதன் பல வெளிப்பாடுகளில் முதன்மையானது தும்மல். அத்துடன் தும்மும் போது அதன் வேகம் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் ஒரு தும்மல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பது குறித்து தெரியாது. ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தும்மலின் தூரத்தை நவீன கமெரா மூலம் படமாக்கி, ஒரு தும்மல் 25 அடி தொலைவு வரை பயணிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

Read more ...
08 09 2016

வாழைப்பழம் இரவு உணவுக்கு பின் சாப்பிடுவது நல்லதா?

இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.

Read more ...
01 09 2016

சிறுநீரக செயலிழப்பை எற்படுத்தும் இறைச்சி.!

உலகம் முழுவதும் இன்று 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுநீரக செயலிழப்பிற்கு ஆளானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரெட் மீட் என்றழைக்கப்படும் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை முழுவதுமாகவும், முறையாகவும் பதப்படுத்தாமல் சாப்பிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Read more ...
25 08 2016

குழந்தைகளுக்கு 9 மணிநேர தூக்கம் அவசியம்.!

இன்றைய காலங்களில் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் பால்ய காலத்தில் சரியாக உறங்காததே காரணம் என்று அண்மையில் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்த்த ஓஹியோ பல்கலைகழக விஞ்ஞானிகள்.

Read more ...
18 08 2016

குறட்டையை தடுக்கும் நவீன கருவி

தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். இதெல்லாம் சரி தூங்கும் போது பக்கத்தில் உறங்கியிருப்பவர் குறட்டை விட்டால் மற்றவர்கள் எப்படி தூங்குவது? என்று கேட்கிறீர்களா..?

Read more ...
11 08 2016

மூக்கடைப்பிற்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமா..?

மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பலன் தரும் என்று தான் இது வரை கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் நாள்பட்ட மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை மட்டுமே தொடர்வது முழு பலனைத்தராது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் நாள்பட்ட மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையுடன் வேறுசில சிகிச்சைகளையும் இணைத்து கூட்டு சிகிச்சையாக அளிக்கும் போது தான் பலன் கிடைக்கும் என்றும், ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடர்ந்தால் மூக்கடைப்பு குணம் ஆகாதது மட்டுமில்லாமல் வேறு சில பக்க விளைவுகளையும் ஒரு சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Read more ...